இலங்கையின் Audio துறையில் Digital Ear ஆனது தனது ஒரு தசாப்தகால வளர்ச்சியினைக் கொண்டாடுகின்றது

Share

Share

Share

Share

கொழும்பு, 22.10.2023: இலங்கையில் உயர்தர Audio தீர்வுகள் மற்றும் உயர்மதிப்பு வாழ்க்கை முறை தயாரிப்புகளில் பிரசித்திபெற்ற விநியோகஸ்தரான Digital Ear ஆனது அண்மையில் தனது பத்தாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது.

கொழும்பின் பிரபல பகட்டு உணவகங்கள் மற்றும் மதுஅருந்தகங்களில் ஒன்றான Verticle by Jetwingஇல் இடம்பெற்ற இம் மைல்கல் நிகழ்வின்போது, Digital Ear ஆனது Void Acoustics இனைப் பயன்படுத்துவதன் மூலம் சர்வதேச விநியோகஸ்தர்களை மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்கள் உட்பட 150 இக்கும் மேற்பட்ட மதிப்பிற்குரிய விருந்தினர்களினை ஒன்றிணைத்தது. இந்நிகழ்வினில் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவுச் சின்னமானது இம்மாதம் 22ம் தகதியன்று வெளியிடப்பட்டது. மேலும் அதன் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

Digital Ear இன் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான Haren Perera அவர்கள் இம் மைல்கல் நிகழ்வினைப் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்: “இலங்கையில் Audio ஆனது சிறந்து விளங்கும் ஒரு தசாப்தத்தினை நினைவுகூருவதானது எனக்கு பெரு மகிழ்ச்சியினை அளிக்கின்றது. கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்பு, எமது நாட்டிலே மிக உயர்ந்த தரமான Audio தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு தொலைநோக்குப் பயணத்தினை நாம் ஆரம்பித்தோம். ஆனால் இன்றோ, எமது நிறுவனமானது பூரணத்துவமான Audio தொடர்பாக எமது இடையறாத முயற்சிக்கு ஒரு தக்க சான்றாக உயர்ந்து நிற்கின்றது. உள்ளூர் Audio துறையின் மதிப்பினை அதிகரிப்பதன் மூலம், Audio பொறியியலின் எல்லைகளைக் கடந்து ஏராளமான தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் எமது உலகத் தரம் வாய்ந்த Digital சாதனங்களின் மூலம் யாவரும் ஒலியில் புதிய பரிமாணங்களை அனுபவிக்க உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம்.”

Haren Perera அவர்கள் தொடர்ந்தும் கூறுகையில், “எமது Brand கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எமது விசுவாசமான வாடிக்கையாளர்கள், எமது ஆதரவின் தூண்களாகத் திகழும் எமது விநியோகஸ்தர்களை மற்றும் அயராது கடமையாற்றும் எமது தனிச்சிறப்புவாய்ந்த நிறுவன அணியினர் இன்றி நிச்சயமாக இச்சிறப்பு வாய்ந்த பயணமானது வெற்றி அடைந்திருக்காது. இன் நம்பமுடியா மைல்கல் நிகழ்வினை நாம் கொண்டாடும் இத்தருணத்தில், ஒலியின் ஆற்றலினை இலங்கை வாழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான எமது தசாப்தகால தேடலில் இன்றியமையாத பங்களிப்பிற்காக எமது பங்குதாரர்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.”

Digital Ear ஆனது குடியிருப்பு சார்ந்த மற்றும் வர்த்தக வளாகங்களுக்கு அதிநவீன ஆடியோ தீர்வுகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றதாகும் . Void, Synergistic Research, NAD மற்றும் பலவற்றை உள்ளடக்கிய Audio துறையில் உலகின் மிகவும் பிரபலமான 20 Brand களை எம் நிறுவனமானது பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. Audio நிபுணத்துவத்துடன் கூட Digital Ear ஆனது உயர்மதிப்பு மிக்க Lifestyle தயாரிப்புகளின் தேர்வுகளினையும் வழங்குகின்றது. மேம்பட்ட Smart Locks மற்றும் வீட்டு Automation தீர்வுகள் முதல் Gaming Table கள் மற்றும் Bespoke Bar கள் போன்ற ஆடம்பரமான Mancave அத்தியாவசியங்கள் என்று எம் நிறுவனமானது பல்வேறு வகையான தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது.

Digital Ear ஆனது மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க திட்டங்களில் Nelum Pokuna, Stein Studios மற்றும் Jetwing Hotels என்பவையும் உள்ளடங்கும். ஒரு தசாப்த கால அனுபவம் மற்றும் தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான உறுதியான அர்ப்பணிப்பு போன்றவற்றினைத் தொடர்ந்தும் வழங்குவதோடு, எம் நிறுவனமானது தனது தயாரிப்பு வழங்கல்களை விரிவுபடுத்தவும், உள்ளூர் மற்றும் சர்வதேச திட்டங்களில் ஒத்துழைப்பினை நல்கவும் மற்றும் உலகின் மிகச்சிறந்த வாடிக்கையாளர்களுக்கு Audio தீர்வுகள் மற்றும் உயர்மதிப்பு வாழ்க்கை முறை தயாரிப்புகள் போன்ற சேவைகளைத் தொடர்ந்தும் வழங்கவும் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

Digital Ear தொடர்பாக மேலதிக தகவலுக்கு https://www.digitalearsl.com/ இனைப், பார்வையிடவும்.

 

HNB, එතෙර කාසියෙන් රට බබලන්නට...
මෙරට වාරි ප්‍රතිසංස්කරණ ඉතිහාසයේ සුවිශේෂී...
இலங்கையின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கும் TikTok
MCA- C பிரிவு NDB கிண்ண...
ඔස්ට්‍රේලියානු රජයේ ජාතික සැලසුම් හේතුවෙන්...
Kaspersky expands Global Transparency Initiative...
Planters’ Association of Ceylon welcomes...
Navigating new EU sustainability and...
Kaspersky expands Global Transparency Initiative...
Planters’ Association of Ceylon welcomes...
Navigating new EU sustainability and...
ශ්‍රී ලංකාවේ අභිනව නායකත්වයට සුබ...