மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையர்களின் வாய் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னணி வர்த்தக நாமமான DENTA, அதன் தனித்துவமான ‘வளரும் புன்னகைக்கான பல் பராமரிப்பு’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு வாய் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அவர்களுக்காக இலவச பற்சிகிச்சை மருத்துவ முகாம்களை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இது பாடசாலை மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவே, குழந்தைகளுக்கான பல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை DENTA நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த Personal care of Darley Butler & Company Ltd. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. Ghaffar Ghouse, ‘ஒரு அழகிய புன்னகையால் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாய்வழி ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறந்த வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக, இலவச பற்சிகிச்சை மருத்துவ முகாம்களை நடத்துவதன் மூலம் மட்டுமல்லாமல், பல் ஆரோக்கியம் பற்றிய அறிவு, அதற்குத் தேவையான உபகரணங்களை வழங்கி, ஆரோக்கியம் மட்டுமன்றி சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வையும் வழங்கி அவர்களை ஊக்குவிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்’ என்று கூறினார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் பற்சிகிச்சை மருத்துவ முகாம்கள் மூலம் பல் நோய்கள் மற்றும் அவற்றை தடுப்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இதுவரை 105,892 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள 135 பாடசாலைகள், வடமத்திய மாகாணத்தில் உள்ள 37 பாடசாலைகள் என ஒட்டுமொத்தமாக இதுவரை 172 பாடசாலைகளில் பற்சிகிச்சை மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதற்கு DENTA நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பல் ஆரோக்கிய பிரச்சினைகளைக் குறைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல் மருத்துவர்கள், ஆலோசகர்கள், நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இதில் 8 தொடக்கம் 14 வயது வரையிலான (தரம் 4-தரம் 8 வரையிலான) பாடசாலை மாணவர்கள் இதில் இணைக்கப்படுகின்றனர்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு பொருத்தமான வயதினரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு காரணம் குறித்த வயதில் அவர்களின் தற்காலிக பற்கள் விழுந்த பிறகு புதிய நிலையான பற்கள் வளர்வதன் ஆரம்பமாகும். வாழ்நாள் முழுவதும் அந்த நிலையான பற்களைப் பாதுகாத்து மிகச்சிறந்த வாய் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு இந்த நிகழ்ச்சித் திட்டம் பெரும் உதவியாக இருக்கும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பும் கிடைத்தது.
அரசின் அங்கீகரிக்கப்பட்ட பல் மருத்துவ நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெறும் பற்சிகிச்சை மருத்துவ முகாம்களில் மாணவர்களின் பற்கள் பரிசோதனை செய்யப்படுவதுடன், பல் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியமான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், வாய் ஆரோக்கியம் தொடர்பிலான கருத்தரங்குகளில் மாணவர்களின் வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. குறிப்பாக அழகான புன்னகையை பராமரிக்க பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் மற்றும் வாய்வழி நோய்களைத் தடுக்க பின்பற்ற வேண்டியவை எவை என்பது குறித்து மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டலை இது வழங்குகிறது.
இது தொடர்பில் DENTA நிறுவனத்தின் வர்த்தக நாமப் பிரிவின் முகாமையாளர் ஷெஹானி மார்டினஸ் கருத்து தெரிவிக்கையில், ‘ சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு வாய்வழி ஆரோக்கிய பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்கள் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எமது இந்த சமூக நலன் நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று புன்னகை நிறைந்த இலங்கையை உருவாக்குவது எமது இலக்காக உள்ளது’ என்று கூறினார்.
இந்த சமூக நலன் நிகழ்ச்சித் திட்டத்தில் இன்னொரு முக்கிய நடவடிக்கை எதுவெனில், மாணவர்களின் பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இலவசமாக DENTA பல் துலக்கிகளை வழங்குவதாகும். இளம் வயதினர்களின் வளரும் பற்கள் மற்றும் அவர்களது கைகளுக்கு உகந்தவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட DENTA TEEN பல் துலக்கிகளை இலவசமாக வழங்குவதன் மூலம் மிகச் சிறந்த வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும், பல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி, பயன்படுத்தப்பட்ட பல் துலக்கிகளை சரியான முறையில் சேகரித்து, சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அகற்றுவது தொடர்பில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் DENTA நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தவிர, பயன்படுத்தப்பட்ட பல் துலக்கிகளை மறுசுழற்சி செய்வதற்கான சேகரிக்கும் திட்டத்தை DENTA நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன் மூலம் இதுவரை 22,000 க்கும் மேற்பட்ட பல் துலக்கிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலில் சேரும் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைத்து, நிலைத்த சுற்றுச்சூழலை உருவாக்குகின்ற DENTA நிறுவனத்தின் முயற்சியாக இதைக் குறிப்பிடலாம்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் ‘ DENTA CARE’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே DENTA நிறுவனத்தின் நோக்கமாகும். அதற்காக சுகாதார அமைச்சுடனும், கல்வி அமைச்சுடனும் ஒன்றிணைந்து இலங்கையர்களின் வாய் ஆரோக்கியத்திற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், DENTA நிறுவனம் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கியுள்ளது. இதன் மூலம், இலங்கையர்களின் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை DENTA நிறுவனம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.