இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் (The Planters Association of Ceylon) ஐக்கிய தென்னிந்திய பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன விளையாட்டு கழகமும் (United Planters of South India Sports Club) இணைந்து ஈராண்டு விளையாட்டு விழாவை வெற்றிகரமாக நடாத்தினர்

Share

Share

Share

Share

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் (PA)   ஐக்கிய தென்னிந்திய பெருந்தோட்ட  முதலாளிமார் சம்மேளன விளையாட்டு கழகமும் (UPASI SC)  இணைந்து 2023 மார்ச் 23ம் திகதி முதல்  28ம் திகதிவரை ஈராண்டுக்கோர் முறை நடாத்தப்படும் விளையாட்டு விழாவை வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர்.  மூன்று தசாப்தங்களுககும் மேலாக ஈராண்டுக்கோர் முறை நடாத்தப்படும் இவ்விளையாட்டு விழாவில் கிரிக்கட், கோல்ப், (GOLF)   டென்னிஸ், பூப்பந்து (Badminton) மற்றும் பில்லியர்ட்ஸ்/ஸ்னூக்கர் ஆகிய ஐந்து விளையாட்டுகள் உள்ளடங்கியுள்ளள.

UPASI விளையாட்டு கழகத்தின் உயர்மட்ட குழு 2019ல் வருகைதர திட்டமிடப்பட்டிருந்தெனினும் கோவிட் பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பயணத்தடையினால் இவ்விளையாட்டு விழா 2023ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே இவ்விரு சங்கங்களும் மிகவும் எதிர்பார்க்கபட்ட இவ்விளையாட்டு விழாவில் மீண்டும் இணைவதில் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

இலங்கை பெருந்தோட்ட குழு (RPC) கோல்ப் (GOLF) விளையாட்டில் தமது திறமையை வெளிக்காட்டி 20 வருடங்களுக்கு பிறகு விருதை தனதாக்கியது.  இவ்விளையாட்டில் தரிந்து விக்ரமசிங்க மிக திறமையாக விளையாடி ஒட்டுமொத்த அணிக்கான விருதை பெற்று தந்ததுடன் ‘Stable Ford’    விருதையும் வென்றார். அத்துடன் இவ்விளையாட்டு விழாவில் இலங்கை பெருந்தோட்ட குழு கிரிக்கட் மற்றும் பூப்பந்து (Badminton) விளையாட்டுகளிலும் வெற்றி பெற்றது.

கிரிக்கட் விளையாட்டின் சிறப்பு அம்சமாக துடுப்பாட்ட வீரர் சத்துர பண்டார தனது மிக சிறந்த துடுப்பாட்டத்தினால்  சதம் பெற்றதுடன்  ‘சிறந்த துடுப்பாட்ட வீரர்’ ஆட்ட நாயகன் ஆகிய விருதுகளை வென்றார்.

இலங்கை பெருந்தோட்டங்களின் பூப்பந்து (Badminton) குழு ஒற்றையர் பிரிவில் சமித் ஆர்த்தரின் திறமையான ஆட்டத்தால் விருதை வென்றது. மூத்தோருக்கான இரட்டையர் பிரிவில் ரொஹான் வீரக்கோன் மற்றம் லலிந்திர அபேவர்தன   இணைந்து விருதை பெற்றனர். அத்துடன் சமித் ஆர்த்தர் பண்டார வித்தாரண இணைந்து தமது எதிரணியை தோற்கடித்து இரட்டையர் பிரிவிற்கான விருதை பெற்றனர்.

ஈராண்டுக்கோர் முறை நடாத்தப்படும் இவ்விளையாட்டு விழாவில் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன குழு 2023ம் ஆண்டின் ஒட்டு மொத்த சம்பியனாக அறிவிக்கப்பட்டதடன் மூன்று போட்டிகளை வென்றதன் மூலம் ‘மலின் குணதிலக்க’ விருதையும் வென்றது.

இந்த விளையாட்டு நிகழ்வு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA)  மற்றும்   ஐக்கிய தென்னிந்திய பெருந்தோட்ட  முதலாளிமார் சம்மேளனம் என்பவற்றிற்கு இடையான நட்புறவை வெளிப்பத்தகிறது.  இது ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதுடன் இவ்விரு சம்மேளனங்களுக்கிடையில் உறவை மேலும் வலுப்படுத்துகின்றது.

அடுத்த ஈராண்டுக்கான விளையாட்டு விழாவை எதிர்பார்ப்பதுடன் அவ்விழாவிலும் ஐக்கிய தென்னிந்திய பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கான (UPASI SC) தமது பங்களிப்பு தொடரும் என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன (PA)   தலைவர் சேனக்க அலவத்தேகம தெரிவித்தார்.

ரதல்ல கிரிக்கட் மைதானம்; ரோயல் கொழும்பு கோல்ஃப் கழகம், தரவளை கழகம் ஆகியன  இவ்விளையாட்டு விழாவினை ஐந்து நாட்கள் நடாத்த உதவினர்.

Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...