இலங்கையின் காப்புறுதித் துறைக்கு மிகச் சிறப்பாகச் சேவை செய்வதற்காக, தனது வலைத்தளத்தைப் புதிய முகப்புடன் வெளியிடும் IASL

Share

Share

Share

Share

இலங்கை காப்புறுதிச் சங்கம் (IASL) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான www.iasl.lk ஐப் புதிய முகப்புடன் வெளியிடுவதாக அண்மையில் அறிவித்தது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் இடத்தில் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதற்கும், தகவல்களைப் பெறுவதை எளிதாக்குவதற்கும், துறையில் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான அச்சங்கத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

டிஜிட்டல் மயமாக்கல் தரங்களை உயர்த்துவதைத் தனது முக்கிய பொறுப்பாக IASL இந்தப் புதிய வலைத்தளத்தின் மூலம் சிறப்பாக நிரூபிக்கிறது. இலங்கையின் காப்புறுதித் துறை வேகமாக டிஜிட்டல் மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு, காப்புறுதிச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கங்களை நோக்கிப் பயணிப்பதால், ஏனைய உறுப்பினர் காப்புறுதி நிறுவனங்கள், காப்புறுதிப் பத்திரதாரர்கள், ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் நிறுவன கூட்டாண்மை பங்காளிகள் அனைவருக்கும் நம்பகமானதும், எளிதில் அணுகக்கூடியதுமான தகவல் மூலமாக IASL வலைத்தளம் செயல்பட வேண்டியுள்ளது.

தெளிவு, எளிதில் அணுகக்கூடிய தன்மை மற்றும் முக்கியத்துவம் ஆகிய மூன்று அடிப்படைக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எளிமை மற்றும் கைப்பேசிகளுக்கு இசைவான (mobile-responsive) வடிவமைப்பு காரணமாக, எவரும் தங்களுக்குத் தேவையான தகவல்களை மிக எளிதாகக் கண்டறிய முடியும். காப்புறுதித் துறையின் புதிய போக்குகள், ஒழுங்குமுறை புதுப்பித்தல்கள் மற்றும் உறுப்பினர் சேவைகள் போன்ற முக்கிய அம்சங்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் இங்கு காட்டப்பட்டுள்ளன. அந்த விடயங்கள், நிபுணர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரே மாதிரியாகப் புரிந்துகொள்ளக் கூடிய எளிய மொழியில் வழங்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். மேலும், ஒரு தகவல் மையம், தொடர்ந்து புதுப்பிக்கப்படும் செய்திப் பகுதி மற்றும் SEO கருவியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த வலைத்தளம் எப்போதும் சுறுசுறுப்பானதும், தனித்துத் தெரியக்கூடியதுமான தகவல் மூலமாக மாற்றப்பட்டுள்ளது.

புதிய முகப்புடன் வெளியிடப்பட்ட IASL வலைத்தளம் குறித்துக் கருத்துத் தெரிவித்த தலைவரும் HNB Assurance நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லசித விமலரத்ன அவர்கள் கூறுகையில், “இந்த வலைத்தளம், காப்புறுதி நிறுவனங்கள், ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் நாங்கள் சேவை செய்யும் பொதுமக்களை ஒன்றிணைக்கும் மத்திய நிலையமாக நாங்கள் ஆற்றும் பங்கில் மேலும் ஒரு முக்கியமான படியாகும். ஒரு காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்தாலும், முதன்முறையாகக் காப்புறுதி வாங்குபவராக இருந்தாலும், அல்லது காப்புறுதி பத்திரதாரராக இருந்தாலும், எவரும் தங்களுக்குத் தேவையான தகவல்களை இங்கு எளிதாகக் கண்டறிவதற்கும், இந்நாட்டின் காப்புறுதித் துறை வழங்கும் சிறப்பான பங்களிப்பைப் புரிந்துகொள்வதற்கும் நாங்கள் விரும்புகிறோம்.” என தெரிவித்தார்.

“நாம் தகவல்களைத் தொடர்புபடுத்தும் விதமும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அந்தத் தகவல்கள் எவ்வளவு எளிதில் கிடைக்கக்கூடும் என்பதுமான விடயம் பொது நம்பிக்கையை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானதாகும். எங்கள் காப்புறதித் துறையை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் பேணுவதற்கும், நாங்கள் பாதுகாக்கும் மக்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும் IASL கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த வலைத்தளத்தை அறிமுகப்படுத்தலாம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வலைத்தளத்தை நவீனப்படுத்துவதன் மூலம், வலுவான வர்த்தக நாமத்திற்கும் நிலையான வடிவமைப்பும் கொண்டதாக IASLக்கு மேலும் சிறப்பான தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) உடனான தற்போதைய ஒத்துழைப்பு, காப்புறுதி நடுவர் முறைமையை (Insurance Ombudsman Scheme) நிறுவுவதற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள காப்புறுதிப் பத்திரதாரர்களின் பாதுகாப்பை உயர்த்துவதற்கு ஆற்றப்படும் பங்கு உள்ளிட்ட சங்கத்தின் ஒட்டுமொத்த செயற்பாடும் இங்கு ஒரே இடத்தில் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

சங்கத்தின் அனைத்து உறுப்பு நிறுவனங்களுக்கும், தொழில்துறை கூட்டாளிகளுக்கும், காப்புறுதிப் பத்திரதாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் www.iasl.lk மூலம் இந்த வலைத்தளத்தை அணுகுமாறு இலங்கை காப்புறுதிச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா பிறீமியர் லீக் 2026: கொழும்பு...
Witness Sports Alliance LLC takes...
வியட்நாம் எவ்வாறு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை...
TikTok சமையல் மூலம் புத்தாண்டு நினைவுகளை...
CCWE Fashion Week மற்றும் சர்வதேச...
කාන්තා ව්‍යවසායිකාවන් උදෙසා දකුණු ආසියාවේ...
Janashakthi Insurance PLC සමාගමේ ස්වාධීන...
71% of organizations suffered at...
කාන්තා ව්‍යවසායිකාවන් උදෙසා දකුණු ආසියාවේ...
Janashakthi Insurance PLC සමාගමේ ස්වාධීන...
71% of organizations suffered at...
Bairaha Farms PLC Raises the...