டிஜிட்டல் யுகத்தில் ரமழான்: சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பகிரப்படும் ரமழானின் தூய விழுமியங்கள்

Share

Share

Share

Share

டிஜிட்டல் தளங்கள் மத நம்பிக்கையின் ஆழத்தைக் குறைக்கின்றன அல்லது புனிதமான வழிபாட்டு முறைகளை வெறும் காட்சிப் பொருளாக மாற்றுகின்றன என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இருப்பினும், இலங்கையில் இன்றைய ரமழான் அனுபவங்கள் இந்த எண்ணத்திற்கு அப்பாற்பட்ட மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் ஆழமான மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இலங்கையில் ரமழான் என்பது நீண்டகாலமாகவே அமைதியான ஒற்றுமைக்கும், முஸ்லிம் அல்லாத நண்பர்களுடன் இணைந்து கொண்டாடப்படும் ஒரு காலமாகவும் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் அண்டை வீடுகளுக்கு கஞ்சி மற்றும் சமோசாக்களைப் பகிர்ந்து கொள்வதுடன், இஃப்தார் ஏற்பாடுகளில் கைகொடுப்பது போன்ற எளிமையான செயல்களின் ஊடாக வெளிப்பட்ட அந்த பிணைப்பு, இன்று மிகவும் வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் பரஸ்பரம் உணர்வுப்பூர்வமாகப் பகிரப்படும் ஒரு அனுபவமாகப் பரிணமித்துள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் ரமழானை வெறும் ஒரு பாரம்பரியமாகப் பார்க்காமல், அதன் பின்னாலுள்ள விழுமியங்களை ஆழமாகப் புரிந்துகொண்டு மற்றைய சமூகங்களுடன் இணைந்து அதனைத் தமது வாழ்வின் ஒரு அங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றனர். குறிப்பாக TikTok போன்ற சமூக வலைத்தளங்கள், ரமழான் குறித்த உரையாடல்கள் மற்றும் கல்விசார் பகிர்வுகளுக்கான புதிய பரந்த வெளியை உருவாக்கியுள்ளன.

ரமழான் மாதம் என்பது பொதுவாக நோன்பு நோற்பது மற்றும் மாலை நேர ஒன்றுகூடல்களுடன் மாத்திரமே பொதுவெளியில் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், பல முஸ்லிம் குடும்பங்களுக்கு இது ‘ஸகாத்’ எனப்படும் கட்டாயக் கடமையை நிறைவேற்றும் காலமுமாகும். இது வெறும் தற்காலிக கொடை அல்ல, மாறாக செல்வப் பகிர்வு மற்றும் நிதியியல் பொறுப்புக்கூறல் சார்ந்த ஒரு திட்டமிடப்பட்ட கடமையாகும். டிஜிட்டல் யுகத்தில் இந்தக் கடமையை நிறைவேற்றும் முறை வியக்கத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது.

TikTok தளத்தைப் பயன்படுத்தும் படைப்பாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஸகாத் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் மற்றும் அதன் நோக்கம் என்ன என்பதை மிகவும் தெளிவான மற்றும் சுருக்கமான வீடியோக்கள் மூலம் விளக்குகின்றனர். இது வரம்புக்குட்பட்ட சமூக வட்டங்களைத் தாண்டி, புவியியல் ரீதியாகப் பரந்துபட்ட மக்களிடம் இக்கோரிக்கைகளைக் கொண்டு சேர்ப்பதுடன், சிறிய அளவிலான உதவித் திட்டங்களையும் பெரிய அளவில் முன்னெடுக்க உதவுகிறது. அத்துடன், நேரடி ஒளிபரப்புகள் மற்றும் பதிவுகள் ஊடாக நிதி விநியோக நடைமுறைகளை வெளிப்படுத்துவது, இன்றைய தலைமுறையினரிடையே இக்கடமை குறித்த நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் மென்மேலும் வலுப்படுத்துகிறது.

நோன்பு என்பது ரமழானின் மிக முக்கியமான அடையாளமாக இருந்தாலும், அதன் உண்மையான சாரம் தனிமனித ஒழுக்கத்துடன் தொடர்புடையது. நாவடக்கம், பொறுமை, இறைசிந்தனை மற்றும் விடாமுயற்சி போன்ற குணாதிசயங்களை நோன்பு வலியுறுத்துகிறது. பாரம்பரியமாகப் பல தசாப்தங்களாக மறைமுகமாகப் பேணப்பட்டு வந்த இந்த ஒழுக்கப் பண்புகள், இன்று டிஜிட்டல் தளங்கள் ஊடாகப் பொதுவெளியில் ஆக்கபூர்வமாகப் பகிரப்படுகின்றன.

