இலங்கை தேசிய வைத்தியசாலையின் கார்டியோலஜி பிரிவுக்கு VDI Mini கணினிகளை அன்பளிப்பு செய்யும் HNB

Share

Share

Share

Share

இலங்கையின் மிகவும் டிஜிட்டல் மயமான வங்கியான HNB PLC, இலங்கை தேசிய வைத்தியசாலையின் (NHSL) இதயநோய் பிரிவுக்கு ஏழு VDI Mini கணினிகளை நன்கொடையாக வழங்கியதன் மூலம் அதன் முதன்மை முன்முயற்சி திட்டமான ‘உங்களுக்காகவே நாம்i’ திட்டத்தின் ஊடாக தேசிய சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கோவிட் தொற்றுநோயின் ஆரம் காலத்தில் இருந்து சுகாதாரப் பாதுகாப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறைக்கு பொருட்கள் மற்றும் அதற்குத் தேவையான இயந்திரங்களை வழங்கி உதவுவதற்கான பிரச்சாரங்களை HNB மேற்கொண்டு வருகிறது. HNB Chairperson தலைவி திருமதி அருணி குணதிலக்க மருத்துவமனைக்கு விஜயம் செய்த போது இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு இயந்திரங்களை வழங்கினார்.

இலங்கையில் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கு வங்கியின் ஆதரவு குறித்த கருத்து தெரிவித்த திருமதி குணதிலக்க, “தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து எமது ஆதரவு மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளை அடையாளம் காண அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். எம்மால் முடிந்தவரை அனைத்து நோயாளிகளுக்கும் சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கு சாத்தியமான இடங்களில் கைகொடுக்க நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

“பொது சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது எங்கள் கடமை என்று நாங்கள் நம்புகிறோம், குறிப்பாக பெரும்பாலான விஷயங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றமையால் ஆகும். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு எந்த வகையிலாவது ஒத்துழைப்புக்களை வழங்கும் எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். நோயாளியின் பிரதிபலிப்புகள் மற்றும் மருத்துவமனையின் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சிகளில் NHSL இல் உள்ள Cardiology Unitக்கு ஒத்துழைப்பு வழங்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என திருமதி குணதிலக்க மேலும் தெரிவித்தார்.

மருந்துச் சீட்டு எழுதுவதை தன்னியக்கமாக்குவதன் மூலம் பொது சுகாதாரத்தில் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய இந்த அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படியைக் குறிக்கிறது. NHSL நோயாளி நிர்வகிப்பு அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, நவீன தொழில்நுட்பமானது நோயாளி பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மனிதனுடைய கையால் ஏற்படும் அபாயத்தை வியத்தகு முறையில் குறைக்கிறது.

HNB Sustainability Foundation மற்றும் HNB ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமீபத்திய முயற்சியானது, சுகாதாரத் துறையை மாற்றியமைத்துள்ளது, இலங்கை குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வங்கியின் உந்துதலின் இதுவொரு பகுதியாகும்.

“எங்கள் சுகாதாரத் துறை பல சவால்களை எதிர்கொள்கிறது. கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள கஷ்டங்களிலிருந்து மருத்துவமனைகள் முழுமையாக மீளவில்லை என்பதால், நோயாளிகளுக்கான அத்தியாவசிய சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் நிதியின் முதல் சுற்று அத்தியாவசிய மருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து பொதிகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டது. டிஜிட்டல் துறையில் எங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சுகாதாரத் துறையை ஆதரிப்பதை நாங்கள் இப்போது உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,” என HNB துணைப் பொது முகாமையாளர் – பெண்தகைமை மற்றும் கூட்டாண்மை தகவல் தொடர்பு அதிகாரி எல். சிரந்தி குரே தெரிவித்தார்.

இதேபோல், உங்களுக்காகவே நாம் நிகழ்த்தித் திட்டத்தின் கீழ் ஏனைய சுகாதார முயற்சிகள் குறைந்த வருமானம் கொண்ட புற்றுநோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி உதவியை உள்ளடக்கியது. இத்திட்டத்தில் நோயாளிகளுக்கான மாதாந்த நன்கொடைகள் ஒரு நபருக்கு மாதம் 5000/ ரூபாவிலிருந்து 7500/- ரூபாவாகக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, வங்கி IDH மருத்துவமனைக்கு அத்தியாவசிய மருந்துகளையும், கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு குழந்தைகளின் சிகிச்சைக்காக 100 Spacer Unitகளையும் வழங்கியது. மேலும், Suwa Seriya 1990 ஆம்பியூலன்ஸ் சேவைப் பிரிவிற்கு இரண்டு ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக HNB உறுதியளித்துள்ளது. 1 பில்லியன் ரூபா நிதியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாட்டு நடவடிக்கை தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவச போக்குவரத்தை வழங்குகிறது, இதன் மூலம் தினசரி 1000 பேருக்கு சேவைகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

කොකා-කෝලා, ශ්‍රී ලංකාවේ සෑම විශේෂ...
Sampath Bank Becomes the First...
Fortude partners with Ettos to...
සුව සේවා සඳහා ප්‍රවේශය වැඩිදියුණු...
Galaxy F06 மற்றும் F16 5G...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
Hachajah puts Sri Lanka on...