மொரவக்கா கிளைக்கான புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை ஆரம்பித்த HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் 59ஆவது தங்கக் கடன் மத்திய நிலையம், இல. 7, நில்வல கட்டிடம், மொரவக்கவில் HNB FINANCEஇன் மொரவக்க கிளை வளாகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மொரவக்க, பிட்டபெத்தர மற்றும் தெனியாக உள்ளிட்ட பகுதிகளின் தங்கக் கடன் சேவைகளுக்கான தற்போதைய தேவைக்கு தீர்வாக, நிறுவனம் இந்த புதிய HNB FINANCE தங்கக் கடன் மத்திய நிலையத்தை நிறுவியுள்ளது. Gold Loan, Gold Plan மற்றும் VIP Gold Loan சேவைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை துல்லியமாகக் கண்டறிந்து, நிதி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த தங்கக் கடன் தீர்வுகள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். HNB FINANCE தங்கக் கடன் சேவையானது மூன்று நிமிடங்களில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் ஒரு பவுன் தங்கத்திற்கான அதிகபட்ச முன்பணத் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய தங்கக் கடன் சேவை அலகு, தவணை முறையில் பணம் செலுத்தும் திறனுடன் நம்பகமான கொடுக்கல் வாங்கலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

“மொரவக்கவில் வசிக்கும் கிராமப்புற மக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்ட விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த மக்கள் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு HNB FINANCE இன் நிதிச் சேவைகளில் ஈடுபட்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமாறு அவர்களை அழைப்பதுடன் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட நிதிச் சேவைகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என HNB FINANCE இன் தங்கக் கடன் துறையின் தலைவர் லக்ஷ்மன் ரணசிங்க தெரிவித்தார்.

HNB FINANCE தங்கக் கடன் சேவையின் கீழ் செயல்படும் Gold Plan சேவையானது தங்கக் கடன் துறையில் ஒரு புரட்சிகரமான சேவையாகும், மேலும் HNB FINANCE வாடிக்கையாளர் வாங்க விரும்பும் தங்க ஆபரணங்களுக்கு கடனை வழங்குகிறது மற்றும் வாடிக்கையாளர் இந்த கடன் தொகையை மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் சிறந்த நிதித் திட்டமாகும், ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தங்க இருப்புக்களை அதிகரிக்கவும், தங்களுடைய எதிர்கால தங்க ஆபரண தேவைகளுக்காக தங்கத்தை வாங்கவும் பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த செயல்பாடாகும். மேலும், HNB FINANCE அறிமுகப்படுத்திய VIP Gold Loan, Gold Loan சேவை வணிக மற்றும் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு மிகவும் உகந்த நிதித் தீர்வு என கூறலாம்.

“எங்கள் ஒவ்வொரு தங்கக் கடன் மத்திய நிலையங்கள் மூலமாகவும் அதிகபட்ச வாடிக்கையாளர் திருப்தியைப் பேணுவதற்காக, எங்கள் சேவைத் தரத்தை உயர் மட்டத்தில் பராமரிப்பதே நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும்” என லக்ஷ்மன் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

 

SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
Samsung Sri Lanka Hosts B2B...
Atlas PlayPalz, ශ්‍රී ලංකාවේ මුල්...
Sunshine Holdings celebrates employee excellence...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
Sri Lanka’s coconut industry faces...