தர முகாமைத்துவ அமைப்பான ISO 9001:2015இனால் Sunshine Healthcare Lankaவுக்கு விருது

Share

Share

Share

Share

Sunshine Holdings PLCன் Healthcare பிரிவான Sunshine Healthcare Lanka Limited (SHL), SHL (Pharmaceutical) மற்றும் பிரதான களஞ்சிய தலைமை அலுவலகத்திற்குள் செயல்படுத்தப்பட்ட அதன் தர முகாமைத்துவ அமைப்புக்காக நிறுவனம் ISO 9001:2015 (UKAS) சான்றிதழைப் பெற்றுள்ளது.

Bureau Veritas India வழங்கிய இந்தச் சான்றிதழானது, வாடிக்கையாளர் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயர்தர சுகாதாரப் பொருட்களை வழங்குவதில் SHL இன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு அதனை பூர்த்தி செய்வதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தியை வலியுறுத்துகிறது. ISO 9001:2015 சான்றிதழ் செயல்திறன் அடிப்படையிலான செயல்பாட்டு அமைப்பை ஆதரிக்கிறது, ஒட்டுமொத்த நிறுவனத்தின் செயல்திறனில் தொடர்ச்சியான மேம்பாடுகள் மற்றும் தரத்தில் கவனம் செலுத்துகிறது.

மேலும், வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு முழுமையாக இணங்க வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், வளப் பயன்பாட்டை அதிகரித்தல், செயல்பாட்டுத் திறனை உறுதி செய்தல் மற்றும் கழிவுகளைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றில் SHL இன் அர்ப்பணிப்பைச் சான்றளிப்பு எடுத்துக்காட்டுகிறது. மேலும், இந்த சான்றிதழானது, ஒவ்வொரு மட்டத்திலும் சிறந்த கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில், நிறுவனத்திற்குள் மொத்த தர கலாச்சாரத்தை நிறுவுவதற்கான SHL இன் தற்போதைய வெற்றிப் பயணத்தை சுட்டிக்காட்டுகிறது.

இந்த சான்றிதழ் குறித்து கருத்து தெரிவித்த Sunshine Pharmaceuticals நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சாந்த பண்டார, “ISO 9001:2015 சான்றிதழைப் பெறுவது Sunshine Healthcare Lanka Limitedக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். தரம், செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதில் எங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. இந்தச் சான்றிதழ் சிறந்த சுகாதாரத் தீர்வுகளை வழங்குவதற்கான எங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.” என தெரிவித்தார்.

 

இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
දකුණු ආසියානු සංචාරක සහ සුඛෝපභෝගී...
City of Dreams Sri Lanka...
MAS Holdings, AICPA සහ CIMA...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
ITC Ratnadipa to Launch ‘The...