மார்ச் மாதம் நடைபெற்ற உலக மீள்சுழற்சி தினத்தன்று, Coca-Cola நிறுவனம், World Vision லங்காவுடன் இணைந்து, ASPIRE திட்டத்தின் கீழ் ஏழு மீள்சுழற்சி சேகரிப்பாளர்களை கௌரவித்து, அவர்களுக்கு Bailer Machineகளை வழங்கியது. இந்த முயற்சி, சிறுதொழில் நிறுவன மீள்சுழற்சி சேகரிப்பாளர்களை நிர்வகிப்பதில் மேலும் பங்களிப்புச் செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான துறை மேற்பார்வை குழுவின் தலைவருமான கௌரவ அஜித் மன்னப்பெரும, இலங்கையில் மீள்சுழற்சியை மேலும் மேம்படுத்துவதற்கான தனது மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தினார்.