அன்னையர் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற TikTok வழங்கும் எளிய வழிமுறைகள்

Share

Share

Share

Share

வேலைப்பளு மிகுந்த ஒரு நாளின் இறுதியில், கையடக்கத் தொலைபேசியின் அழைப்புகளால் சோர்ந்துபோய் வீட்டிற்கு வரும்போது, நாம் முதலில் தேடும் முகம் ‘அம்மா’. எவ்வித விளக்கங்களும் இன்றி நாம் நிம்மதியைப் பெறும் ஒரே இடம் அவரிடம்தான். அவர் நமக்காக எடுத்து வைக்கும் ஒரு துண்டு கேக் அல்லது நாம் பாதுகாப்பாகச் சேர்ந்துவிட்டோமா என வினவும் ஒரு தொலைபேசி அழைப்பு என, அவரது அன்பு மிகச்சிறிய விடயங்களில் கூட ஒளிந்துள்ளதை நாம் அறிவோம். இருப்பினும், இத்தகைய உன்னதமான அன்பிற்கு கைமாறாகச் செய்யும் அன்னையர் தினத்தை, வெறும் ஒரு பரிசுடன் அல்லது ஒரு புகைப்படத்தைப் பதிவிடுவதோடு நாம் ஏன் மட்டுப்படுத்த வேண்டும்?

தற்போது இந்தச் சிந்தனையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெறும் பொருட்களை வாங்குவதைத் தாண்டி, அம்மாவுக்கு உண்மையிலேயே எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுக்கலாம் என மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மாற்றத்திற்கு TikTok ஒரு முக்கிய ஊக்கியாக மாறியுள்ளது. இது வெறும் உத்வேகத்தை மட்டும் வழங்காமல், அம்மாவுக்காக நாம் செய்யக்கூடிய ஆக்கபூர்வமான வழிகளையும் எமக்குக் கற்றுத்தருகிறது.

“Ammi, I Thought of You” – ஒரு நாளையும் தாண்டி நிலைத்திருக்கும் அன்புப்பரிசு
அன்னையர் தினப் பரிசு என்பது கடைசி நேரத்தில் எதையாவது வாங்கி அழகாகக் பொதி செய்து கொடுப்பது மட்டுமல்ல. அது அந்த ஒரு நாளைத் தாண்டியும் அவருக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும். உதாரணமாக, உங்கள் அம்மா வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர் எனில், அவருக்குப் விருப்பமான 12 புத்தகங்களை வாங்கி, ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகத்தைப் பிரித்துப் படிக்கும் வகையில் தனித்தனியாகப் பொதி செய்து கொடுக்கலாம். அவற்றுடன் ஒரு புத்தகக் குறிப்பான் (bookmark), ஒரு மெழுகுவர்த்தி அல்லது அவர் எதிர்பாராத ஒரு மாதத்தில் வாசிப்பதற்காக ஒரு சிறு கடிதம் போன்றவற்றைச் சேர்ப்பது அந்தப் பரிசை இன்னும் சிறப்பாக்கும்.

எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பது எனத் தெரியவில்லையெனில், TikTok இல் உள்ள #BookTok சமூகம் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. அவரது ரசனைக்கு ஏற்ற புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே நீங்கள் அவர் மீது காட்டும் உண்மையான அக்கறையாகும்.

“Ammi, Have Some Fun”– அவருக்காகவே ஒரு முழு நாள்
அம்மாவின் வாழ்க்கையில் தனக்காகவே அவர் செலவிடும் நாட்கள் மிகக்குறைவு. அடுத்த வேலை என்ன, யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்ற கவலையின்றி அவர் ஒரு நாளைக் கழிக்க நாம் வழிவகை செய்ய வேண்டும். இதற்கு TikTok இல் உள்ள #SriLankaTikTok, #ColomboFoodies மற்றும் #SpaDay போன்ற ஹேஷ்டேக் குறிச்சொற்கள் பெரும் உதவியாக உள்ளன.
விளம்பரங்களை மட்டும் நம்பாமல், பிற பயனர்களின் உண்மையான அனுபவங்கள் மற்றும் விமர்சனங்கள் ஊடாக சிறந்த உணவகங்கள், Spa நிலையங்கள் அல்லது கொழும்பைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கு இடங்களை நீங்கள் கண்டறியலாம். நீங்கள் ஒவ்வொரு சிறு விடயத்தையும் திட்டமிடுவதால், அவர் எவ்வித சிரமமுமின்றி அந்த நாளை முழுமையாக அனுபவிக்க முடியும்.

“Ammi, Let’s Spend Time Together”– அவசரமின்றி அழகான தருணங்கள்
அம்மாவுடன் நேரத்தைச் செலவிடுவது எப்படி என்று குழப்பமாக இருந்தால், TikTok அதற்கும் எளிய தீர்வுகளைத் தருகிறது. #DIYSriLanka அல்லது #CookingTogether போன்ற குறிச்சொற்களைப் பயன்படுத்தி, வீட்டிலேயே ஓவியம் வரைதல், சமையல் செய்தல் அல்லது மட்பாண்டக் கலை போன்ற செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.

இத்தகைய செயல்பாடுகள் ‘அடுத்து என்ன செய்வது?’ என்ற தயக்கத்தை நீக்கி, அவருடன் மனமிட்டுப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் அதிக நேரத்தை உருவாக்கும். இறுதிவரை அவரிடம் எஞ்சுவது அந்த அழகான தருணங்களும் உரையாடல்களுமே ஆகும்.

“Ammi, I’ve Got This from Now On”– நீங்கள் அளிக்கும் ஒரு வாக்குறுதி
இது ஒரு நாள் மட்டும் செய்யும் உதவி அல்ல. மாறாக அம்மாவின் அன்றாடச் சுமையைக் குறைக்கும் ஒரு நிரந்தரமான மாற்றமாகும். அவர் அமைதியாகச் செய்து முடிக்கும் வீட்டு வேலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ‘அம்மா, இனி மளிகைப் பொருட்களை வாங்குவது எனது பொறுப்பு’ அல்லது ‘மின்சாரக் கட்டணங்களை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று நீங்கள் பொறுப்பேற்பது அவருக்குப் பெரும் நிம்மதியைத் தரும்.

இவற்றைச் சரியாகத் திட்டமிட #MealPrep, #HomeHacks அல்லது #MoneyManagement போன்ற TikTok பகுதிகள் உங்களுக்குச் சிறந்த வழிமுறைகளைக் கற்றுத்தரும். நீங்கள் பொறுப்பேற்ற காரியத்தை அவர் நினைவூட்டத் தேவையில்லாத வகையில் செம்மையாகச் செய்து முடிப்பதில்தான் உண்மையான அன்பு உள்ளது.

இந்த அன்னையர் தினம் என்பது பெரிய பரிசுகளைப் பற்றியது மட்டுமல்ல. இது அம்மா நமக்காக இத்தனை காலம் செய்த தியாகங்களை அங்கீகரித்து, அவருக்குப் பக்கபலமாக நிற்பதைப் பற்றியது. அவர் எவ்வித கவலையுமின்றி ஓய்வெடுக்கவும், பிறரால் பராமரிக்கப்படுவதன் சுகத்தை உணரவும் நாம் இடமளிக்க வேண்டும். அவர் எப்போதும் உங்களுக்காகச் செய்வதைப் போலவே, இன்று நீங்கள் அவரை மிக மென்மையாகக் கவனித்துக் கொள்ளும் ஒரு நாளாக இது அமையட்டும்.

2026 ලංකා ප්‍රීමියර් ලීග් තරඟාවලිය...
Prime සමූහය LMD වෙතින් මෙරට...
FACETS Sri Lanka 2027: ஒரு...
Shantha Bandara reappointed SLCPI President...
500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை...
“Just a Content Creator?” Tesaarah...
City of Dreams Sri Lanka...
LANKATILES and the Geoffrey Bawa...
“Just a Content Creator?” Tesaarah...
City of Dreams Sri Lanka...
LANKATILES and the Geoffrey Bawa...
உலகளாவிய சைபர் பாதுகாப்புப் தரவரிசையில் Sophos...