தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தில் உள்ள Samsungக்கு புத்தாக்கமான சிறப்பு அங்கீகாரம்

Share

Share

Share

Share

தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்துறையில் முன்னணி கண்டுபிடிப்புகள் மூலம், Samsung Electronics அதன் உலகளாவிய சந்தை தலைமையில் சிறந்து விளங்குகிறது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Omdia கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் Samsung மீண்டும் உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடம் பிடித்தது, இது தொடர்ச்சியாக 17 வது ஆண்டாக நிறுவனம் தொலைக்காட்சி துறையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உயர் தரத்தில் பார்க்கும் அனுபவங்கள் மற்றும் பாவனையாளரை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு இந்த சாதனை காரணமாக அமைந்துள்ளது.

அதன் உயர்தர தயாரிப்பு வரிசைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், Samsung தனது Neo QLED வரிசையின் மூலம் சிறந்த எடுத்துக்காட்டாக 17 ஆண்டுகளாக தொலைக்காட்சி துறையில் அதன் இணையற்ற தலைமையை நிலைநிறுத்தியுள்ளது. உலகளவில், 2022 ஆம் ஆண்டில், Samsung 9.65 மில்லியன் யூனிட் QLED மற்றும் Neo QLED தொலைக்காட்சிகளை விற்பனை செய்தது, இது 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒட்டுமொத்த விற்பனையை 35 மில்லியன் யூனிட்களாகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Samsung 2022 ஆம் ஆண்டில் அதி-பெரிய தொலைக்காட்சி சந்தைப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது, முறையே 75 அங்குலம் மற்றும் 80 அங்குலதுக்கு மேல் உள்ள தொலைக்காட்சிகளுக்கான 36.1% மற்றும் 42.9% சந்தைப் பங்கைப் பதிவுசெய்தது. 2,500 அமெரிக்க டொருக்கு மேல் விலையுள்ள அதி உயர்ந்த தொலைக்காட்சி சந்தைக்கு, Samsung 48.6% வருவாயில் மிகப்பெரிய சந்தைப் பங்கைத் தக்க வைத்துக் கொண்டது.

Samsung Electronics நிறுவனத்தின் Visual Display Business இன் நிர்வாக துணைத் தலைவர் Cheolgi Kim கூறுகையில், “கடந்த 17 ஆண்டுகளில் தொழில்துறையின் தலைமைத்துவத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான விசுவாசம் மற்றும் எங்கள் தயாரிப்புகளில் நம்பிக்கையால் சாத்தியமானது. உயர்தர படத் தரத்திற்கு அப்பாற்பட்ட மிகவும் சிறந்த சாதன அனுபவங்களை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பாதையை வகுப்போம்.”

தொடர்ந்து 17 ஆண்டுகளாக தொலைக்காட்சி சந்தையில் Samsung தலைமை நிலையை வகித்து வருவது, நுகர்வோரை மையமாகக் கொண்ட வடிவமைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாவனையாளர் அனுபவங்களுடன் மிகவும் புத்தாக்கமான தயாரிப்புகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். 2006 இல் Bordeaux தொலைக்காட்சியின் அறிமுகமானது, அதிநவீன வடிவமைப்புகள் மற்றும் இலகு-எடை வடிவ காரணி கொண்ட LCD TVகளின் முக்கிய காரணியாக ஏற்றுக்கொண்டது. உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் Samsung முதலிடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறையாகும். 2009 ஆம் ஆண்டில் தனது முதல் LED TV மற்றும் 2011 ஆம் ஆண்டில் Smart TV ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை பாவனையாளருக்கு நெருக்கமாகக் கொண்டுவந்த நிறுவனம், அந்த வெளியீடுகள் மற்றும் அதற்குப் பிறகு சந்தையில் முதல் இடத்தைப் பிடித்தது.

Samsung சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் படத்தின் தரம் மற்றும் புத்தாக்கத்தின் எல்லைகளைத் தொடர்ந்து தாண்டியது. 2017 ஆம் ஆண்டில், Samsung முதல் QLED தொலைக்காட்சியை வெளியிட்டதன் மூலம் “Next-generation display” என்ற சொல்லை வரையறுத்தது, இது தொழில்துறையில் முதல் முறையாக 100 சதவீத வண்ண அளவை அடைய Quantum Dot தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. 2018 ஆம் ஆண்டில், நிறுவனம் அற்புதமான QLED 8K ஐ அறிமுகப்படுத்தியது, அதைத் தொடர்ந்து Quantum Mini LED-ஆதரவு Neo QLED மற்றும் 2021 இல் Self-illuminating MICRO LED அறிமுகம் செய்தது. இந்த புத்தாக்கமான தொழில்நுட்பங்களின் தொகுப்பு, தொலைக்காட்சி படத்தின் தரத்தை மறுவரையறை செய்து, இதனால் ஒவ்வொரு முறையும் புதிய தொழில்துறை வரையறைகளை அமைத்தது.

மேலும், Samsung லைஃப்ஸ்டைல் தொடர் போன்ற புதிய வகைகளில் முன்னோடியாக முன்னணியில் உள்ளது. 2016 ஆம் ஆண்டில், The Serif இன் சின்னமான வடிவமைப்பில் தொடங்கி, Samsung, The Frame, The Sero, The Terrace, The Premiere மற்றும் The Freestyle போன்ற தயாரிப்புகள் மூலம் பாவனை அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்புகளுடன் தனது தயாரிப்பு வரிசையை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

2023 ஆம் ஆண்டில், பாவனையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட உள்ளுணர்வு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் புத்தாக்கமான Samsungஇன் அர்ப்பணிப்பு தொடர்கிறது. SmartThings தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் பல சாதனங்களை இணைப்பதன் மூலம் பாதுகாப்பை முதன்மையாக வைத்திருக்கும், பாவனையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் தேவைகள் இரண்டிற்கும் இடமளிக்கும் ஆழமான தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை உருவாக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில்...
நிலைத்தன்மையை அதிகரிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு...
இலங்கையில் ஜவுளித் தொழில்துறையில் புத்தாக்கம் மற்றும்...
பாணந்துறை நகரில் தனது புதிய கிளையை...
Eva and Sri Lanka Red...
HNB கார்ட் உரிமையாளர்களுக்கான பிரத்தியேக பண்டிகைக்கால...
“மிச்செலின், அதிக மதிப்புள்ள கட்டுமான...
இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடங்களை...
HNB கார்ட் உரிமையாளர்களுக்கான பிரத்தியேக பண்டிகைக்கால...
“மிச்செலின், அதிக மதிப்புள்ள கட்டுமான...
இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடங்களை...
ஆடைத் துறை சார்ந்த பெண்களின் நல்வாழ்வு...