வட மாகாணத்தில் தமது சேவையை மேம்படுத்த, யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய மருந்து விநியோக மையத்தைத் திறக்கும் Healthguard Distribution

Share

Share

Share

Share

இலங்கையின் ஒரேயொரு முழுமையாக வளர்ச்சியடைந்த தேசிய மருந்து விநியோக நிறுவனமான Healthguard Distribution, தனது ஏழாவது பிராந்திய விநியோக மையத்தை (RDC) அண்மையில் யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்தது. இந்த மையம் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில், 414, பலாலி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த இடம் அனைத்து முக்கிய சாலைகளுக்கும் அருகில் உள்ளதால், மக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி மருந்துகளை விநியோகிப்பதையும் வழங்குவதையும் எளிதாக்குகிறது.

பல ஆண்டுகளாக வட மாகாணத்தில் சேவை செய்து வரும் Healthguard Distributionக்கு, இப்பிராந்தியத்தின் சுகாதாரத் தேவைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் போக்குகள் பற்றி நல்ல புரிதல் உள்ளது. அனைத்து ஒழுங்குமுறை விதிகளுக்கும் அமைய, யாழ்ப்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த விநியோக மையம், விநியோக சங்கிலியை வலுப்படுத்தவும், சேவைகளை மேம்படுத்தவும், மேலும் இப்பிராந்தியத்திற்கு சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் முன்னேற்றத்திற்கான நீண்டகால ஒத்துழைப்பை வழங்கும் நிறுவனத்தின் உறுதியான படியாக இது உள்ளது.
நிறுவனத்திற்கு ஏற்கனவே மேல், மத்திய, தென், வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் விநியோக மையங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் இந்த புதிய மையத்துடன், Healthguard Distribution க்கு இப்போது வட மாகாணத்தில் முழுமையான விநியோக வசதி கிடைத்துள்ளது, இது இப்பிராந்தியத்தில் உள்ள பிற மருந்தகங்களுக்கு நேரடியாக அணுக உதவுகிறது. இந்த வசதி தேசிய ஒழுங்குமுறைகளைப் பூர்த்தி செய்கிறது மற்றும் NMRA இன் தரமான விநியோக நடைமுறைகள் பலவற்றைப் பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய விநியோக மையம் 5,000 சதுர அடி பரப்பளவில், 24 மணி நேரமும் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட களஞ்சிய வசதிகள் மற்றும் மின்சார ஜெனரேட்டர் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வசதி மருந்துகளை பாதுகாப்பாகவும் தரமான நிலையில் களஞ்சியப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது, மேலும் இப்பிராந்தியத்தில் மருந்துகளை பாதுகாப்பாகவும் நம்பகமாகவும் விநியோகிக்கும் திறனை மேம்படுத்துகிறது.

மேலும், இதன் மூலம் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களுக்கு எந்த தடையும் இல்லாமல் அணுக வழிவகுக்கும் வகையில் Healthguard Distribution உதவுகிறது.
நிறுவனம் தனது செயல்பாடுகளை மேலும் திறம்பட நிர்வகிக்க உயர்ந்த ERP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு சில்லறை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக பற்றுச்சீட்டை அனுப்புவதற்கான வசதியை வழங்குகிறது, மேலும் விநியோக சங்கிலியின் ஆரம்பம் முதல் முக்கியமான தகவல்களை அணுகும் வாய்ப்பையும் தருகிறது. இதன் மூலம், மருந்துகளை கையாளுதல் மற்றும் விநியோகிப்பு செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும், வெளிப்படையாகவும், விரைவாகவும் முடிக்க உதவுகிறது. மேலும், இந்த மையம் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், பிராந்திய வணிக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலமும் உள்நாட்டு பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறது.

தனது மருந்து விநியோக வலையமைப்பிற்குள் அண்மையில் இணைந்துள்ள இந்த மையம் குறித்து கருத்து தெரிவித்த Healthguard Distributionஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷான்த பண்டார அவர்கள், “மருந்து விநியோகம் சுகாதாரப் பணியின் முக்கியமான அங்கமாகும். யாழ்ப்பாணத்தில் எங்கள் வசதிகளை மேம்படுத்துவது, இலங்கை முழுவதும் இந்த அமைப்பை வலுப்படுத்துவதற்கான எங்கள் நீடித்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த புதிய மையம் எங்கள் விநியோக சங்கிலியின் வேகம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது, மேலும் தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களுக்கு கூட அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பாகவும் திறம்படவும் பெற உதவுகிறது. இந்த வசதி விநியோக செயல்பாடுகளில் மேம்பாடு மட்டுமல்ல – அனைத்து இலங்கையர்களுக்கும் நியாயமான சுகாதார சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதில் எங்கள் அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகிறது.” என தெரிவித்தார்.

24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன், இந்த புதிய யாழ்ப்பாண மையம் வட மாகாணம் முழுவதும் சேவைகளை மேம்படுத்தும். மேலும் இது மருந்தகங்களுக்கான மருந்துகள் கையிருப்பில் உள்ள மருத்துவர்கள், மருந்தகங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உட்பட 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தமது சேவையை வழங்கவுள்ளது. இந்த மையம் யாழ்ப்பாணம் மட்டுமல்லாது வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

Healthguard Distribution தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வலுவான நற்பெயரை கொண்டுள்ளதுடன், இலங்கையில் மருந்து விநியோகத்திற்கான நம்பகமான கூட்டாளியாக செயல்படுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மருந்து நிறுவனங்கள், வேகமான, துல்லியமான மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைய மருந்து விநியோகத்திற்காக Healthguard நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளன. வலுவான அடிப்படை வசதிகள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் திறமையான பணியாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம், வளர்ச்சி அடைவதற்கும் நாட்டின் சுகாதாரத் தேவைகளின் மாறிவரும் போக்குகளைப் பூர்த்தி செய்வதற்கும் தயாராக உள்ளது.

Colombo Comedy Show 2025 to...
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for...
JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...
BYD Automobile සමාගමේ ප්‍රකාශය –...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...
BYD Automobile සමාගමේ ප්‍රකාශය –...
Atlas Pays Tribute to Teachers...