இந்தியாவில் TATA குழுமத்தின் Trent Ltd உடன் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதாக MAS அறிவிப்பு

Share

Share

Share

Share

MAS Holdings இன் துணை நிறுவனமான MAS Amity Pte Ltd, Tata குழுமத்தின் Trent Ltd உடன் கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உள்ளாடைகள் மற்றும் ஏனைய ஆடை தொடர்பான தயாரிப்புகளில் வணிகத்தின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்காக இந்தியாவில் ஒரு நிறுவனத்தை நிறுவியது.
காலப்போக்கில், MAS மற்றும் Trent ஆகியவை தங்கள் தள நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து பலவிதமான உள்ளாடைகள் மற்றும் ஏனைய ஆடை தயாரிப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியை மேற்கொள்ளும். முதலில், இந்த கூட்டு முயற்சியானது தொடர்புடைய தயாரிப்புகளின் வடிவமைப்பு மற்றும் ஆதாரங்களை எளிதாக்கும்.
MAS Holdings (Pvt) Ltd இன் தலைவர் தேசமான்ய மகேஷ் அமலன் கூறுகையில், “Tata உடனான எங்கள் கூட்டு முயற்சியின் முக்கியத்துவம், நமது மதிப்பு மற்றும் மகத்தான வணிக வாய்ப்புகளுக்கான பாராட்டையும் இந்திய சந்தை வழங்குகிறது. இந்த கூட்டு ஒப்பந்த முயற்சியானது, தயாரிப்பு உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் MAS இன் நிபுணத்துவத்தை இந்திய வர்த்தகத்தில் Tata Trent இன் நிபுணத்துவத்துடன் இணைக்கும் வகையில், நமது ஒருங்கிணைந்த திறன்களைப் பயன்படுத்த உதவும். இந்த கூட்டு முயற்சி வணிகத்தை அளவிடுவதற்கும் இந்தியாவில் எங்கள் இருப்பை மேம்படுத்துவதற்கும் MAS இன் நீண்ட கால நோக்கத்துடன் மேலும் ஒத்துப்போகிறது.”
Trent Limited தலைவர் Noel N Tata கூறுகையில், “உள்ளாடைகள், ஏனைய ஆடைகள் மற்றும் தொடர்புடைய ஆடை வகைகளில் வேறுபட்ட கருத்தை உருவாக்க எங்கள் வர்த்தக நாமங்களின் வளர்ந்து வரும் வரம்பை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம். MAS இந்த இடத்தில் உயர்தர தயாரிப்புகளை தயாரிப்பதில் சொல்ல முடியாத அளவுக்கு திறன்களையும் சாதனைகளையும் கொண்டு வருகிறது. Trent மற்றும் MAS இடையேயான இந்த கூட்டு முயற்சி, அதன் சிறு விற்பனைக் கடைகளில் முழுமையாகச் சொந்தமான பிராண்டுகளை வழங்குவதற்கான Trentஇன் மூலோபாய உறுதிப்பாட்டை ஆழமாக்கும் மற்றும் MAS அவர்களின் சர்வதேச இருப்பை மேலும் விரிவுபடுத்த உதவும். எங்கள் கூட்டுமுயற்சி ஒருங்கிணைப்புகளை மேம்படுத்தி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
MAS Holdings தொடர்பாக
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS குழுமம், ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு-விநியோகஸ்தர் ஆகும். இதில் 118,000 பேர் பணியாற்றுகின்றனர். இன்று, MAS தனது தயாரிப்புகளை 17 நாடுகளில் முன்னணி நவநாகரீக இடங்களில் அமைந்துள்ள உற்பத்தி வசதிகள் மூலம் உற்பத்தி செய்கிறது. MAS இன் வர்த்தக நாமங்கள், தொழில்நுட்பம், FemTech, Start-ups மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆடை பேட்டைகள் எப்போதும் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்ய வேகமாக விரிவடைந்துள்ளன.
30 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாடுகளில், MAS ஆனது அதன் நெறிமுறை மற்றும் நிலையான பணிச்சூழலுக்காகவும், சமூக மேம்பாடு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நிறுவனத்தின் அயராத முயற்சிகளுக்காகவும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இன்று, மாற்றத்திற்கான MAS திட்டம், மூன்று தூண்களின் கீழ் நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறது; பொருட்கள் (உற்த்தி), உயிர்கள் மற்றும் புவி ஆகியனவாகும். இதன் மூலம், MAS அதன் அனைத்து ஊழியர்களையும் மாற்றங்களை உருவாக்குபவர்களாக இருக்க ஊக்குவிக்கிறது, கனவுகளை நனவாக்குகிறது மற்றும் நமது பூமியில் வாழ்க்கையின் கட்டமைப்பை வளப்படுத்துகிறது.

Trent தொடர்பில்
Trent Limited Tata குழுமத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் சிறு விற்பனை எண்ணக்கருக்களின் போர்ட்ஃபோலியோவை இயக்குகிறது. Trentஇன் முதன்மை வாடிக்கையாளர் முன்மொழிவுகளில் பின்வருவன அடங்கும்: இந்தியாவின் முன்னணி நவநாகரீக Retail Storesகளில் ஒன்றான Westside, Zudio, அதிக மதிப்புள்ள சிறந்த நவநாகரீகத்துக்கான ஒரு நிறுத்தல் இலக்கு மற்றும் Star Bannerஇன் கீழ் போட்டி உணவு, மலிவு விலை மற்றும் தினசரி தேவைகள் பிரிவில் Trent Hypermarket செயற்படுகிறது.
Westside Stores 127 நகரங்களில் 18,000-34,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. ஆடைகள், பாதணிகள், அணிகலன்கள் முதல் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் வரை வீட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வரையிலான பரந்த அளவிலான தயாரிப்புகளை Westside கொண்டுள்ளது. ஒவ்வொரு Westside Storeம் சர்வதேச ஷாப்பிங் சூழல், மலிவு விலையில் சிறந்த பொருட்கள் மற்றும் சிறந்த சேவையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Zudio, சிறந்த நவநாகரீக வடிவமைப்பு இலக்கானது, சுமார் 7,000-10,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட கடைகளுடன் இயங்குகிறது Zudio கடைகள் வாடிக்கையாளர்களின் பல்வேறு ஷாப்பிங் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல தயாரிப்பு வகைகளை வழங்குகின்றன. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பாதணிகள் அடங்கும்.

Pedro Estateஇல் அமைச்சர் தொண்டமானின் அத்துமீறல்...
වටවල වැවිලි පීඑල්සී නව සභාපති...
TikTok යාවත්කාලීන කරන ලද ප්‍රජා...
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை...
CIC Holdings 2024 මූල්‍ය වර්ෂය...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
உலகளாவிய பெருந்தோட்டத் தொழிலில் உலக முதல்வரான...