லங்கா பிரீமியர் லீக் 2023 இன் உத்தியோகபூர்வ உள்ளடக்க பங்காளியாக TikTok; 60 மில்லியன் பார்வைகளைக் கடந்த #LPL2023

Share

Share

Share

Share

TikTok, Skyfair.news 2023 லங்கா பிரீமியர் லீக் (LPL) உடன் உத்தியோகபூர்வ உள்ளடக்க பங்காளியாக கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மையானது #LPL2023 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி LPL இன் மறக்கமுடியாத தருணங்களைக் காண்பதற்கு அனுமதிப்பதுடன், இதுவரை 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த skyfair.news LPL 04 போட்டித் தொடரில் ஜூலை 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கண்டியில் 15 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளத்தில் தற்போது TikTok பாவனையாளர்கள் செயலில் இருக்க வாய்ப்பு உள்ளது. போட்டிக்கு முந்தைய மற்றும் பிந்தைய விவரங்கள் முதல் சிறப்பம்சங்கள் வரை அனைத்திலும், TikTok இலங்கை கிரிக்கெட் ரசிகர்களையும் குறுகிய வீடியோ படைப்பாளர்களையும் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும். இது முன்னோடியில்லாத விளையாட்டு உற்சாகத்தையும் பொழுதுபோக்கையும் அளிக்கிறது. போட்டிகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவலைப் பெற முடியும், மேலும் #LPL2023 ஐப் பின்தொடரலாம் மற்றும் அதே ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வீடியோக்களையும் உருவாக்கலாம்.

இந்த கூட்டாண்மை மூலம், TikTok இலங்கையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான தளத்தை உருவாக்க முயற்சிக்கிறது. மேலும், லங்கா பிரீமியர் லீக்கின் உயர்தர கிரிக்கெட் அனுபவத்தை வழங்குவதற்கும், இளையோரின் திறமைகளை வளர்ப்பதற்கும் உள்ள அர்ப்பணிப்பு, கிரிக்கெட்டின் மிகவும் உற்சாகமான தருணங்களில் கொண்டாட, இணைக்க மற்றும் சமூகத்தை உருவாக்க நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஒன்றிணைக்கும் TikTok இன் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது.

“TikTok இயங்குதளம் கிரிக்கெட் உள்ளடக்கத்தை பெரும்பாலான பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான சிறந்த கருவியாகும். TikTok உடனான இந்த ஒத்துழைப்பு நிச்சயமாக skyfair.news 2023 லங்கா பிரீமியர் லீக் உலகளவில் வளர உதவும். 2023 LPL மற்றும் TikTokஇன் பிரபலம் ஆகியவை இந்த நிகழ்வை மிகப்பெரிய வெற்றியாக மாற்றும்.” என LPL இன் அதிகாரப்பூர்வ உரிமையாளரான IPG குழுமத்தின் நிறுவுனர் மற்றும் CEO அனில் மோகன் சங்கதர் கூறினார்.

“2023 லங்கா பிரீமியர் லீக்கின் உத்தியோகபூர்வ உள்ளடக்க பங்காளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டாண்மை மூலம், இந்த போட்டியின் அனுபவத்தை TikTok ரசிகர்களுக்கும் அதே வழியில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். TikTok கடந்த இரண்டு ஆண்டுகளில் விளையாட்டு உள்ளடக்கத்தின் சுறுசுறுப்பான மையமாக மாறியுள்ளது, மேலும் ரசிகர்கள் விளையாடக்கூடிய ஆன்லைன் மைதானத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். இலங்கையின் மிகவும் பிரபலமான விளையாட்டு நிகழ்வை உருவாக்குவதற்கும் அதில் ஈடுபடுவதற்கும் இலங்கை சமூகத்திற்கு புதிய வழிகளை வழங்குது மிகவும் முக்கியமானதாகும் கிரிக்கெட் என்பது இலங்கையில் மிகவும் பிரபலமான விளையாட்டாகும், மேலும் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க கிரிக்கெட் நிகழ்வில் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். TikTok கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி இலங்கையில் உள்ள ஏனைய விளையாட்டுகளுக்கும் ரசிகர்களின் வீடாக மாறி வருகிறது.” என TikTokஇன் தெற்காசியாவின் உள்ளடக்க நடவடிக்கைகளின் தலைவர் பூஜா தத்தா கூறினார்.

கிரிக்கெட் மீதான இலங்கையர்களின் அன்பு எல்லையற்றது மற்றும் TikTok உடனான இந்த கூட்டு நம்பமுடியாத, இதுவரை கண்டிராத விளையாட்டு உள்ளடக்கத்தை தூண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

தகுதியற்ற உள்ளடக்கத்திலிருந்து உயர்ந்த பாதுகாபை வழஙகும்...
வாகன நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்த UNIMO...
உங்களது வங்கி விருப்பத்திற்கேற்ப ‘HNB Self-onboarding’ஐ...
Kaspersky Safe Kids proves superior...
Samsung Unveils Galaxy M14 LTE...
Dipped Products Accelerates Global Expansion...
HNB Finance இன் “ஊக்குவிக்கும் அபிவிருத்தி...
புகைப்பட தலைப்பு | உலக சுற்றுச்சூழல்...
Dipped Products Accelerates Global Expansion...
HNB Finance இன் “ஊக்குவிக்கும் அபிவிருத்தி...
புகைப்பட தலைப்பு | உலக சுற்றுச்சூழல்...
HNB රථ වාහන ෆිනෑන්ස් සේවාවේ...