உணவு என்பது வெறும் ஊட்டச்சத்து மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு கதை, ஒரு நினைவு மற்றும் ஒரு தொடர்பும் இருக்கலாம். TikTok இல் ”Stories of Lash” ஐ உருவாக்கிய ரித்மியின் வெற்றிக்குப் பின்னாலும் இதுதான் உள்ளது. பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வீட்டில் தன் தாயார் சமைத்த உணவுகளுடனும், உணவகங்களின் அனுபவங்களுடனும் தனது பயணத்திற்கு பலம் சேர்த்துக்கொண்ட ரித்மி, இன்று 439k பின்தொடர்பவர்களையும் (followers), 13.8 மில்லியன் Likes களையும் பெற்று தனது சுவையான அனுபவங்களை பலருடன் பகிர்ந்து கொள்ளும் திறனைப் பெற்றுள்ளார்.
‘நான் சிறு வயதிலிருந்தே உணவு மற்றும் பானங்கள் தொடர்பாக புதிய விடயங்களைக் கண்டறிவதில் அதிக ஆர்வம் காட்டினேன். என் அம்மா நல்ல சமையல்காரர். அவர் வீட்டில் எல்லா வகையான உணவுகளையும் தயாரிப்பார். அப்பா எங்களை புதிய உணவகங்களுக்கு அழைத்துச் செல்வார். அந்த ஒவ்வொரு தருணமும் என் பயணத்திற்கு பெரிய அனுபவமாக இருந்தது’ என்று அவர் தனது நினைவுகளை மீட்டார்.
‘நான் என் துணைவருடன் காதல் உறவை ஆரம்பித்த பிறகு, நாங்கள் புதிய உணவு வகைகளை முயற்சிக்க உணவகங்களுக்கும், Cafe க்களுக்கும் சென்றோம். எனது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால், TikTok இல் எனது உள்ளடக்கங்களை வெளியிட முடிவு செய்தேன். நான் வழங்கிய பரிந்துரைகளை என் பின்தொடர்பவர்கள் எவ்வளவு பாராட்டுகிறார்கள் என்பதை அப்போதுதான் பார்த்தேன்’ என்று வுமைவுழம தளத்திற்கு அவரது வருகை மற்றும் பிரபலத்தின் ஆரம்பத்தையும் அவர் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.
அவரது உள்ளடக்கங்கள் பல பின்தொடர்பவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. மேலும், உணவு தொடர்பான ரித்மியின் ஆலோசனைகளைப் பெற அவர்கள் முயற்சிக்கின்றனர். அதனால்தான் TikTok இல் மேலும் பல உள்ளடக்கங்களை வெளியிட ரித்மி முடிவு செய்தார்.
ரித்மி ”Stories of Lash” மூலம் கொண்டு வருவது இதுதான். இலங்கையின் வீதியோர உணவுகளின் சுவையிலிருந்து விருந்துகளின் கவர்ச்சி வரை அனுபவங்களைப் பெறும் ரித்மி, அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தனது பயணத்திற்கான அனுபவமாக மாற்ற முயற்சிக்கிறார்.
‘வீதியோர உணவுகளிலிருந்து விருந்துகள் வரை, ஒவ்வொரு உணவிலும் அதற்கே உரித்தான கதை, சுவை மற்றும் கலாச்சாரம் உள்ளது. அந்த பன்முகத்தன்மை என் பயணத்திற்கு உதவியாக இருந்தது. வீதியோர உணவுகள் விரைவானது, வேடிக்கையானது மற்றும் சுவை நிறைந்தது. ஒரு உணவு வேளையில் படைப்பாற்றலும் திறமையும் அடங்கியுள்ளது. வித்தியாசமான இந்த சந்தர்ப்பங்கள் வழங்கும் அனுபவங்கள் மூலம் அவற்றின் நுட்பமான வேறுபாடுகளைக் கண்டறிய முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,’ என அவர் தெரிவித்தார்.
‘உணவு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் வலுவான பிணைப்பைக் கொண்ட இலங்கை மக்களுக்கு, உணவு அனுபவங்களை ஆராய்ந்து அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. #wheretoeat, #srilankanfood, #slfoodreview மற்றும் #foodie போன்ற ஹாஷ்டேக்குகள் மூலம், சாப்பிட சிறந்த இடத்தைக் கண்டுபிடிப்பதை எளிதாகியுள்ளன.’ இது ரித்மியின் கருத்து.
பெரும்பாலும் சிங்கள மொழியில் தனது வீடியோ உள்ளடக்கங்களை வழங்குவதால், பார்வையாளர்களுடன் வலுவான உறவை உருவாக்க அவர் திறன் பெற்றுள்ளார். மேலும், பல பார்வையாளர்கள் அவரது உள்ளடக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். ஏனெனில் அவர்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தனது தாய் மொழியில் பேசுவதன் மூலம் இலங்கையின் உணவுத் துறையை முன்னேற்றுவதற்கு அவர் செயல்பட்டுள்ளார். மேலும், தனது பரிந்துரைகள் மூலம் மிகவும் தனிப்பட்ட மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் உறவை உருவாக்க முடிந்துள்ளது.
ரித்மி தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்கும்போது, இலங்கையின் உணவு கலாச்சாரத்தை வளப்படுத்தும் சுவைகள், கதைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவர் எதிர்பார்க்கிறார். ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் வெற்றியை அடைந்துள்ள அவர், தனது திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடையை வழங்கியதற்காக TikTok இற்கு நன்றி தெரிவித்தார்.
‘ஒரு படைப்பாளியாக எனது பயணத்தை மாற்றிய TikTok, நான் ஒருபோதும் நினைத்திராத வகையில் மக்களுடன் இணைய எனக்கு வாய்ப்பளித்தது’ என அவர் தெரிவித்தார். உணவு தொடர்பான அவரது முதல் வெளியீட்டிலிருந்து வெற்றி வரையிலான பயணம், ஆர்வத்தின் திறன், நேர்மை மற்றும் சரியான தளத்தின் சிறந்த சான்றாகக் குறிப்பிடலாம். ஒரு நேரத்தில் ஒரு வீடியோவாக வெளியிடும் ரித்மி,”Stories of Lash” மூலம் உணவைப் பகிர்வதோடு மட்டுமல்லாமல், உறவுகளை உருவாக்கி, படைப்பாற்றலை மேம்படுத்தி, இலங்கையின் சிறந்தவற்றைக் காட்சிப்படுத்தவும் அவர் செயல்படுகிறார்.