இலங்கை வர்த்தகங்களில் இணையத்தள பாதுகாப்பிற்கு ‘Kaspersky Next’ ஐ அறிமுகப்படுத்தும் Kaspersky

Share

Share

Share

Share

2024, மே 09

Kaspersky இலங்கையில் வணிகங்களின் பாதுகாப்பிற்காக ‘Kaspersky Next’ என்ற தனது புதிய தயாரிப்பு வரிசையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. XDR (Extended Detection and Response) இன் தெளிவு மற்றும் சக்திவாய்ந்த கருவிகள் மற்றும் EDR இன் வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மை (Endpoint Detection and Response) மூலம், வணிகத் தரவுகளுக்கு வலுவான பாதுகாப்பை வழங்க முடியும். அதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் திறனைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம்.

மாறிவரும் இணையத்தள அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வணிகங்களுக்கு நம்பகமான, பயனுள்ள இணையத் தள பாதுகாப்பு தீர்வு தேவை. Enterprise Strategy Groupன் சமீபத்திய XDR மற்றும் SOC அறிக்கைகள், மேம்பட்ட இணையத்தள அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து விசாரிக்கக்கூடிய தகவல் பாதுகாப்புக் கருவிகளைக் கண்டறிய நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்வமாக இருப்பதைக் காட்டுகின்றன. வணிக நிறுவனங்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, இணையப் பாதுகாப்பின் அடிப்படையில் புத்தாக்கமான மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி வழங்குநரான Kaspersky, வணிக நிறுவனங்களுக்கு நம்பகமான இணையப் பாதுகாப்புத் திட்டத்தை வழங்குவதன் மூலம் தீர்வுகளை வழங்குவதில் பணியாற்றியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த Kaspersky தென்கிழக்கு ஆசியாவின் பொது முகாமையாளர் Yeo Siang Tiong, “சைபர் செக்யூரிட்டி தீர்வுகள் வழங்குனராக, இன்று நாம் அறிமுகப்படுத்திய கார்ப்பரேட் தயாரிப்புகளுக்கான அதிநவீன XDR தீர்வு Kaspersky Next என்பதைக் குறிப்பிடலாம், நமது உருமாற்றப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் இது குறிக்கிறது. இந்த சமீபத்திய தயாரிப்பு இலங்கையில் எந்த அளவிலான வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சிக்கலான EDR மற்றும் XDR தீர்வுகளை மிக எளிதாக வழங்க உதவுகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இணையற்ற சேவையின் மூலம் அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சைபர் பாதுகாப்பில் புதியவர்களுக்கு உயர் மட்ட பாதுகாப்பை வழங்குவதற்கும், நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு SOC குழுவிற்கும் நாங்கள் பணியாற்றியுள்ளோம். வணிகங்கள் மற்றும் நிறுவனங்களின் இணையப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறமையான மற்றும் நம்பகமான தகவல் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கு அதிகாரம் அளிப்பதே எங்கள் குறிக்கோள்.” என தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில், Kaspersky தயாரிப்புகள் இலங்கையில் Kaspersky Security Network பாவனையாளர்களின் கணினிகளில் சுமார் 15 மில்லியன் உள்ளூர் நிகழ்வுகளைக் கண்டறிய முடிந்தது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் பாவனையாளர்களில் 46.7% பேர் உள்நாட்டில் இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாவனையாளர்களின் கணினிகள் அல்லது அவற்றுடன் இணைக்கப்பட்ட சாதனங்கள் (Flash Drives, கேமரா மெமரி கார்டுகள், மொபைல் போன்கள், External Hard Drives) மற்றும் மற்றொரு கணினியால் திறக்க முடியாத கோப்புகள் இணைய சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடிய விஷயங்களைக் கொண்டிருக்கலாம் என்று இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மேலும், இலங்கையில் உள்ள KSN பாவனையாளர்களின் கணினிகளில் இணையத்தில் பரவிய 9.3 மில்லியன் வெவ்வேறு இணைய அச்சுறுத்தல்களை Kasperskyஆல் கண்டறிய முடிந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 39.5% பாவனையாளர்கள் இந்த இணைய அச்சுறுத்தல்களால் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

