எவருமே பாராமுகமாக விடப்படவில்லை : Airtel-NIMH உளநல உடனடி சேவையானது 24/7 நாட்களும் உங்களுக்காகவே

Share

Share

Share

Share

அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் தொழில்முறை சார்ந்த உளநல சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான தீவிர நாடளாவிய முயற்சிகளை ஊக்கப்படுத்துதலை, Airtel Lanka ஆனது தேசிய உளநல நிறுவனத்துடன் (NIMH) இணைந்து அதன் Whatsapp சேவையினை 24 மணிநேரமும் 7 நாட்களும் செயற்பாட்டிற்கென விரிவுபடுத்துவதாக அறிவித்தது.
விரிவுபடுத்தப்பட்ட சேவையானது உளநலம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நம்பத்தகுந்த வகையில் இலவசமாக உதவியைப் பெற முடியும் என்பதனை உறுதிப்படுத்தும் வகையிலும் மற்றும் கருணை நிறைந்த மனதுடன் இரவும் பகலும் உதவிக் கரங்களை வழங்கும் நோக்கோடும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 1926 எனும் உடனடிச் சேவையூடாக மட்டுமே NIMH ஐ 24/7 நேரமும் அணுகக்கூடியதாக இருந்தது, அதோடு குறுஞ் செய்தி மற்றும் Whatsapp ஊடான தொழிற்பாடானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையாக மட்டுப் படுத்தப்பட்டிருந்தது.
இலங்கை வாழ் மக்களில் ஏராளமானோர் மிகுந்த நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கும் இன்நேரத்தில், முன்னொருபோதும் இல்லாத அளவு மன அழுத்தம் மற்றும் பதட்டம் என ஒவ்வொரு இலங்கை வாழ் மக்களும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் உளநல ஆரோக்கியத்தை மிகவும் திறம்பட்ட வகையில் நிர்வகிப்பதற்குத் தேவையான ஆதரவிற்காக அணுகுவதை உறுதிசெய்ய கைபேசித் தொழிநுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம். இதன்மூலம், எந்தவொரு இலங்கை வாழ் மக்களும் பாராமுகமாக விடப்படவில்லை என்பதனை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்,” என Airtel Sri Lanka CEO/MD, Ashish Chandra தெரிவித்தார்.
முன்னோக்கி நகரும், Airtel உளநலத்தின் முக்கியத்துவம் மற்றும் நாடு முழுவதும் உள்ள இலங்கை வாழ் இளைஞ்ர் யுவதியினர் போன்ற சவால்களை எதிர்கொள்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சேவைகள் பற்றிய விழிப்புணர்வை விரிவுபடுத்தவும் இது செயற்படும் என்றும் அவர் கூறினார். அதற்கானதோர் முயற்சியாக, NIMH நடாத்திய கலை மற்றும் மும்மொழிக் கட்டுரைப் போட்டிகளுக்கு Airtel ஆனது நிதியுதவியினை வழங்கியது. தற்போதுள்ள தகவல் தொடர்பு மூலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடனான கூட்டாண்மைகளைப் பயன்படுத்தி, இந்த அமர்வானது 2022 அக்டோபரில் உலக உளநல தினத்தினை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தரநிலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.
“பெருந்தொற்றுக் கால முடக்கங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில், 1926 சேவையின் ஊடாக பலவிதமான உளநலப் பிரச்சினைகளுக்கு உதவியை நாடும் இலங்கையர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். குறிப்பாக எங்கள் இளம் பாவனையாளர்களுக்கு, மாலை நேரங்களில் Whatsapp சேவை மூலம் எங்களுடன் தொடர்புகொண்டு மனம் விட்டுப் பேசுவதற்கு அவர்களுக்கு தாராளமான வாய்ப்பினை வழங்குகிறது. இவ் அத்தியாவசிய சேவைகளை 24 மணி நேர வடிவத்திற்குக் கொண்டு வந்து, இவ் உயிர்காக்கும் சேவையின் வரம்பை அதிகரிக்க எங்களுக்கு உதவியமைக்காக நாங்கள் Airtel குழுவினருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றோம் ” என NIMH சிரேஷ்ட உளநல மருத்துவர் டாக்டர் புஷ்பா ரணசிங்க தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உலக உளநல தினமான 2020 அன்று ஆரம்பித்துவைக்கப் பட்டதிலிருந்து, 1926 ஊடகக் குறுஞ் செய்தி அடிப்படையிலான சேவையூடாக மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காக்கும் இம் முயற்சியினை ஆரம்பிக்க உதவியது. மேலும் அவர்களின் உளநலம் சார்ந்த ஆரோக்கியத்துடன் சவால்களை எதிர்கொள்ளும் பல நபர்களுக்கு ஆதரவு, ஆறுதல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றையும் வழங்குகிறது. மிக சமீபத்தில், Whatsapp ஊடாகவும் குறுஞ் செய்தி சேவையினையும் மேலும் விரிவுபடுத்த Airtel ஆனது NIMH உடன் கைகோர்த்துக் கொண்டது.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை இணைத்து அவர்களை மென்மேலும் வலுவூட்டுவதத்திற்கான Airtel இன் உலகளாவிய நோக்கத்துடன் இம்முயற்சியும் கைகோர்த்துள்ளது. தற்போது Airtel ஆனது தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 17 நாடுகளில் இரண்டு பில்லியன் மக்களுக்கு சேவையினை வலையமைப்பின் மூலம் ஆற்றிவருகிறது. உலகளவில் முதல் மூன்று தொலைத்தொடர்புகள் சேவை மத்தியில் தரவரிசைப் படுத்துகையில் , சமீபத்திய மாதங்களில் Airtel ஆனது, பிராந்தியம் முழுவதும் Digital உளீட்டினை மேம்படுத்திப் புதுமையான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, Google மற்றும் Meta போன்ற உலகளாவிய தொழிநுட்ப ஜாம்பவான் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமான எவராயினும் உளநலம் தொடர்பான சவாலை எதிர்கொண்டால், 1926 என்ற எண்ணில் அழைக்க முடியும் அல்லது குறுஞ் செய்தியினையும் அனுப்ப முடியும். அல்லது 075 555 1926 என்ற இலக்கத்திற்கு குறுஞ் செய்தியினை அனுப்புவதன் மூலமும் Whatsapp இல் உரையாடலை மேற்கொள்ளவும் முடியும். ஆனால் மகிழ்ச்சிகரமாக Airtel பாவனையாளர்களுக்கு இச் சேவைகளானது முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும்.

Brewing a better planet: Bogawantalawa...
Samsung Sri Lanka Unveils Galaxy...
Dipped Products unveils the worlds-first...
Samsung Sri Lanka Unveils Grand...
සන්ෂයින් හෝල්ඩිංග්ස් ‘SUN සම්මාන’ උළෙලේදී...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV...