கருத்துக்களை பரப்புதல், மாற்றத்தை ஊக்குவித்தல்: இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறமைகளுக்கு வாய்ப்பளித்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் TikTok

Share

Share

Share

Share

ஒரே கிளிக்கில் உலகைப் பார்க்கக்கூடிய TikTok மூலம் இந்நாட்டு இளைஞர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் அளப்பெரியது அது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் கல்வியைப் புகட்டுதல், அனுபவங்களைப் பகிர்தல் உள்ளிட்ட சிறந்த எதிர்காலத்துக்குத் தேவையானவற்றை அடைந்துகொள்ள தற்போதைய இளைஞர்கள் முயற்சி செய்து வருன்றனர்.

‘கிளிக்குகளில் இருந்து முன்னேற்றம் வரை: நிலையான வளர்ச்சிக்கான இளைஞர்களின் டிஜிட்டல் பாதைகள்’ (From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development) என்ற கருப்பொருளில் 2024 சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், டிஜிட்டல் உலகில் இன்றைய இளைஞர்களால் ஏற்படுத்தப்படும் செல்வாக்கை புறக்கணிக்க முடியாது. தற்போதைய இளம் தலைமுறையினர் டிஜிட்டல் உலகில் பல விடயங்களைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், சிறந்த நிலையான எதிர்காலத்திற்கான அறிவை வழங்குவதற்கும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஒருவரின் கருத்துக்களைப் பரப்புவதற்கும் தேவையான கருவியாக அதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடத்துள்ளது.

குறிப்பாக ஒரு காலத்தில் பொழுதுபோக்கு தளமாக பார்க்கப்பட்ட TikTok தற்போது உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து, கல்வி மற்றும் மகிழ்ச்சிக்கான ஒரு இடமாக மாறியிருப்பது முக்கிய சிறப்பம்சமாகும். இன்றைய கிளிக்குகள் மூலம் நாளைய வளர்ச்சிக்கு வழி வகுக்கும் படைப்பாற்றலுக்கான ஒரு நிறுத்த தளமாகவும் TikTok ஐ குறிப்பிடப்படலாம். இந்த ஆண்டின் இளைஞர் அடிப்படையிலான கருப்பொருள் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த அவர்களின் திறன்களை வெளிப்படுத்தவும் காரணமாக இருக்கும்.

இலங்கையில் அவ்வப்போது ஏற்படும் நெருக்கடிகளில் சூழ்நிலைகளிலும் கூட TikTok உந்து சக்தியாக இருந்துள்ளது என்பதை புதிதாக சொல்ல வேண்டியதில்லை. இளைஞர்களின் ஆற்றல்தான் சமூக வளர்ச்சியிலிருந்து இலக்கியம், மனநலம் மற்றும் பிற முக்கியமான காரணங்கள் வரை அனைத்திலும் முன்னணி காரணியாக இருந்தது. அவர்கள் இந்த தளத்தை புத்தாக்கம் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் நாட்டை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், சமூகங்களை மேம்படுத்துவதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் டிஜிட்டல் அலையை உருவாக்குவதற்கும் பயன்படுத்தினார்கள். இந்த படைப்பாளிகள் வெறும் பொழுதுபோக்கு கலைஞர்கள் மட்டுமல்ல. அவர்கள் கல்வியாளர்கள், தொழில் முனைவோர், மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக குரல் கொடுப்பவர்கள் ஆவர்.

TikTok இல் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவரான டாக்டர் பிரபோதா, தோல் நோய்கள், அழகு சிகிச்சை மற்றும் யோகா சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவர் ஆயுர்வேத மருத்துவத்தை TikTok இற்கு கொண்டு வந்து, உலகளவில் புதிய பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். பாரம்பரிய மற்றும் பழைமையான ஆயுர்வேத அறிவியலை தற்போதைய வாழ்க்கை முறைகளுடன் இணைத்து, இளைஞர்களிடையே சிறந்த ஆரோக்கியம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த அவரால் முடிந்துள்ளது. குறிப்பாக, ஆயுர்வேதத்தை ஒரு சிகிச்சை முறையாக மட்டுமல்லாமல், ஒரு வருமான வழியாகவும் பின்பற்ற இளைஞர்களை ஊக்குவித்து, நூற்றாண்டுகள் பழைமையான ஆயுர்வேத அறிவை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

நயோமி இலங்கையின் இளம் தொழில்முனைவோர்களில் ஒருவர். கைவினைப் பொருட்களை உள்ளடக்கிய அவரது TikTok கணக்கு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது சொந்த பொழுதுபோக்காகத் தொடங்கிய இந்த படைப்பாற்றல், தற்போது ஒரு வணிகமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு TikTok வலைத்தளம் அவருக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. அத்துடன், அவரது இந்தப் பயணம் இலங்கையில் உள்ள இளைஞர்களின் தொழில்முனைவு மனப்பான்மைக்கு சான்றாக உள்ளது. இந்த நிலையில், அவரது முன்னேற்றத்தின் முக்கிய காரணியாக TikTok இருந்ததாக கூறி, அவர் அதற்கு நன்றி தெரிவித்தார். எனது கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தவும், உள்ளூர் தொழில்முனைவை ஆதரிக்கும் சமூகத்துடன் இணைவதற்கும் TikTok ஒரு சக்திவாய்ந்த தளமாக இருந்துள்ளது என்று அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பகிரும் ஒவ்வொரு பதிவும் வெறும் தயாரிப்பைப் பற்றியது மட்டுமல்ல, அது அவரது உலகத்தின் ஒரு பார்வையாகும்.

