ஹோமாகமை கிளைக்கான புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை அமைத்த HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் புதிய தங்கக் கடன் மத்திய நிலையம், HNB FINANCEஇன் ஹோமாகமை கிளை வளாகத்தில், இல. 62/A ஹைலெவல் வீதி ஹோமாகமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த ஆகியோர் கலந்துகொண்டதுடன் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஹோமாகமை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் தங்கக் கடன் சேவைகளுக்கான தற்போதைய தேவைக்கு தீர்வாக, நிறுவனம் இந்த புதிய HNB FINANCE தங்கக் கடன் மத்திய நிலையத்தை அமைத்துள்ளது. Gold Loan, Gold Plan மற்றும் VIP Gold Loan சேவைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை துல்லியமாகக் கண்டறிந்து, நிதி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த தங்கக் கடன் தீர்வுகள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். HNB FINANCE தங்கக் கடன் சேவையானது மூன்று நிமிடங்களில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் ஒரு பவுன் தங்கத்திற்கான அதிகபட்ச முன்பணத் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய தங்கக் கடன் சேவை அலகு, தவணை முறையில் பணம் செலுத்தும் திறனுடன் நம்பகமான கொடுக்கல் வாங்கலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

“ஹோமாகமை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புற மற்றும் கிராமியப் பொருளாதாரத்தில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு சரியான தனிப்பட்ட நிதித் தேவைகளை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை HNB FINANCE இன் நிதிச் சேவைகளுடன் இணைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அழைக்கிறோம்.” என HNB FINANCE இன் தங்கக் கடன் பிரிவின் பிரதானி லக்ஷ்மன் ரணசிங்க தெரிவித்தார்.

HNB FINANCE தங்கக் கடன் சேவையின் கீழ் செயல்படும் Gold Plan சேவையானது தங்கக் கடன் துறையில் ஒரு புரட்சிகரமான சேவையாகும், மேலும் HNB FINANCE வாடிக்கையாளர் வாங்க விரும்பும் தங்க ஆபரணங்களுக்கு கடனை வழங்குகிறது மற்றும் வாடிக்கையாளர் இந்த கடன் தொகையை மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் சிறந்த நிதித் திட்டமாகும், ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தங்க இருப்புக்களை அதிகரிக்கவும், தங்களுடைய எதிர்கால தங்க ஆபரண தேவைகளுக்காக தங்கத்தை வாங்கவும் பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த செயல்பாடாகும். மேலும், HNB FINANCE அறிமுகப்படுத்திய VIP Gold Loan, Gold Loan சேவை வணிக மற்றும் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு மிகவும் உகந்த நிதித் தீர்வு என கூறலாம்.

“எங்கள் ஒவ்வொரு தங்கக் கடன் மத்திய நிலையங்கள் மூலமாகவும் அதிகபட்ச வாடிக்கையாளர் திருப்தியைப் பேணுவதற்காக, எங்கள் சேவைத் தரத்தை உயர் மட்டத்தில் பராமரிப்பதே நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும்” என லக்ஷ்மன் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

 

Brewing a better planet: Bogawantalawa...
Samsung Sri Lanka Unveils Galaxy...
Dipped Products unveils the worlds-first...
Samsung Sri Lanka Unveils Grand...
සන්ෂයින් හෝල්ඩිංග්ස් ‘SUN සම්මාන’ උළෙලේදී...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV...