ஹரின் டி எஸ் விஜயரத்னவை பணிப்பாளர் சபைக்கு நியமித்துள்ள Ceylon Tobacco நிறுவனம்

Share

Share

Share

Share

Ceylon Tobacco Company PLC (CTC) பெப்ரவரி 01, 2024 புகழ்பெற்ற கூட்டாண்மைத் தலைவர் ஹரின் டி எஸ் விஜயரத்னவை அதன் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமித்துள்ளது. இந்த நியமனம் மூலம், CTC பணிப்பாளர்கள் சபையில் தலைவர் சுரேஷ் ஷா, முகாமைத்துவப் பணிப்பாளர் மோனிஷா ஆபிரகாம், குஷான் டி அல்விஸ், கேரி டாரன்ட், ருமனா ரஹ்மான், ஸ்டூவர்ட் கிட், தௌஹிட் அக்பர் மற்றும் ஹரின் டி எஸ் விஜயரத்ன ஆகியோர் அடங்குவர்.

விஜேயரத்ன இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் இணை அங்கத்தவர் மற்றும் UKஇன் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினராக உள்ளார். Bahrain Investcorp வங்கி, Grindlays Bahrain வங்கி, Ernst & Young Bahrain மற்றும் Ernst & Young Sri Lanka ஆகிய நிறுவனங்களில் பெறப்பட்ட வெளிப்பாட்டின் மூலம் பொது நிர்வாகம், நிதி முகாமைத்துவம் மற்றும் தணிக்கை ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.

அவர் DFCC வங்கி மற்றும் Trans Asia Hotels PLC இன் பணிப்பாளராகவும் இந்த நிறுவனங்களின் தணிக்கைக் குழுக்களின் தலைவராகவும் உள்ளார். MAS ஹோல்டிங்ஸின் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.

இலங்கை Nanotechnology (Pvt) Limitedஇன் (SLINTEC) பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியையும் அவர் வகித்துள்ளார் மற்றும் Union Assurance PLCஇன் சுயாதீன பணிப்பாளர், அதன் சபை தணிக்கை மற்றும் இணக்கக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார்.

மேலும், அவர் Gamini Corea Trustஇன் பணிப்பாளராக பணியாற்றுகிறார் மற்றும் SLINTEC Endowment Trust Fundஇன் அறங்காவலராக உள்ளார். அவர் Avastha Financial ஆலோசனை சேவைகளின் நிறுவுணர்/ உரிமையாளராகவும், மனநல ஆலோசனைக் குழுவான Kalyanaவின் இணை நிறுவனராகவும் உள்ளார்.

விஜேயரத்னவின் அனுபவம் மற்றும் புத்திசாலித்தனத்துடன் CTC இன் கூட்டாண்மை நிர்வாகம், கணக்காய்வு அளவுகோல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்துவதை நிறுவனமும் நிர்வாகமும் அன்புடன் வரவேற்கிறது.

118 வருட வரலாற்றைக் கொண்ட CTC கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகவும் பெறுமதிமிக்க நிறுவனங்களில் ஒன்றாகும். CTC இலங்கையில் தனது பயணத்தின் ஒரு பகுதியாக, அதன் உயர்மட்ட நிலையை தொடர்ந்து பலப்படுத்துவதுடன் அனைத்து பங்குதாரர்களுக்கும் மேலும் வளர்ச்சியை ஏற்படுத்தும்.

 

JAAF මෙරට ඇඟලුම් ක්ෂේත්‍රයේ රැකියා...
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam”...
Renowned Global Experts to Inspire...
Sri Lanka Apparel achieves 5%...
Softlogic Life to introduce AI...
සිය කටහඬ භාවිත කරමින් TikTok...
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha...
‘වත්මන් පොල් අර්බුදය විසඳීම සඳහා...
සිය කටහඬ භාවිත කරමින් TikTok...
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha...
‘වත්මන් පොල් අර්බුදය විසඳීම සඳහා...
நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...