பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சிறந்த நிதி வருவாயை கொண்டுள்ள Softlogic Capita

Share

Share

Share

Share

SoftLogic Life, SoftLogic Finance, SoftLogic Stockbrokers மற்றும் SoftLogic Asset Management (SoftLogic Invest) ஆகிய நிறுவனங்களின் நிதிச் சேவைப் பிரிவான Softlogic Capital, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்தது.

மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில், Softlogic Capital ஆனது முந்தைய நிதியாண்டை விட 13% வளர்ச்சியைப் அடைந்து, 36.7 பில்லியன் ரூபாய்களின் ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்ய முடிந்தது. பரிசீலனைக்கு உட்பட்ட காலப்பகுதியில் 168% வளர்ச்சியுடன் 431 மில்லியன் ரூபா வரிக்குப் பிந்திய இலாபத்தையும் பதிவு செய்ய முடிந்தது. செயல்பாட்டு இலாபம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 36% அதிகரித்து, வரிக்கு முந்தைய இழப்பு நிலையுடன் 11 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது. கடந்த வருடத்தில் பதிவான 2.3 பில்லியன் ரூபா நட்டத்துடன் ஒப்பிடுகையில், 66 மில்லியன் ரூபா என குறிப்பிடலாம். இதனுடன் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட செயல்பாட்டு இலாப வரம்பு 29% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 400 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிப்பதாகக் குறிப்பிடலாம். மார்ச் 31 இல் முடிவடைந்த மதிப்பாய்வின் கடைசி காலப்பகுதியில் மொத்த வருவாய் 12% வளர்ச்சியுடன் 9.2 பில்லியன் ரூபாவாகும். வரிக்கு முந்தைய இலாபம் 763 மில்லியன் ரூபாவாக இருந்தது, இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 150% வளர்ச்சியாகும். இதன் மொத்த சொத்து மதிப்பு 69 பில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் ஒற்றை நிறுவனமாக சவாலான நிலைமைகளை எதிர்கொள்ள நேர்ந்த போதிலும், அந்த சவால்களை முறியடிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களின் விளைவாக மார்ச் 31, 2024, Softlogic Capital ஆனது வருடாந்த வருமானம் 3.1 பில்லியன் ரூபாவையும் வரிக்குப் பிந்திய இலாபமாக 535 மில்லியன் ரூபாவையும் பதிவு செய்ய முடிந்தது. நிதியாண்டின் கடைசி காலாண்டில் எடுக்கப்பட்ட பல முக்கிய நடவடிக்கைகளும் இந்த விதிவிலக்கான வளர்ச்சிக்கு வழிவகுத்தன.

இதன் கீழ், Softlogic Life குழுமத்தின் வருமானத்தில் மிகப்பெரிய பங்களிப்பாளராக மாறியது, மொத்த வருமானத்தில் 89% பங்கைக் கோரியது. காப்புறுதிச் சந்தையில் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக மாறியுள்ள Softlogic Life, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த முதல் 3 மாதங்களில் 7.2 பில்லியன் ரூபா மொத்த எழுத்தப்பட்ட தவணையை பதிவு செய்ய முடிந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான 3% வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 20% வளர்ச்சியாகும். ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் Softlogic Life, மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த கடைசி காலாண்டில் காப்புறுதித்தாரர்களுக்கு 3.4 பில்லியன் ரூபாய்களை உரிமைக் கோரிக்கைகளை செலுத்த முடிந்தது.

பல கட்டமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாகி, தனது செயல்பாடுகளை ஸ்திரப்படுத்தியுள்ள Softlogic Finance, புத்தாக்கமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வணிகத்தை புத்துயிர் பெறச் செய்து வருகிறது. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்தை ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய StockGPT Appஐ அறிமுகப்படுத்திய Softlogic Stockbrokers, புதிய வாடிக்கையாளர்களை சந்தைக்குக் கொண்டுவருவதற்கான செயல்திட்டங்கள் மற்றும் பன்முகப்படுத்தல்களை வழங்குவதில் அண்மைக்காலமாக பணியாற்றி வருகிறது. இதன் மூலம் கொழும்பு பங்குச் சந்தையில் ஆரம்பிக்கப்பட்ட கணக்குகளை 15 வீதத்தால் அதிகரிக்க முடிந்தது. யூனிட் டிரஸ்டில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கணக்குகளுடன், Softlogic Invest 43 பில்லியன் ரூபா நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களுடன் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த Softlogic Capital இன் தலைவர் திரு அசோக் பத்திரகே, “மிகவும் கடினமான சூழ்நிலையில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமான நிதியாண்டைக் குறிக்க முடிந்தது. அதற்கு கடந்த வருடத்தில் எமது செயற்பாடு மிகவும் முக்கியமானது என்பதை குறிப்பிட வேண்டும். குறிப்பாக கடினமான சவால்களை எதிர்கொண்டு, உடனடி செயற்பாடுகள், அதிக செலவு நிர்வகிப்பு நடைமுறைகள், வாடிக்கையாளரின் மாறிவரும் தேவைகள் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்கு ஏற்ற புத்தாக்கமமான நிதித் தீர்வுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினோம். அதன் மூலம், எங்களது பல்வேறு நிறுவனப் பிரிவுகளின் மூலம் இந்த வளர்ச்சியை எட்ட முடிந்துள்ளது. இத்தகைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு முன்னேறும் நமது திறனையும், நமது வணிகத் திட்டங்களின் வலிமையையும், அசைக்க முடியாத குழு அர்ப்பணிப்பையும் இது தெளிவாகப் பிரதிபலிக்கிறது என்பதைக் காணலாம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த சேவையை வழங்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், மேலும் எதிர்காலத்திலும் இந்த வழியில் வெற்றியை அடைய நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என தெரிவித்தார்.

Softlogic Capital இன் நிதிச் சேவைகளின் கோப்புறை Softlogic Life Insurance PLC ஐ உள்ளடக்கியது, இது இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் ஆயுள் காப்புறுதிக்காக உரிமம் பெற்ற காப்புறுதி நிறுவனமாகும்; Softlogic Stockbrokers (Pvt) Ltd, கொழும்பு பங்குச் சந்தையில் உரிமம் பெற்று இயங்கும் பங்குத் தரகு நிறுவனம்; Softlogic Finance PLC, இலங்கை மத்திய வங்கியின் கீழ் உரிமம் பெற்ற நிதி நிறுவனம் மற்றும் Softlogic Asset Management (Pvt) Ltd, ஒரு Unit Trust முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமம் பெற்ற முதலீட்டு முகாமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Brewing a better planet: Bogawantalawa...
Samsung Sri Lanka Unveils Galaxy...
Dipped Products unveils the worlds-first...
Samsung Sri Lanka Unveils Grand...
සන්ෂයින් හෝල්ඩිංග්ස් ‘SUN සම්මාන’ උළෙලේදී...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV...