ஏற்றுமதிச் சந்தையைப் பன்முகப்படுத்துல் மற்றும் Dipped தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் அதன் நவீன புத்தாக்கத்திற்கு MD அதிக அக்கறையையும் செலுத்துதல்

Share

Share

Share

Share

  • மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியாவில் அதிகரித்து வரும் சந்தை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது.
  • விரிவு படுத்தப்பட்ட உற்பத்தித்திறன், புதிய தயாரிப்பு போன்றவற்றில் முதலீடு செய்தல்.

சர்வதேச ரீதியில் ஒருங்கிணைந்த ரப்பர் கையுறை உற்பத்தியாளரான Dipped Products PLC (DPL) ஆனது தனது புதிய ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் மற்றும் உயர் மதிப்புமிக்க முக்கிய தயாரிப்பு பிரிவுகளில் இலாபகரமான வளர்ந்து வரும் வாய்ப்புக்களை இலக்காகக் கொண்டு, புதிய முகாமைத்துவப் பணிப்பாளரால் வழிநடத்தப்படும் “Innovation-Led” வளர்ச்சித்திட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக உள்ளது என புஷ்பிக ஜனதீர தெரிவித்தார்.

இலங்கையின் மிகப்பெரிய பன்முகப் படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான Hayleys குழுமத்தின் உறுப்பினரான DPL ஆனது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் உட்பட, உலகெங்கிலும் இருக்க கூடிய 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுபட்ட சிறப்பு வாய்ந்த தொழில்துறை, மருத்துவம் மற்றும் வீட்டுக் கையுறைகள் என்பன வற்றினை தற்போது வழங்கி வருகின்றது.

ரப்பர் துறையுடன் தொடர்புடைய தொழில்களில் பணிபுரிந்து 24 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்துடன், ஜனதீர 2017 ம் ஆண்டில் DPL இன் செயல்பாடுகளுக்கான பணிப்பாளராக தனது கடமையை ஆரம்பித்தார். மேலும் அவர் DPL இன் புதிய நவீன வளர்ச்சிக்கான தேவைகளை நன்கு கவனித்துக் கொண்டார். இவற்றுள் உற்பத்திச் செயல்முறையை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துதல், மொத்த உற்பத்தித் திறனின் விரிவாக்கம் மற்றும் புதுமையான தயாரிப்புகளின் வளர்ச்சியை நோக்கிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் மேம்பாட்டில் தொடர்ச்சியான கவனம் செலுத்துதல் என்பனவும் அடங்கும்.

DPL உடனான தனது பதவிக் காலத்தில், சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) தரநிலைகளை அமுல்படுத்துதல் மற்றும் அவற்றினைத் தொடர்ந்தும் மேம்படுத்துதல் மற்றும் Hayleys Lifecode இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழு – மட்டத்திலான இலக்குகளுக்கு நிறுவனத்தின் மிக சமீபத்திய சீரமைப்பு ஆகியவற்றுக்கான நிறுவனத்தின் முற்போக்கான அணுகுமுறையையும் ஜனதீர தீவிரமாக ஆதரித்துள்ளார்.

ஓசியானியா, ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் புதிய வாய்ப்புகளுக்கான சாத்தியங்களை ஆராயும் அதே வேளையில் ஏற்கேனவே இஸ்தாபிக்கப்பட்ட சந்தையின் இருப்பினை தக்கவைத்துக் கொள்வது தொடர்பாகவும், மேலும் அதனை உறுதிப்படுத்த DPL இனி வரும் ஆண்டில் எவ்வாறு செயல்ப்பட வேண்டும் என்பதனையும் ஜனதீர விளக்கினார்.

“ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக, DPL ஆனது தனது வளர்ச்சி நோக்கிய பயணத்தினை ஒரே சீராக உயர்த்தி வந்துள்ளது. அதே நேரத்தில், நாம் எமது தரம் தொடர்பாக இணையற்ற நற்பெயரை உருவாக்கியுள்ளோம். மேலும் உயர்-நிலை தயாரிப்புக் கண்டுபிடிப்புகள் மற்றும் நிலையான உற்பத்தியில் சிறந்த நடைமுறைகள் மற்றும் ESGக்கான நேர்மையான அர்ப்பணிப்புக்கான மையமாகவும் சேவையாற்றி உள்ளோம்.

மேலுமாக பேண்தகைமை மற்றும் நெறிமுறை சார்ந்த உற்பத்தி முறைமையில் சர்வதேச ரீதியில் முதல்வன் எனும் எமது நற்பெயரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் எங்களின் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரிப்பதில் கணிசமான முதலீடுகளை மேற்கொண்டும் வருகின்றோம். இதேபோன்று, விளையாட்டுக் கையுறைகள் போன்ற வற்றின் உற்பத்தி தொடர்பாகவும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். மற்றைய புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதற்காக எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை முடுக்கி விட்டுள்ளோம். இம் முயற்சியானது குறுகிய மற்றும் நடுத்தரக் காலத்தில் இன்னும் பாரிய வளர்ச்சிக்கு வழிநடத்தும்” என்று அவர் கூறினார்.

பியகம BOI முதலீட்டு வலயத்தில் விளையாட்டுக் கையுறைகளை உற்பத்தி செய்வதற்கான அதிநவீன உற்பத்தி வசதிகளை நிறுவும் முகமாக DPL ஏற்கெனவே குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொண்டுள்ளது என ஜனதீர மேலும் தெரிவித்தார்.
“எங்கள் பெரிய சர்வதேச போட்டியாளர்களுடன் ஒப்பு நோக்குகையில்
DPL இன் விலைமதிப்பு முன்மொழிவு எப்போதும் அதி உயரிய புத்தாக்கத் தயாரிப்பை இலக்காகக் கொண்டதாகவே அமைந்துள்ளது. அதோடு கூட அதன் நெறிமுறை, நிலையான உற்பத்தியினை நோக்காகக் கொண்ட அர்ப்பணிப்போடு கூடிய பேண்தகைமை மற்றும் ஒப்பிடமுடியாத சேவை.

அன்றாடம் வீடுகளில் மற்றும் தோட்டப் பாவனையில் இருந்து, உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு வீர வீராங்கனைகள், மின்சாரப் பொறியியலாளர்கள், துப்பரவுத் தொழிலாளர்கள் மற்றும் வைத்தியர்கள் தாதிமார்கள் போன்றோரின் தேவைகள் என தமது கைகளின் பாதுகாப்பை இட்டு சிந்திக்கும் அனைத்துத் தரப்பினரும் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் புரிந்துகொள்கின்றோம். அது மட்டும் அல்லாது அவற்றுக்கான தீர்வுகளையும் வழங்குகின்றோம்.

தனிப்பயனாக்கம், நெகிழ்வுத் தன்மையுடனான உற்பத்தி என்பன மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதன் தரம், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தயாரிப்பு மேம்பாடு மற்றும் ESG தரநிலைகளை தொடர்ந்துமே மேம்படுத்துவதில் முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் இந்த சக்திவாய்ந்த கலவைகளை புதிய தளத்தை கைப்பற்றுவதற்கு நாங்கள் பயன்படுத்துவோம்,” என்று ஜனதீர கூறினார்.

நியாயமான விலைப் பொறிமுறையுடன் சிறு உடமையாளர் மற்றும் ரப்பர் விவசாயிகளை அதன் விநியோகச் சங்கிலியில் செங்குத்துப் போக்காக ஒருங்கிணைக்கும் DPL இன் முயற்சிகளுடன் இணைந்து, இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்கான ‘அடிமட்ட’ நிலையிலான அணுகுமுறையை எமது நிறுவனம் தொடர்ந்தும் முன்னோடியாக மேற்கொண்டு வருகிறது.

2030 ஆம் ஆண்டிற்குள்ளாக வாய்ப்பெல்லை 01 மற்றும் வாய்ப்பெல்லை 02 என்பவற்றின் மூலம் கார்பன் வெளியேற்றத்தினை 30% ஆல் குறைப்பதோடு புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மீதான சார்ந்திருப்பை அதிகரிப்பதற்கான பாரிய முயற்சிகளை ஆதரிப்பதற்கும் தகமைகளைப் பேணுவதத்திற்கும் DPL ஆனது தன்னை அர்ப்பணித்துள்ளது.

Dipped Products PLC தொடர்பாக
1976 இல் இன்நிறுவனமானது இஸ்தாபிக்கப்பட்டது. Dipped Products பாதுகாப்பு மென்கை – உறைகளில் உலகளாவிய ரீதியில் முதல்வனாகத் திகழ்கிறது. இது இயற்கை மற்றும் செயற்கை ரப்பர் மரப்பாலை அடிப்படையாகக் கொண்டு வீட்டு, தொழில்துறை, விளையாட்டு மற்றும் மருத்துவ கையுறைகள் என உலகளாவிய ரீதியில் ஏறத்தாள 5% தேவையினைப் பூர்த்தி செய்கிறது. புத்தாக்கம் மற்றும் தரம் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த உற்பத்தி நடைமுறைகளுக்கு வலிமையான நற்பெயரைக் கொண்டு, அதன் தயாரிப்புகளாவன 70 நாடுகளுக்கும் மேல் தற்போது கிடைக்கின்றது. இலங்கையில் 04 உற்பத்தி வசதிகள் மற்றும் தாய்லாந்தில் 01 உற்பத்தி வசதி என்பதோடு இத்தாலி, போலந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் விற்பனை மற்றும் சந்தைப்படுதுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. DPL ஆனது உலகின் முன்னணி நெறிமுறைக்கு உட்பட்ட கையுறைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் மூலம் அதனோடு தொடர்புடை அனைத்து கூட்டுப் பங்காண்மையாளர்களுக்கும் முழுமையான மதிப்பினை இது தேடித்தருகிறது.

Hayleys PLC தொடர்பாக.

இலங்கைப் பொருளாதாரத்தின் ஒரு மையப்பகுதியான Hayleys குழுமமானது, வெவ்வேறு 16 வகைத் தொழில்த் துறைகளில் தனது வர்த்தகத்தினை மேற்கொள்வதோடு சர்வதேச ரீதியில் எட்டுத் திக்குகளிலும் பிரசன்னமாய் இருக்கிறது. எமது நாட்டின் அந்நிய செலாவணி வருவாயில் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் மற்றும் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 4.2% இனையும் ஈட்டித்த தருகின்றது. இதன் மூலம் புத்தாக்கம் மற்றும் தகமை பேணுதல் என்று வரும் போது Hayleys ஆனது முதல்வனாகத் திகழ்கின்றான் என்பதனை இலங்கையின் வெற்றி வரலாறுகளில் நிச்சயம் எழுதப்படவே வேண்டும்.

Pedro Estateஇல் அமைச்சர் தொண்டமானின் அத்துமீறல்...
වටවල වැවිලි පීඑල්සී නව සභාපති...
TikTok යාවත්කාලීන කරන ලද ප්‍රජා...
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை...
CIC Holdings 2024 මූල්‍ය වර්ෂය...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
உலகளாவிய பெருந்தோட்டத் தொழிலில் உலக முதல்வரான...