உபகார” தேசிய திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பின் கரங்களை நீட்டுகிறது ஹேமாஸ்

Share

Share

Share

Share

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடுமையான அழுத்தத்தில் வாழும் சிறுநீரக நோயாளர்களுக்கு உகந்த சுகாதார சேவையை உறுதிசெய்து, இலங்கையில் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஹேமாஸ் மருத்துவமனை குழுமம், அண்மையில் தேசிய பணியை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது மற்றும் அதன் சமீபத்திய பெருநிறுவன சமூகப் பொறுப்பு வேலைத்திட்டமான “உபகார” என்ற தேசிய திட்டம் சமீபத்தில் மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு மாதாந்த டயாலிசிஸ் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படவுள்ளது.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, அனைத்து சிறுநீரக நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சையை அரசாங்க சுகாதார துறையினரால் வழங்க முடியாது, எனவே ஹேமாஸ் மருத்துவமனை குழுமம், இந்த நிலைமையை நன்கு புரிந்துகொண்டு மருத்துவமனை சேவையாக, அதன் தேசிய பொறுப்புகளுடன், இந்த தனித்துவமான ஆதரவு திட்டத்தின் மூலம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டம் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது. மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள சிறுநீரக நோயாளிகளின் வாழ்க்கைச் சுமைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் தேசிய அளவிலான முயற்சியாக இந்த திட்டத்தை சுட்டிக்காட்ட முடியும்.
“நாட்பட்ட சிறுநீரக நோய் இலங்கையில் மிகவும் பொதுவான தொற்றாத நோய்களில் ஒன்றாகும். புள்ளிவிவரங்களின்படி, நீரிழிவு நோயாளிகள் 20-25% மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளர்கள் 18-20% பேர் CKD நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு 10 இலங்கையர்களில் ஒருவர் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியாதது மிகவும் வேதனையான விடயமாகும். இதன் காரணமாக, துரதிர்ஷ்டவசமாக, இந்த மக்கள் அனைவரும் நோய் மோசமடைந்த பின்னரே சிகிச்சையைத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக, அத்தகைய நோயாளிகளுக்கு வழக்கமான டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை. இந்த இரண்டு சிகிச்சைகளும் நோயாளிகளையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மிகவும் நெருக்கடியான மற்றும் பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளாக்குகின்றன. இன்றைய பொருளாதாரப் பொருளாதாரம் மாறிவரும் சூழலில், நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் இத்தகைய சிகிச்சைகளை அணுக முடியாத அவலநிலையில் உள்ளனர்.” என ஹேமாஸ் மருத்துவமனை குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் லக்கிட் பீரிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் “குறைந்த வருமானம் பெறும் மக்கள் மத்தியில் நாட்பட்ட சிறுநீரக நோய் துரிதமாக பரவி வருவதுடன் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சந்தர்ப்பம் பெருமளவில் கட்டுப்பாடுகள் இருப்பதனால் அவர்களுக்காக ஹேமாஸ் மருத்துவமனை தனது ‘உபகார’ வேலைத்திட்டத்தின் ஊடாக உதவிக்கரம் நீட்டி எமது வளங்களைப் பயன்படுத்தி இலவசமாக டயலிஸிஸ் சிகிச்சையை அளிப்பதற்கு இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என தெரிவித்தார்.
தற்போது அதிகரித்து வரும் சிறுநீரக நோய் பிரதான சுகாதார பிரச்சினையாக உலகளாவிய ரீதியில் இருப்பதுடன், நோய் துரிதமாக பரவுதல் மற்றும் நோயாளர்களுக்கு மற்றும் அவர்களது வாழ்க்கை முறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலானவர்கள் இந்த விடயம் குறித்து மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். ஒவ்வொரு வருடமும் இலங்கையில் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அடையாளம் காணப்படுவதுடன், தேசிய சுகாதார சேவைக் கட்டமைப்பிற்கு பெரும்பாலும் டயலிஸிஸ் தேவையான அனைத்து நோயாளர்களின் முழுமையான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும். அந்த நிலைமை அவர்களது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கும். இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டு செல்வதற்கு மற்றும் மக்களின் பங்களிப்பு ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ‘உபகார’ வேலைத்திட்டம் தொடா;பில் வைத்தியசாலைக்குள் உள்ள மற்றும் வைத்தியசாலையின் வெளிநோயாளர்கள் மத்தியிலுள்ள சமூக கௌரவத்துடன் கூடிய குழுவொன்றினால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்தும் நோக்கில், ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம் நாட்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது சிகிச்சைகளுக்காக ஏற்படும் பாரிய பணச் செலவைக் குறைப்பதற்கும் மற்றும் அவர்களுக்கு இலகுவாக டயலிஸிஸ் சுழற்சி சிகிச்சைகளுக்காக ஈடுபடுத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் தனிப்பட்ட ரீதியில் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள ஒரு சந்தர்ப்பத்தில், இந்த ‘உபகார’ வேலைத்திட்டத்தின் ஊடாக சிறுநீரக நோயாளர்களின் ஆரோக்கியத்தை தக்கவைத்துக் கொள்ள திடசங்கட்பம் பூணுவதுடன் அவர்களுக்கு மீண்டும் தமது சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
“எனவே, இத்தகைய சவாலான பொருளாதாரச் சூழலில், இலங்கையில் சுகாதார சமத்துவத்தை உறுதி செய்வதில் ஹேமாஸ் “உபகார” திட்டம் ஒரு முக்கிய படியாக தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து இலங்கையர்களுக்கும் அதிகபட்ச சுகாதார சேவையை வழங்க உறுதிபூண்டுள்ள சுகாதார வழங்குநராக, அவர்களின் நிதிப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை வழங்க நாங்கள் பணியாற்றுகிறோம். அந்த நோக்குடன் முன்னோக்கி நகர்ந்து, இந்த முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் இலங்கையில் சிறுநீரக நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என கலாநிதி லக்கித் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...