பொருளாதார சவால்களை முறியடித்து, 2022 நிதியாண்டில் எழுதப்பட்ட மொத்த கட்டுப்பண வருவாயாக 23 பில்லியனை அடையும் Softloic Life

Share

Share

Share

Share

சவால்கள் நிறைந்த பொருளாதார பின்னணியில் சிறந்த வருடாந்தர நிதி முடிவுகளை வெளியிட்டு, Softlogic Life ஆனது 31 டிசம்பர் 2022 இல் முடிவடைந்த ஆண்டில் 23,083 மில்லியன் எழுதப்பட்ட மொத்த கட்டுப்பண வருமானத்தை (GWP) பதிவு செய்ய முடிந்தது – இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 15% வளர்ச்சியாகும். கடுமையான பொருளாதார நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் போதும், Softlogic Life நிறுவனம் தனது ஆயுள் காப்புறுதி பத்திரதாரர்களுக்கு 8,264 மில்லியன் ரூபாய் உரிமைகோரலைத் தீர்ப்பதன் மூலம் துறையில் வலுவாக உள்ளது.
டிசம்பர் 31, 2021 இல் இருந்த 16.08% உடன் ஒப்பிடும்போது Softlogic Life இன் சந்தைப் பங்கு (Market Share) 16.87% ஆக அதிகரித்துள்ளது. சந்தைப் பங்கின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன், Softlogic Life இப்போது ஆயுள் காப்புறுதி சந்தையில் இரண்டாவது பாரிய நிறுவனமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது, பல தசாப்தங்களாக தொழில்துறையில் உள்ள மற்றைய காப்புறுதி நிறுவனங்களை விட வலுவான வளர்ச்சி செயல்திறனை வெளிப்படுத்துகிறது. Softlogic Life ஆனது 2022 இல் 15% GWP வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்துள்ளது, இது காப்புறுதித் துறையின் மதிப்பிடப்பட்ட வருடாந்திர வளர்ச்சியான 9.6% ஆகும்.
இவை அனைத்தையும் கொண்டு, காப்புறுதித் துறையின் 10 வருட GWP கூட்டு வளர்ச்சி விகிதமான (10 Year Compound Annual Growth Rate) 14% உடன் ஒப்பிடும்போது Softlogic Life GWP கூட்டு வளர்ச்சி விகிதத்தை 28% பதிவு செய்துள்ளது. Softlogic Life இலங்கையின் காப்புறுதித் துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதில் நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட காலப்பகுதியில் 133,872 காப்புறுதிப் பத்திரங்களை விநியோகித்ததன் மூலம் 1.5 மில்லியன் இலங்கையர்கள் ஆயுள் காப்புறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த காலப்பகுதியில், நிறுவனத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) 2,683 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 27% வளர்ச்சியாகும். வரிக்கு முந்தைய இலாபம் (PBT) கடந்த ஆண்டு 1,065 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 36% அதிகரித்துள்ளது. விவேகமான மற்றும் திறமையான செலவு நிர்வாக முன்முயற்சிகளின் விளைவாக, 2022 இல் பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், நிறுவனத்தின் செயல்பாட்டு செலவு விகிதத்தை 22% ஆக நிறுவனம் பராமரிக்க முடிந்தது. Softlogic Life அதன் ஒழுங்குமுறை CAR தேவையான 120% ஐ விட, 287% என்ற நிலையான மூலதன போதுமான விகிதத்தை (CAR) பராமரிக்கிறது.
சேதங்களுக்கான மொத்த தொகையை நிறுவனம் வழங்கிய பிறகு, சமபங்கு மீதான வருவாய் (Return on Equity) 25% இன் குறிப்பிடத்தக்க பகுதிக்கு மற்றும் ஒரு பங்குக்கு 7.15 ரூபா வருவாயைப் பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஒரு பங்கின் தொடர்ச்சியான வருவாய் அதிகரிப்பு (Recurring Earning Per Share) 5.61 ரூபா முதல் 12.85 ரூபாவாக அமைந்திருந்தது.
நிறுவனத்தின் நிதி முடிவுகள் குறித்து Softlogic Life Insurance நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் கடினமான வணிகச் சூழலின் பல சவால்களுக்கு மத்தியிலும், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எங்களது சந்தைப் பங்கை 16.87% ஆக அதிகரித்துள்ளோம். இலங்கையின் இரண்டாவது பாரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக எங்களது நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நாங்கள் சிறப்பாக செயற்ட்டுள்ளோம். எங்களின் மூலோபாய திட்டமிடல் இந்த சாதனைகளை அடைய உதவியது மற்றும் எங்களின் வலுவான மூலோபாய திட்டமிடல் கடினமான சவால்களுக்கு மத்தியிலும் இந்த வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க வழிவகுத்தது.” என தெரிவித்தார்.