திறமையான பேச்சாளரும், உளவியல் நிபுணருமான ஹசிந்த ஹேவாவசம், தன்னை பின்தொடர்கின்ற ரசிகர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தி தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். இளைஞர்களை ஊக்குவித்து, அவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு உறுதுணையாக இருப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ள ஹசிந்த ஹேவாவசம், ‘எனது நுண்ணறிவையும் ஆதரவையும் பகிர்ந்துகொள்ள TikTok ஐ பயன்படுத்துகிறேன், இதன் மூலம், இலங்கை இளைஞர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்று கூறுகிறார். அவரது வீடியோக்கள் வெறும் ஊக்கமளிக்கும் காணொளிகள் மட்டுமல்ல, அவை சவால்களை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு வலிமை மற்றும் ஊக்கத்தின் ஆதாரமாக உள்ளதுடன், அவர்களின் கஷ்டங்களில் தனியாக இல்லை என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது.

திறமையான வயலின் கலைஞரான ஹிரண்யா தத்சரணி, தனது இசையின் மீதான ஆர்வத்தையும் திறமையையும் TikTok மூலம் உலகுடன் பகிர்ந்து கொள்கிறார். இலங்கை கலாச்சாரத்தின் சிறப்பை இசை மூலம் உலகிற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ள அவர், கலையின் அனைத்து எல்லைகளையும் கடந்து தனது ஆற்றலை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது TikTok கணக்கு ஒரு உயிரோட்டமான காட்சியகமாக உள்ளது, அங்கு பாரம்பரியமும் புதுமையும் இணைந்து வாழ்கின்றன, மேலும், நேரடி இரசனையின் மேடையாக மாறியுள்ள அவரது TikTok கணக்கு, இசையின் ரசனையை பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் பாலமாகக் குறிப்பிட முடியும்.

இறுதியாக, ரமோத் மலாக்க தனது ஆற்றல்மிக்க நடன வடிவமைப்புகளால் TikTok பயனர்களை வெகு தூரம் கவர்ந்துள்ளார். அவரது நடன அமைப்பு வெறும் அசைவுகளுக்கு அப்பாற்பட்டதுடன், அவரது உற்சாகமான ஆளுமையையும் படைப்பாற்றலையும் பிரதிபலிக்கும் ஒரு வகை கதை சொல்லும் முறையாகும். கலை ஆய்வு மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான ஒரு மேடையாக TikTok ஐ அவர் மாற்றியுள்ளார். அவருடைய படைப்புகள் மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த ஆக்கத்திறனை வெளிப்படுத்த ஊக்கமளிக்கின்றன. அனைத்து வடிவங்களிலும் கலை என்பது இணைப்பிற்கும் சுய வெளிப்பாட்டிற்கும் ஒரு வலிமையான கருவி என்பதை நிரூபிக்கிறது.

2024 சர்வதேச இளைஞர் தினம் எதிர்கால வெற்றிக்கான இளைஞர்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டும் ஒரு சிறப்பான தருணமாகும். இந்த இளைஞர்களின் பங்களிப்பின் மூலம், TokTok இன்று இலங்கையில் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கும், சமூக தாக்கத்தை உருவாக்குவதற்குமான முன்னணி தளமாக மாறியுள்ளது. தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டு உலகளாவிய பார்வையாளர்களுடன் ஈடுபடுவதன் மூலம், இந்த படைப்பாளிகள் இந்த ஆண்டின் கருப்பொருளின் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். மேலும், இளைஞர்களை வலுப்படுத்துவதற்கும் நிலையான வளர்ச்சிக்கும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் திறனை எடுத்துக்காட்டும் இந்த உற்சாகமான தளங்கள், இளைஞர்களின் படைப்பாற்றலுக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து ஆதரவையும் ஊக்கத்தையும் அளிக்கும்.

 

 

 

 

 

 

Jungle Kitchen, with roots in...
TikTok Strengthens Measures to Combat...
ලංකා වැවිලිකරුවන්ගේ සංගමයේ 170 වැනි...
170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது...
வணிக விசா பிரச்சினை குறித்து அவசர...
වින්දනීය අත්දැකීමක් එක් කරමින් Coke...
ව්‍යාපාරික වීසා ගැටළුව සම්බන්ධයෙන් කඩිනම්...
නවතම රූපවාහිනී අත්දැකීමක් ඇස් අභියසට...
වින්දනීය අත්දැකීමක් එක් කරමින් Coke...
ව්‍යාපාරික වීසා ගැටළුව සම්බන්ධයෙන් කඩිනම්...
නවතම රූපවාහිනී අත්දැකීමක් ඇස් අභියසට...
Planters’ Association of Ceylon Celebrates...