முஸ்லிம் படைப்பாளிகள் நவீன இலங்கையின் பரபரப்பான பணிச்சூழலுக்கு மத்தியில் எவ்வாறு நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர் என்பதை யதார்த்தமாக வெளிப்படுத்துகின்றனர். அலுவலகப் பணிகள் அல்லது கல்விச் செயல்பாடுகளுக்கு மத்தியில் நோன்பின் புனிதத்தைப் பேணுவது குறித்து அவர்கள் பகிரும் தனிப்பட்ட அனுபவங்கள், மற்றைய சமூகங்களுக்கு இது குறித்த ஆழமான புரிதலையும், மரியாதையையும் ஏற்படுத்துகின்றன. TikTok- இன் தனித்துவமான தகவல் பரப்பல் முறை, இந்தப் புனிதமான கடமையை வெறும் கடமையாக மாத்திரமன்றி, ஒரு பொதுவான கலாச்சார விழுமியமாகச் சமூகத்தில் நிலைநிறுத்த உதவுகிறது.

ரமழான் மாதம் இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார ஓட்டத்திலும் பாரம்பரியமாகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வர்த்தக நேர மாற்றங்கள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்படும் இஃப்தார் நிகழ்வுகள் என்பன நீண்டகாலமாக நிலவி வரும் நடைமுறைகளாகும். இன்று இந்த நடைமுறைகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இன்னும் துரிதமாகவும், வெளிப்படையாகவும் பகிரப்படுகின்றன. சிறிய அளவிலான வீட்டுத் தொழில் முயற்சியாளர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை இந்த மாதத்தின் விழுமியங்களுக்கு ஏற்ப எவ்வாறு தமது செயல்பாடுகளை மாற்றிக்கொள்கின்றன என்பதைத் திறம்பட வெளிப்படுத்துகின்றன. இது வணிக நிறுவனங்களுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டித்தன்மையையும், சமூகப் பொறுப்புணர்வையும் உருவாக்குகிறது.

வெறும் வணிக இலாபத்திற்காக அன்றி, ஈகை மற்றும் சகிப்புத்தன்மையை முன்னிலைப்படுத்தும் பதிவுகள் சமூகத்தில் அதிக வரவேற்பைப் பெறுவதுடன், வணிகத் துறையைச் சமூகக் கட்டமைப்போடு ஒன்றிணைக்கவும் உதவுகின்றன.
இறுதியாக, இலங்கையில் ரமழான் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மாத்திரம் சொந்தமான ஆன்மீக அனுபவமாக இருக்காமல், அது ஒட்டுமொத்த தேசத்தினதும் ஒரு அங்கமாகத் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. சமூக வலைத்தளங்கள் ஆன்மீக விழுமியங்களைச் சிதைப்பதற்குப் பதிலாக, அவற்றை இளைய தலைமுறையினரிடம் இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் கொண்டு சேர்க்கும் ஒரு நவீனப் பாலமாகச் செயல்படுகின்றன. திட்டமிடப்பட்ட ஈகை, ஒழுக்கமான கட்டுப்பாடு மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு போன்ற ரமழானின் அடிப்படைத் தூண்கள் இன்று நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் மென்மேலும் வலுப்பெறுகின்றன. ஒரு பன்முகத்தன்மை கலாச்சரத்தைக் கொண்ட இலங்கையில், டிஜிட்டல் இணைப்பு என்பது பிரிவினைகளைத் தவிர்த்து, பரஸ்பர மரியாதையையும், கலாச்சாரப் புரிதலையும் வலுப்படுத்தும் ஒரு முக்கியக் கருவியாக மாறியுள்ளது. பாரம்பரியம் என்பது நேர்மையுடன் பகிரப்படும்போது, அது தனது ஆழத்தை இழக்காமல் புதிய எல்லைகளைச் சென்றடைகிறது என்பதற்கு இன்றைய ரமழான் ஒரு சிறந்த உதாரணமாகும்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...