நகைச்சுவை முதல் வணிகம் வரை:   ஜெஹான் மாலிக்கின் TikTok வளர்ச்சி

Share

Share

Share

Share

கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் உலகம் முடக்கப்பட்டபோது, பலர் தொடர்பில் இருக்கவும், படைப்பாற்றலுடன் இருக்கவும், சவாலான காலத்திலும் மகிழ்ச்சியைக் காணவும் புதிய வழிகளைத் தேடினர். சிலருக்கு, அது TikTok என்ற தளத்தைக் கண்டுபிடிப்பதாக இருந்தது. எனினும், இயல்புநிலைக்கு மாறிய பிறகு, TikTok உலகளாவிய பிரபலமாக மாறியது. 19 வயதான ஜெஹான் மாலிக் ஆரம்பத்தில் இந்த தளத்தைப் பற்றி சந்தேகப்பட்டாலும், அவரது வீடியோக்கள் விரைவில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றன. ஒரு சந்தைப்படுத்தல் இன்டர்ன்ஷிப் மூலம், அவரது தனித்துவமான நகைச்சுவை மற்றும் படைப்பாற்றல் வர்த்தகநாமங்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் வெறும் பொழுதுபோக்கு வழங்குவதற்கு அப்பால் சென்று, வர்த்தகநாமத்துக்கும் மக்களுக்கும் இடையே நேர்த்தியான பாலமாகவும் விளங்கினார். வுமைவுழம ஒரு வைரல் தளமாக மட்டுமல்ல, சரியான முறையில் பயன்படுத்தினால் அது ஒரு பெரிய வாய்ப்பாக மாறும் என்பதை ஜெஹான் நிரூபித்துள்ளார்.
ஜெஹானின் நகைச்சுவைப் பாணி அவரது உள்ளடக்கத்தின் மிகவும் தனித்துவமான அம்சமாகும். அவர் செயற்கையான தந்திரங்களை பயன்படுத்தாமல், இயற்கையான நகைச்சுவையால் பிரகாசிக்கிறார். 2020 இல் தனது படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்தபோது, TikTok அவருக்கு தன்னை வெளிப்படுத்தும் தளமாக அமைந்தது. வர்த்தகநாமங்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கும்போது, அவர் படைப்பாற்றல் சுதந்திரத்தை முக்கியமாகக் கருதுகிறார். ஜெஹானின் அணுகுமுறை எளிமையானது. மகிழ்ச்சியாக, கவர்ச்சிகரமாக படைப்புகளை உருவாக்கி, வர்த்தகநாமங்களை இயல்பான முறையில் தனது உள்ளடக்கத்தில் இணைக்கிறார். தனது பார்வையாளர்களை நன்கு அறிந்த அவர், தனது அசல் பாணியை மாற்றாமல் வெற்றிகரமான வர்த்தகநாம உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்.
ஜெஹானுக்கு, TikTok அவரது படைப்பாற்றலை வெளிப்படுத்த சிறந்த மேடையாக அமைந்தது. அவரது கூற்றுப்படி, TikTok நீங்கள் யாராக இருந்தாலும், அதாவது 19 வயது இளைஞராக இருந்தாலும் அல்லது வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தாலும் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்குகிறது. இந்த தளம் அவரை இயல்பாக இருக்க ஊக்குவித்து ரசிகர்கள் மற்றும் வர்த்தகநாமங்களுடன் இணைக்க உதவியது. தொடர்புகொள்ளக்கூடியவராகவும், நகைச்சுவையானவராகவும், உண்மையானவராகவும் இருக்கும் அவரது திறமை அவரை பிரபலமாக்கியது. ஜெஹானின் கதை, மக்கள் தங்களின் தனித்துவமான குரலைக் கண்டுபிடித்து அதை தொழிலாக மாற்ற TikTok எவ்வாறு உதவுகிறது என்பதற்கு சான்றாக உள்ளது. உண்மையான தன்மையை வெளிப்படுத்துவதன் மூலம், ரசிகர்களுடனும் வர்த்தகநாமங்களுடனும் ஆழமான உறவை உருவாக்க முடியும் என்பதை அவர் நம்புகிறார்.
ஜெஹானின் தொழில் வாழ்க்கை வளர்ந்துள்ளதைப் போலவே, அவரது வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. தற்போது அவர் இலங்கை முழுவதும் வர்த்தகநாமங்களுக்கு ஆலோசகராக செயல்பட்டு, குறுகிய வடிவ வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்க உதவுகிறார். அதிக வாய்ப்புகள் வரும்போது, அவர் தனது மதிப்புகளுக்கும் படைப்பாற்றல் பாணிக்கும் பொருந்தாத திட்டங்களை நிராகரிக்க கற்றுக்கொண்டுள்ளார். அவர் தன்னை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கும் பிரச்சாரங்களில் மட்டுமே பணியாற்றுகிறார். இந்த தேர்வு முறை அவரது நம்பகத்தன்மையைப் பராமரிக்க உதவுகிறது. ஜெஹானுக்கு, சரியான சமநிலையைக் கண்டறிந்து, தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டமும் தனது அடையாளத்துடன் ஒத்துப்போவதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
ஜெஹானின் நகைச்சுவைத் துறையில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர் தனது சாதனைகளில் நிற்காமல் தொடர்ந்து முன்னேறுகிறார். அவர் பேச முடியாத புதிய திட்டங்கள் பல வரவிருப்பதாக குறிப்பிடுகிறார். நகைச்சுவை அவரது அடையாளமாக இருந்தாலும், ஆண்களின் ஆடை அலங்காரம், இசை போன்ற புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தி வருகிறார். 2025 ஆம் ஆண்டு தனக்கு முக்கியமான ஆண்டாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் அவரது படைப்பாற்றல் மனம் என்ன செய்யும் என்று கணிக்க முடியாது, ஆனால் அவர் தொடர்ந்து தனது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, மகிழ்வித்து, ஊக்குவித்துக் கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.
Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...