Kaspersky NextKaspersky Next என்பது AI ஆல் இயக்கப்படும் சக்திவாய்ந்த வலுவான இறுதிப்புள்ளி பாதுகாப்புடன் கூடிய புதிய இணைய பாதுகாப்பு தயாரிப்புகளின் வரிசையாகும். இதன் மூலம், EPP (Endpoint Protection Platform) ஐத் தாண்டிய எந்த அளவு மற்றும் தொழில்துறையின் வாடிக்கையாளர்களுக்கு EPR மற்றும் XDR வழங்கப்படுகிறது. மிகவும் மேம்பட்ட மற்றும் பயனுள்ள இணையப் பாதுகாப்பு தீர்வுகளை வழங்குவதன் மூலம், முழு வெளிப்படைத்தன்மை, கட்டுப்பாடு, விரைவான பதில் மற்றும் செயலில் இணைய அச்சுறுத்தல் கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் இன்றைய அதிநவீன இணைய தாக்குதல்களைத் தாங்கிக்கொள்ள EDR மற்றும் XDR ஆகியவை வணிகங்களுக்கு உதவுகின்றன.

Kaspersky Next, deployment-agnostic ஆகவும் அறிமுகப்படுத்தப்படலாம், இது Cloudக்கான வழியைத் திறக்கிறது. Kaspersky Next, அடிப்படை இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவாகச் செயல்படுத்த, நெறிப்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் நிறுவனங்கள் அதை நிர்வகிக்கும் திறன் காரணமாக, பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும்.

இதன் மூலம், முக்கியமான இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தயாரிப்பதுடன், வணிக மின்னஞ்சல்கள் மூலம் உள்கட்டமைப்பை அடைவதில் இருந்து ransomware, malware மற்றும் தரவு அழிவைத் தடுக்கவும் மற்றும் விநியோகச் சங்கிலி தாக்குதல்கள், நாசவேலை போன்ற வணிகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான அச்சுறுத்தல்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்கவும் முடியும்.

Kaspersky Next 3 அடுக்குகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Kaspersky Next EDR Foundations இணைய அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு நடுநிலையாக்குவதன் மூலம் இணையப் பாதுகாப்பை வழங்குகிறது. நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

தகவல் தொழில்நுட்பத் துறையால் தகவல் பாதுகாப்பை வழங்கும் நிறுவனங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

Kaspersky Next EDR Optimum ஆனது, பாதுகாப்பு, நுணுக்கக் கட்டுப்பாடு, Patch முகாமைத்துவம் மற்றும் Cloud பாதுகாப்பிற்கான அத்தியாவசிய EDR செயல்பாடுகளுடன் கூடிய குறைந்தபட்ச ஆதாரங்களைப் பயன்படுத்தி, தாக்குதல்களை விரைவாகத் தவிர்க்க வணிகங்களைச் செயல்படுத்துகிறது.

சிறிய தகவல் பாதுகாப்பு குழுக்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஏற்றது.

இது ஒரு நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு முழுவதும் உள்ள பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவைச் சேகரித்தல், அதை பகுப்பாய்வு செய்தல், அச்சுறுத்தல்களைக் கண்டறிதல் மற்றும் அந்த நேரத்தில் சாத்தியமான அச்சுறுத்தல்களைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்க தானியங்கு பதில்களை வழங்குதல் ஆகியவை அடங்கும்.

அனுபவம் வாய்ந்த இணைய பாதுகாப்பு குழுக்கள் அல்லது பாதுகாப்பு செயல்பாட்டு மையங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

Kasperskyஇன் புதிய சைபர் மோசடிகள் தொடர்பான அறிக்கைகள் தொடர்பாக தெரிந்து கொள்ள Securelist.com என்ற எமது இணையத்தளத்தை பார்வையிடவும்.

 

 

Pedro Estateஇல் அமைச்சர் தொண்டமானின் அத்துமீறல்...
වටවල වැවිලි පීඑල්සී නව සභාපති...
TikTok යාවත්කාලීන කරන ලද ප්‍රජා...
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை...
CIC Holdings 2024 මූල්‍ය වර්ෂය...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
உலகளாவிய பெருந்தோட்டத் தொழிலில் உலக முதல்வரான...