ரிஷப் பண்ட்க்காக பாக்கிஸ்தான் வீரர்களின் பிரார்த்தனைகள் – நெகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

Share

Share

Share

Share

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட் பயணித்த மகுழூந்து கட்டுப்பாட்டை கட்டுப்பாட்டை இழந்து நேற்று விபத்துக்குள்ளாகியிருந்தது.

பலத்த காயங்கள் அடைந்த அவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் க்கு பாக்கிஸ்தான் அணியின் வீரர்களும் விரைவில் குணமடைவதற்கான பிரார்த்தனைகளை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் ஷா அப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் விரைவில் மீண்டு வா என டுவிட்டர் இல் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக், சீக்கிரமாக எழுந்து வாருங்கள் சகோதரரே, உங்களுக்காக நிறைய பிரார்த்தனைகளை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம், முன்னாள் வீரர் ஹசன் அலி, ” ரிஷப் பண்ட் நீங்கள் விரைந்து குணமடைவீர்கள் என நம்புகிறேன், நீங்கள் இறைவன் துணையுடன் சீக்கிரம் குணமடைவீர்கள், களத்தில் உங்களின் அதிரடியை காண வேண்டும் எனக்குறிப்பிட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பிரார்த்தனைகள் இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
Samsung Sri Lanka Hosts B2B...
Atlas PlayPalz, ශ්‍රී ලංකාවේ මුල්...
Sunshine Holdings celebrates employee excellence...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
Sri Lanka’s coconut industry faces...