சுவ அரண: இலங்கையின் முதலாவது குழந்தைநல நோய் அறிகுறி சிகிச்சை நிலையம் மஹரகமவில் அங்குரார்ப்பணம்

Share

Share

Share

Share

இலங்கையின் முதலாவது குழந்தைநல நோய் அறிகுறி சிகிச்சை நிலையமான சுவ அரண புற்றுநோயுடன் கூடிய குழந்தை நோயாளிகளுக்காக கதவுகளை அகலத் திறக்கிறது. இந்த முன்னோடித் திட்டம் சுகமளிப்பதற்கான ஸ்தலமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதாகும். இது இலங்கையில் புற்றுநோயுடன் கூடிய குழந்தை நோயாளிகளுக்கு பிள்ளைகளுக்கு உடல்ரீதியான, உணர்வுரீதியான, உளவியல்ரீதியான சிகிச்சைகளை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, உதவியுடனான பராமரிப்புச் சூழலை முழுமையாகக் கொண்டு வருவதற்குரிய குழந்தைநல நோய் அறிகுறி சிகிச்சை இடப்பரப்பிற்குரிய தேவையை பூர்த்தி செய்கிறது.

‘சுவ அரண’வின் வெளிப்புற, உட்புற கட்டடக் கலை வடிவமைப்பு பாரம்பரியங்களைத் தாண்டிச் சென்று, சுகாதார பராமரிப்பு தொழில்துறை நிபுணர்கள், சிறுவர் நல நிபுணர்கள், குழந்தைநல நிபுணர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், செயற்றிறனையும், செயற்பாட்டு ஆற்றலையும், எல்லாவற்றிற்கு மேலாக குணப்படுத்தலையும் மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன வசதிகளைக் கொண்ட கட்டடமானது கண்ணுக்கு குளிர்ச்சியான நிறங்களையும், இயற்கையைப் பிரதிபலிக்கும் அம்சங்களையும், ஒன்றுடனொன்று தொடர்பாடக்கூடிய இடப்பரப்புக்களையும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வைத் தரும் ஸ்பரிசங்களையும் கொண்டதாக, மிகவும் சவாலான காலகட்டத்தில் குடும்பவத்தவர்களுடன் ஒன்றாக பொழுதைக் கழிக்கக்கூடியதாக பாதுகாப்பிற்கும், சுகாதாரத்திற்கும், அந்தரங்கத்திற்கும் முன்னுரிமை அளிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுவ அரணவில் வலி மற்றும் நோய் அறிகுறி முகாமைத்துவம், சமூக-உளவியல் உதவிகள், கலைகள் மற்றும் இசை மூலமான சிகிச்சைகள், வாழ்க்கையின் இறுதிக்கட்ட மற்றும் ஆறுதல் உதவிகள் உள்ளடங்கிய நவீன தொழில்நுட்பமும், சமகாலத்திற்கேற்ற பராமரிப்பு சேவைகளும் உள்ளதுடன், இது பிள்ளைகளுக்கும், குடும்பத்தவர்களுக்கும் சிறந்த புகலிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மாடிக் கட்டடத்தில் நோயாளிகளுக்கு நான்கு மாடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குடும்பங்களுக்கான 32 அறைகள் உண்டு. இது தவிர, மேல் மாடி பூங்கா, கீழ்மாடி உணவு அறை, பிரத்தியேக சமையலறை, பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவையும் இருக்கின்றன.

இலங்கையில் சுமார் ஆயிரம் பிள்ளைகளை புற்றுநோய் பீடித்துள்ளதாக கண்டறியப்படும் நிலையில், இந்தப் பிள்ளைகளில் 10 பேரை எடுத்துக் கொண்டால் 7 பேர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பொருளாதார வசதியீனங்கள் காரணமாக, பெரும்பாலான பிள்ளைகளைப் பொறுத்தவரையில் மருத்துவ, போக்குவரத்து, தங்குமிட செலவினங்கள் கட்டுப்படியாவது கிடையாது. இத்தகைய பிள்ளைகளுக்கு முற்றுமுழுதாக இலவசமாக உணர்வுபூர்மாகவும், ஆதரவாகவும் உதவி பெறக்கூடிய வதிவிட வசதியை சுவ அரண உருவாக்கிக் கொடுக்கிறது.

தமது 40 வயதில் புற்றுநோயால் இறந்த இந்திரா ஜயசூரியவின் மறைவையடுத்து உருவாக்கப்பட்ட இந்திரா புற்றுநோய் நிதியமானது, வட அமெரிக்க மேற்குப் பிராந்திய இலங்கை மருத்துவ சங்கமும் (SLMANA WR), ஸ்தாபனங்கள், சேவை நிறுவனங்கள், குடும்ப நிதியங்கள் போன்றவற்றின் கூட்டமைப்பும் இணைந்த கூட்டு பங்காளித்துவமாகும். இந்த நோய் குணப்படுத்தல் நிலையத்திற்கு ரொஷான் மஹாநாம நிதியம், லயன்ஸ் கழக சர்வதேச ஸ்தாபனம் (Lions District 306B2)> MJF நற்பணி மன்றம், விஜேராம குடும்ப மன்றம், அவுஸ்திரேலியாவின் ப்ரின்ஸ் குழுமம் ஆகியவை நன்கொடை செய்திருக்கின்றன. இவற்றிற்கு அப்பால், தனிநபர்களும், குடும்பங்களுமாக சேர்ந்து அறைகளுக்கு அனுசரணை வழங்கி விலைமதிக்க முடியாத உதவிகளை செய்துள்ளனர். இந்த உதவிகள் சுவ அரண நிலையம் நிலைபேறானதாக முன்னோக்கிச் செல்வதை உறுதி செய்யக்கூடும்.

