இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வர்த்தக நாமமான நவலோக்க மருத்துவமனை, 2023/24 நிதியாண்டில் சிறப்பான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Share

Share

Share

Share

இலங்கையில் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சுகாதார சேவை வழங்குநரும், நாட்டின் முன்னணி சுகாதாரப் பாதுகாப்பு வர்த்தக நாமமும் கொண்ட நவலோக்க மருத்துவமனை குழுமம், 2023/24 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. அதன் காரணமாக, நவலோக்க மருத்துவமனை குழுமத்தால் மீள்தன்மை மற்றும் செயற்பாட்டுச் சிறப்பிற்கான குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த முடிந்தது.

அதன்படி, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில், நவலோக்க மருத்துவமனை குழுமம் 347.8 மில்லியன் ரூபா வரிக்குப் பின்னரான ஒருங்கிணைக்கப்பட்ட நிகர இலாபத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 114.26% வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி திறமையான சேவை மற்றும் சிறந்த நோயாளர் பராமரிப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

சவாலான பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில், தனது வணிக மாதிரியின் வலிமை மற்றும் சூழலுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிக்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்தி, கடந்த நிதியாண்டில் தனது வருமானத்தை 10,648 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடிந்தது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.43% வளர்ச்சியை எட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் திரு. தேஷ்மான்ய கலாநிதி ஜயந்த தர்மதாச, “இந்த குறிப்பிடத்தக்க இலாப அதிகரிப்புடன், நவலோக்க மருத்துவமனைகள் குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முழு குழுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் விளைவுகளை நாம் காணலாம். பணியாளர்கள் எப்பொழுதும் மூலோபாய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, செயல்திறன் மற்றும் விதிவிலக்கான நோயாளி பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றனர்.” என தெரிவித்தார்.

நவலோக்க மருத்துவமனை குழுமம் தம்மிடம் வரும் நோயாளர்களுக்கு மிகவும் வசதியான அனுபவத்தை வழங்கும் வகையில் சுகாதாரம் தொடர்பான பல புதிய வாய்ப்புகள் மற்றும் புத்தாக்கமான சேவைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இருதய மற்றும் சிறுநீரக நோய்களுக்கான சிறப்பு மருத்துவ மனைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சமீபத்திய இதயம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் போன்ற பல சேவைகளை உள்ளடக்கியது. இது தவிர, நவ்லோக்க மருத்துவமனை, அந்தச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் நிபுணர் ஆலோசனைக் குழுக்களை அதிகரிப்பதற்கும் பணியாற்றியுள்ளது மற்றும் மருத்துவ நிபுணத்துவத்துடன் இணைந்து நவீன சுகாதார சேவைகளை வழங்கும் வசதியை அடைந்துள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி தர்மதாச, “இந்த நேர்மறையான செயல்திறன் நவலோக்க மருத்துவமனைக்கு இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனராக அதன் நிறுவப்பட்ட சிறப்பை மேலும் மேம்படுத்த உதவும். நாட்டின் எதிர்கால சுகாதாரப் பாதுகாப்பிற்கான வெற்றிகரமான பயணத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என அவர் சுட்டிக்காட்டினார்.

 

Galaxy வரிசையில் முன்னணி அம்சங்களுடன் புதிய...
TikTok දරුවන්-දෙමව්පියන් අතර සබඳතාව සහ...
இந்த பண்டிகைக் காலத்தில் தனது கார்ட்...
Health is Wealth: A Call...
MAS Celebrates Student-Led Sustainability at...
அடிப்படை வங்கி அமைப்பின் நவீனமயமாக்கலுக்காக Kiya.ai...
Eco Go Beyond Awardsஇல் மாணவர்களின்...
MAS, 2024 Eco Go Beyond...
அடிப்படை வங்கி அமைப்பின் நவீனமயமாக்கலுக்காக Kiya.ai...
Eco Go Beyond Awardsஇல் மாணவர்களின்...
MAS, 2024 Eco Go Beyond...
Sampath Bank Partners with COYLE...