காணி கட்டட சொத்து முதலீட்டுக்கு சிறந்த நிதியுதவியை வழங்குவதற்கு Home Lands Holding உடன் இணையும் HNB

Share

Share

Share

Share

ரியல் எஸ்டேட் துறையை புத்துயிர் பெறச் செய்யும் முயற்சியில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, எதிர்கால வீட்டு உரிமையாளர்களுக்கு தங்களுடைய சொந்த காணி கட்டடங்களுக்காக முதலீடு செய்வதற்கு சிறந்த நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக ரியல் எஸ்டேட் நிறுவனமான Home Land Holdings இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளியாக கையொப்பமிட்டுள்ளது.

Home Landsஇன் விரிவான கோப்புறை முழுவதிலுமுள்ள காணி நிலங்களுக்கும் இந்த ஊக்குவிப்பு நடவடிக்கை பொருந்தும். பத்தரமுல்லையில் உள்ள Home Lands தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. HNBஇன் பிரதிப் பொது முகாமையாளர் – வாடிக்கையாளர் வங்கிக் குழுமம், சஞ்ஜேய் விஜேமான்ன, HNB AGM – தனிப்பட்ட நிதிச் சேவைகள் (PFS), காஞ்சனா கருணாகம மற்றும் Home Lands குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் ஹேரத் மற்றும் HNB மற்றும் Home Lands குழுமத்தின் சிரேஷ்ட முகாமையாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

“உலகளாவிய தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் ரியல் எஸ்டேட் துறைக்கான கண்ணோட்டம் நேர்மறையானது மற்றும் மீள்தன்மை கொண்டது. ரியல் எஸ்டேட் ஆர்வலர்கள் மற்றும் வருங்கால வீட்டு உரிமையாளர்கள் தங்கள் கனவு வீட்டுக்காக முதலீடு செய்ய விரும்பும் பல முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்தத் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, எங்களின் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் சிறந்த தேர்வுகளை வழங்குவதற்காக Home Landsஇன் உத்தியோகபூர்வ வங்கி பங்குதாரராக கையொப்பமிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என HNB AGM – தனிப்பட்ட நிதிச் சேவைகள், காஞ்சனா கருணாகம தெரிவித்தார்.

தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்குவதன் மூலம், HNB அவர்களின் கையிலுள்ள பணத்திற்கு ஏற்றவாறு வசதியான மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தகவணைத் தேர்வுகளை வழங்கும். வீட்டுக்கான அடகு ஆலோசனை சேவைகளும் வங்கியின் முகவர்களால் வழங்கப்படுகின்றன, அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வசதிக்குத் ஏற்ப அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களுடன் உதவுவார்கள்.

“ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக, வருங்கால காணி/வீட்டு உரிமையாளர்களுக்கு அவர்களின் ரியல் எஸ்டேட் தேவைகளுக்கு சிறந்த தீர்வுகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருக்கிறோம், இது எங்கள் நிறுவன நெறிமுறையின் ஒரு பகுதியாகும். இதன் ஒரு பகுதியாக, HNB உடனான எங்கள் நீண்டகால உறவைப் பயன்படுத்தி, வருங்கால காணி/வீட்டு உரிமையாளர்களுக்கு சந்தையில் சிறந்த தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளோம், மேலும் அவர்களுடன் மீண்டும் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என Home Lands குழும முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் ஹேரத் தெரிவித்தார்.

“இந்தக் காலத்தில் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு காணி அல்லது வீடு என்ற கனவை நனவாக்க உதவுவதன் மூலம், ரியல் எஸ்டேட் செயற்பாட்டை மேலும் சாத்தியமாக்க, மூன்று ஆண்டுகளுக்கு வட்டியில் ஒரு பாகத்திற்கு மானியம் வழங்குவோம்” என ஹேரத் மேலும் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற Banker சஞ்சிகையினால் தொகுக்கப்பட்ட உலகின் சிறந்த 1,000 வங்கிகளின் பட்டியலில் HNB இடம்பிடித்ததுடன், Asian Banker சஞ்சிகையால் நடத்தப்பட்ட மதிப்புமிக்க சர்வதேச வாடிக்கைகயாளர் நிதிச் சேவைகள் விருதுகள் 2023 நிகழழ்வில் 13வது தடவையாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக மகுடம் சூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...