இந்திரா புற்றுநோய் நிதியத்தின் போஷகராகத் திகழும் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற அங்கத்தவருமான ஸ்ரீலங்காபிமான்ய கரு ஜயசூரிய, தமது மகளின் மறைவால் எழுந்த வலியை குடும்பத்துடன் கடந்து வந்தவர். ‘அந்த சமயத்தில், நாம் அனுபவித்த வலியை வேறு பெற்றோர் அனுபவிக்கக்கூடாதென நாம் உறுதிபூண்டோம். கற்பனை செய்ய முடியாத வலியையும், நிச்சயமற்றதான உணர்வையும், பிள்ளைப் பராயம் பறிக்கப்பட்ட நிலையையும் எதிர்கொள்ளும் பிள்ளைகளைப் பராமரிக்க நாம் முழுமையானதொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் உண்மையாக சுகப்படுத்துவற்குரிய இடமாக சுவ அருண அமைந்துள்ளது,’ என்று அவர் கூறினார்.

நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில், சுவ அரணவின் தொழில்நுட்ப விடயங்களில் தலைமை தாங்கி வழிநடத்தியவரும், இணை ஸ்தாபகரும், Sequoia Consultants LA நிறுவனத்தின் தவிசாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பட்டய சிவில் பொறியியலாளர் பிரியங்க டி சில்வா உரையாற்றினார். தாம், SLMANA WR தவிசாளரும், அமெரிக்க உள்ளக மருத்துவ, குருதியியல் மற்றும் புற்றுநோயியல் சபையின் அங்கத்தவரும், புற்றுநோயியல் பிரிவின் பொறுப்பதிகாரியும், லொஸ் ஏஞ்சலிஸ் புற்றுநோய் வலைப்பின்னலைச் சேர்ந்த Good Samaritan Hospital இன் பங்காளருமான டொக்டர் லசிக்க செனவிரட்னவுடன் இணைந்து இலங்கையில் புற்றுநோயாளிகளுக்காக நோய் அறிகுறி சிகிச்சை வசதியொன்றை உருவாக்கும் நீண்டநாள் தொலைநோக்கைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய நிலையத்தை அமைக்கும் யோசனை உருவானபோது, இதற்குரிய முன்மொழிவை SLMANA WR இன் பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பித்தவரும், சுவ அரணவின் இணை ஸ்தாபகருமான டொக்டர் செனவிரட்ன உரையாற்றுகையில், ‘நாம் இதனைத் தொடங்கியபோது மின்வெட்டு முதற்கொண்டு பொருளாதார நெருக்கடி வரையில் நிறைய தடைகள் வந்தன. நாம் சளைக்கவில்லை. ஒன்றுபட்டு, கனவை நிறைவேற்றிய குழுவின் அங்கத்தவராக இருப்பதையிட்டு நாம் பெருமைப்படுகிறேன்,’ என்றார்.

சுவ அரணவைப் பற்றி

‘சுவ அரண’ என்பது புற்றுநோயால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் ஒட்டுமொத்தமான, சர்வாம்ச பராமரிப்பையும், உதவிகளையும் வழங்குவதில் அர்ப்பணிப்பு கொண்ட இலங்கையின் முதலாவது குழந்தைநல நோய் அறிகுறி சிகிச்சைப் பராமரிப்பு (Paediatric Palliative Care Centre) நிலையமாகும். இந்த நிலையமானது வலி முகாமைத்துவம், உணர்வு ரீதியான சேமநலன்கள், குடும்ப-மைய பராமரிப்பு ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்தி, தாம் பெறக்கூடிய கருணையும், உதவிகளும்;, நன்மதிப்பும் இவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.

 

 

தகுதியற்ற உள்ளடக்கத்திலிருந்து உயர்ந்த பாதுகாபை வழஙகும்...
வாகன நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்த UNIMO...
உங்களது வங்கி விருப்பத்திற்கேற்ப ‘HNB Self-onboarding’ஐ...
Kaspersky Safe Kids proves superior...
Samsung Unveils Galaxy M14 LTE...
Dipped Products Accelerates Global Expansion...
HNB Finance இன் “ஊக்குவிக்கும் அபிவிருத்தி...
புகைப்பட தலைப்பு | உலக சுற்றுச்சூழல்...
Dipped Products Accelerates Global Expansion...
HNB Finance இன் “ஊக்குவிக்கும் அபிவிருத்தி...
புகைப்பட தலைப்பு | உலக சுற்றுச்சூழல்...
HNB රථ වාහන ෆිනෑන්ස් සේවාවේ...