Softlogic Life அதன் ஆரம்பம் முதல், இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை சரியான நேரத்தில் புத்தாக்கங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மேம்படுத்துவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒரு அமைப்பாகும். தானாக ஒரு நாள் உரிமைக் கோரிக்கை வழங்குதல், ஒரு நிமிட மருத்துவமனையில் சேரும் உரிமைக் கோரிக்கை வழங்குதல், 100% டிஜிட்டல் மயமாக்கப்பட்ட விற்பனை அணுகுமுறை, தன்னியங்கிய ஆயுள் காப்புறுதி பத்திர வெளியீடு மற்றும் மொபைல் மைக்ரோ காப்புறுதி தீர்வுகள் போன்ற இதுவரை கண்டிராத தனித்துவமான புத்தாக்கமான காப்பீட்டுத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை மேம்படுத்த முடிவதுடன் சந்தையில் தங்கள் போட்டி நிலையை மேலும் வலுப்படுத்த முடிந்தது. மேலும், CA, CMA போன்ற மதிப்புமிக்க நிதி விருது வழங்கும் நிகழ்வுகளில் நிறுவனத்தின் சாதனைகள், எல்லா நேரங்களிலும் நிதி அறிக்கையின் மிக உயர்ந்த தரங்களுக்கு இணங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. 2022 ஆம் ஆண்டில் வருடாந்தர நிதி அறிக்கையிடலில் ஒட்டுமொத்த சிறந்து விளங்கியதற்காக Softlogic Life தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெள்ளி விருதைப் பெற்றது. பல வருடங்களாக பெருமையை உயர்த்திய இலங்கையின் பிரமாண்டமான நிறுவனங்களையும் விட முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2019 மற்றும் 2021 Effie விருதுகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக “ஆண்டின் சிறந்த பிராண்ட்” என கௌரவிக்கப்பட்டது, 2021 SLIM பிராண்ட் எக்ஸலன்ஸ் விருது வழங்கும் நிகழ்வு மற்றும் SLIM Digi விருது வழங்கும் நிகழ்வில் பல தங்க விருதுகளையும் வென்றுள்ளது.
தனித்துவமான தொழில்நுட்ப அணுகுமுறைகள் மற்றும் புத்தாக்கமான சேவைகளுடன் இலங்கையர்களுக்கு ஏற்ற வகையில் அதிநவீன ஆயுள் காப்புறுதி தீர்வுகளை கொண்டு வருவதன் மூலம் Softlogic Life ஒரு வருடத்தில் இவ்வாறான சிறப்பை அடைய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும். இந்த விருதுகள் அனைத்தும் Softlogic Life தனது வாடிக்கையாளர்களுக்கு நிலவும் சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியான சேவையை வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.
இது குறித்து Softlogic Lifeஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் இப்திகார் அஹமட் கூறுகையில், இந்த நிதியாண்டு நாட்டிற்கும் நிறுவனத்திற்கும் மிகவும் கடினமான ஒன்றாக அமைந்தது. எவ்வாறாயினும், முன்னோக்கிய வணிக உத்திகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட உற்சாகமான புத்தாக்கங்களை செயல்படுத்துவதன் மூலம், Softlogic Life இந்த கடினமான சூழலில் சவால்களை சமாளித்து விதிவிலக்கான முடிவுகளை அடைய முடிந்தது. இந்த நேரத்தில், எங்களின் மொத்த புதுப்பித்தல் கட்டுப்பணங்கள் எங்களின் வரவு செலவை விட அதிகமாகிவிட்டன. இந்த சவாலான காலத்தில் இது ஒரு பெரிய சாதனை. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு சலுகைகளை வழங்குவதில் எங்களின் வலுவான கவனம் காரணமாக, தனியார் மற்றும் கார்ப்பரேட் துறைகள் ஆகிய இரண்டும் எங்களை தங்களுக்கு விருப்பமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளன. நாங்கள் 10 வருடங்களாக ஒரு தனித்துவமான பயணத்தில் ஈடுபட்டுள்ளோம், மேலும் எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் விதிவிலக்கான மதிப்பை வழங்குவதன் மூலம் காப்பீட்டுத் துறையில் உச்சத்தை எட்டியுள்ளோம்.” என தெரிவித்தார்.
Softlogic Life Insurance PLC ஆனது Softlogic Capital PLC இன் துணை நிறுவனமாகும், மேலும் இது சுகாதார, வர்த்தகம், தகவல் மற்றும் தொடர்பாடல், சுற்றுலா, வாகனம் மற்றும் நிதிச் சேவைத் துறைகளில் ஆர்வத்துடன் இலங்கையில் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குதாரர்களில் உலகளாவிய முதலீட்டாளர் Leapfrog Investments அடங்கும்.

Jungle Kitchen, with roots in...
TikTok Strengthens Measures to Combat...
ලංකා වැවිලිකරුවන්ගේ සංගමයේ 170 වැනි...
170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது...
வணிக விசா பிரச்சினை குறித்து அவசர...
වින්දනීය අත්දැකීමක් එක් කරමින් Coke...
ව්‍යාපාරික වීසා ගැටළුව සම්බන්ධයෙන් කඩිනම්...
නවතම රූපවාහිනී අත්දැකීමක් ඇස් අභියසට...
වින්දනීය අත්දැකීමක් එක් කරමින් Coke...
ව්‍යාපාරික වීසා ගැටළුව සම්බන්ධයෙන් කඩිනම්...
නවතම රූපවාහිනී අත්දැකීමක් ඇස් අභියසට...
Planters’ Association of Ceylon Celebrates...