ஆசியாவின் புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவு அனுபவம் City of Dreams Sri Lanka-வில் அறிமுகம்

Share

Share

Share

Share

ஆசிய பிராந்தியத்தில் பலரிடையே மிகவும் புகழ்பெற்ற பாரம்பரிய உணவுப் பண்பாடான ‘Hot Pot’ மூலம், மற்றொரு புதிய சுவையை அனுபவிக்கும் வாய்ப்பை தற்போது City of Dreams Sri Lanka வழங்கியுள்ளது.

அங்குள்ள ‘Spice 8’ உணவகத்தில் பெறக்கூடிய இந்த விசேடமான அனுபவத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் உரையாடல் சார்ந்த உணவுப் பண்பாடாகும். மேசையின் நடுவே கொதித்துக்கொண்டிருக்கும் சூப் பாத்திரத்தைச் சுற்றி அமர்ந்து, தங்களுக்கு விருப்பமான புதிய உணவுப் பொருட்களைத் தாங்களே அவித்து உணவோடு சேர்த்துக்கொள்வதே இதன் மரபாகும். அனைத்து வசதிகளுடனும் கூடிய சூழலில், 24 மணி நேரமும் இந்த நிகரற்ற அனுபவத்தைப் பெற அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் தற்போது வாய்ப்பு உருவாகியுள்ளது.

சீனா மற்றும் ஆசியாவின் ஏனைய பிராந்தியங்களில் வாழும் பலருக்கும் ‘Hot Pot’ என்பது மிகவும் பரிச்சயமான ஒரு உணவுப் பழக்கமாகும். உணவைப் பகிர்ந்து கொள்வது, நட்பு ரீதியான உரையாடல்கள் மற்றும் மேசையைச் சுற்றி ஒன்றுகூடி அனைவரும் இணைந்து உணவைத் தயாரிப்பது ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். மிகவும் எளிமையான அதேவேளையில் புதுமையான இந்த அனுபவத்தை இலங்கை மக்களுக்கு City of Dreams Sri Lanka அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கு, நறுமணமிக்க மற்றும் சுவையான சூப் அடங்கிய பாத்திரம் மேசையில் வைக்கப்பட்டு, மிதமான தீயில் கொதிக்க வைக்கப்படும். பின்னர் வருகை தரும் விருந்தினர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப உயர்தர இறைச்சி, புதிய மீன், காய்கறிகள் மற்றும் பிற மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுத்து, அந்தச் சூப்பில் போட்டு உணவருந்தும் போதே அவித்துக்கொள்ளலாம். உணவு தயாரானதும், பல்வேறு வகையான சாஸ்கள் (sauces) மற்றும் சுவையூட்டிகளுடன் கலந்து சுவைக்க முடியும். உங்கள் விருப்பத்திற்கேற்ப சுவைகளை மாற்றி அமைத்துக்கொள்ள முடிவதே இதன் தனித்துவமாகும்.

City of Dreams Sri Lanka-வின் கேமிங் தளத்தில் (gaming floor) அமைந்துள்ள Spice 8 உணவகத்தில் இந்த வித்தியாசமான அனுபவத்தைப் பெறலாம். முறையாக தயாரிக்கப்பட்ட சூப், உயர்தர மூலப்பொருட்கள் மற்றும் ஏராளமான சுவையூட்டிகளுடன், வருகை தரும் விருந்தினர்கள் வெவ்வேறு சுவைகளை முயற்சித்துப் பார்க்கவும், உணவு வேளை முழுவதும் தங்களுக்கே உரித்தான சுவைக் கலவைகளை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

இங்கு சிலர் மிதமான சுவையுடைய சூப் வகைகளை விரும்புவதுடன், சிலர் சற்று காரம் அதிகமான சூப் வகைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். பல்வேறு மூலப்பொருட்களின் சுவைகளை ருசித்துப் பார்ப்பதும், புதிய சுவைகளை முயற்சித்துப் பார்ப்பதும், மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் ஏனையோருடன் அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் இக்கலாச்சாரத்தின் சிறப்பம்சமாகும்.

உணவருந்துவதற்கு அப்பால், ஒற்றுமையையும் பிணைப்பையும் அதிரகிரிக்கும் ஒரு வாய்ப்பாக ‘Hot Pot’ உணவைக் குறிப்பிடலாம். இந்தச் சூப் பாத்திரம் உணவருந்தும் மேசையின் மீது வைக்கப்பட்டிருப்பதால், வருகை தரும் விருந்தினர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி நீண்ட நேரம் இருக்கவும், நட்புடன் கலந்துரையாடவும், உணவு தயாராகும் போதே அந்த அனுபவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.

சீன விருந்தினர்கள் பெரிதும் விரும்பும் பாரம்பரிய சுவையை அனுபவிக்கும் வாய்ப்பு இங்கு கிடைப்பதுடன், இது இலங்கையர்களுக்கும் முற்றிலும் புதியதொரு உணவுப் பழக்கவழக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நாள் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருப்பதால், மதிய உணவுக்கோ, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் உட்கொள்ளும் இரவு உணவுக்கோ அல்லது நள்ளிரவு உணவுக்கோ கூட ‘Hot Pot’ உணவை அனுபவிக்க முடியும். நிபந்தனைகள் உட்பட்டவை.
City of Dreams Sri Lanka இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த புதிய சுவையான அனுபவத்தைப் பெறவும், முன்பதிவுகளுக்கும் 0112 22 0000 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.

2026 முதல் அரையாண்டில் ரூ. 7.2...
ஆசியாவின் புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவு...
இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator...
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல்...
BYD Launches RACCO in Japan,...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z...