புதுமை மற்றும் உள்ளடக்கத்தில் வெற்றிகளை கொண்டாடுகிறது MAS Holdings மற்றும் இலங்கை தேசிய பாராலிம்பிக் குழு

Share

Share

Share

Share

16th November 2023: MAS Holdings மற்றும் இலங்கை தேசிய பராலிம்பிக் குழு (SLNPC) ஆகியவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பானது, பரா தடகள வீரர்களுக்கு அவர்களின் முழு திறனையும் வழங்குவதற்கான ஒரு பகிரப்பட்ட அர்ப்பணிப்புடன் கொண்ட, ஒரு ஐக்கியமான கூட்டாண்மையாக மாறியுள்ளது. நவம்பர் 16 ஆம் திகதி Hive Auditoriumஇல் நடைபெற்ற பாராட்டு விழா, தடைகளை உடைத்து விளையாட்டு உலகில் உள்ளடக்கத்தை ஆதரிக்கும் வெற்றிகரமான பயணத்தை கொண்டாடியது.

அண்மையில் நடைபெற்ற Hangzhou 2022 ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 11 பதக்க வெற்றிகளுடன் (2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம்) இலங்கைக்கு பெருமையையும் அங்கீகாரத்தையும் கொண்டு வந்த 26 இலங்கை விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

MAS Holdings மற்றும் SLPNC இடையேயான உறவு, பகிரப்பட்ட இலக்குகள் மற்றும் பரஸ்பர புரிதலின் சக்திக்கு ஒரு சான்றாக விளங்கியுள்ளது. இலங்கையில் பரா தடகள வீரர்களின் தனித்துவமான தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் புரிந்து கொள்வதில் இரு தரப்பினரும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர்.

இலங்கை தேசிய பராலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் பிரியந்த பிரிஸ் கூறுகையில், “MAS Holdings மற்றும் தேசிய பராலிம்பிக் கமிட்டிக்கு இடையேயான உறவு, குறுகிய காலமாக இருந்தாலும் வலுப்பெற்று வருகிறது, ஏனெனில் இரு அமைப்புகளும் பரா தடகள வீரர்களுக்கு அவர்களின் முழுத் திறனுக்கும் சேவை செய்வதில் பொதுவான நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன.” என தெரிவித்தார்.

MAS-ன் புதுமைத்திறன் மீதான அர்ப்பணிப்பை மேலும் பாராட்டிய பீரிஸ், “NPC, இந்த கருத்துக்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும் MAS இன் புதுமைத்திறன்களுக்கு எப்போதும் நன்றி தெரிவிக்கிறது. அண்மையில் சீனாவில் நடந்த போட்டிகளில், ஆடைகள் உங்கள் உடலின் ஒருங்கிணைந்த பகுதி என்பது தெளிவாகக் காட்டப்பட்டது, மேலும் விளையாட்டு வீரர்கள் வசதியாகவும் ஆர்வமாகவும் உணர்ந்தனர்” என அவர் மேலும் கூறினார்.

MAS Holdings மற்றும் இலங்கை தேசிய பராலிம்பிக் குழு இடையேயான ஒத்துழைப்பு வெறும் நிதியுதவியைத் தாண்டி நீண்டுள்ளது. சமூகத்தில் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட MAS இன் குறியீடான ‘Lable’, சமூகத்தில் உள்ள பழைய, காலாவதியான லேபிள்களை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பெருமை மற்றும் மரியாதைக்கு வழிவகுக்கிறது.

MAS Holdings இன் புத்தாக்கமான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைகள், பரா தடகள வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன. இந்த நிறுவனம், பரா வீரர்களுக்கு உயர் தரம், செயல்திறனை மேம்படுத்தும் விளையாட்டு உடைகள் மற்றும் பயிற்சி வசதிகளை வழங்குவதில் நீண்ட காலமாக அர்ப்பணித்துள்ளது.

நிகழ்வின் போது வெளிப்படுத்தப்பட்ட புதுமைகள் அழகியல் பற்றியது மட்டுமல்ல; அவை செயல்பாடு மற்றும் உள்ளடக்கம் பற்றியவை. Leg braces கொண்ட தடகள வீரர்களுக்கு Wider Leg திறப்புகளுடன் கூடிய Track Pants, Wheelchair டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Shorts மற்றும் தசைச் சிதைவு காரணமாக கால் அளவுகளில் ஏற்படும் மாறுபாடுகளுக்கு வசதியாக தனிப்பயனாக்கப்பட்ட நீச்சல் உடைகள் ஆகியவை ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் MAS இன் அர்ப்பணிப்புக்கான சில எடுத்துக்காட்டுகளாகும்.

“Lable” என்ற MAS இன் ஆடைகள், பராலிம்பிக் வீரர்களுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை அடைந்ததோடு, புத்தாக்கமான ஆடைகளை உருவாக்குவதில் விளையாட்டு வீரர்களின் கருத்து மற்றும் அணிபவர்களின் சோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இந்த ஒத்துழைப்பு, MASஇன் உள்ளடக்கத்தின் மதிப்பையும், அனைத்து திறனாளிகளின் தனித்துவமான தேவைகளை கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

Brewing a better planet: Bogawantalawa...
Samsung Sri Lanka Unveils Galaxy...
Dipped Products unveils the worlds-first...
Samsung Sri Lanka Unveils Grand...
සන්ෂයින් හෝල්ඩිංග්ස් ‘SUN සම්මාන’ උළෙලේදී...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV...