இலங்கையில் மின்சார வாகனப் புரட்சி: 20,000 வாகன சேவைகளை பூர்த்தி செய்து BYD மற்றும் JKCG சாதனை

Share

Share

Share

Share

இலங்கையில் BYD நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), கடந்த ஆண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 20,000 வாகன சேவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தச் சாதனையானது, இலங்கையில் புதிய சக்தி வாகனங்கள் (NEVs) எந்தளவிற்கு வேகமாகவும், பரவலாகவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அத்துடன், அதிகரித்து வரும் இந்தத் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில், நாடு முழுவதும் வலுவான விற்பனைக்குப் பின்னரான சேவை உட்கட்டமைப்பை உருவாக்குவதற்காக JKCG Auto மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீடுகளையும் இது பிரதிபலிக்கிறது.

இலங்கையில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் சற்று மேலான காலப்பகுதியில், நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் புதிய வாகனங்களில் சுமார் 37 சதவீதத்தையும், மொத்த மின்சார வாகனப் பதிவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினையும் BYD தன்வசப்படுத்தியுள்ளது.

புதிய சக்தி வாகனங்களுக்கான இந்த அதிகமான வரவேற்பிற்கு இணையாக, தனது விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பை விரிவுபடுத்துவதில் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம் தீவிரமாக முதலீடு செய்துள்ளது. தற்போது இந்த வலையமைப்பானது கொழும்பு, வத்தளை, கண்டி, காலி, குருநாகல் மற்றும் அம்பாறை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள சேவை நிலையங்கள் ஊடாக விரிவான சேவைகளை வழங்கி வருகின்றது.

தனது அண்மைய விரிவாக்கத்தைத் தொடர்ந்து, JKCG நிறுவனம் தற்போது நாடு முழுவதும் நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குச் சேவையளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் BYD நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விற்பனைக்குப் பின்னரான சேவை நிபுணர்களைக் கொண்ட குழுவினால் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தச் சேவை வலையமைப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக, சீதுவை பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய பிரத்தியேக வாகன திருத்தகம் (Bodu Shop) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு சேவையளிப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றன. மேலும், இக்கட்டமைப்பை முழுமைப்படுத்தும் நோக்கில், ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம் நாடு முழுவதும் 43-க்கும் மேற்பட்ட அதிவேக சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளதுடன், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 7kW ஹோம் சார்ஜர் ஒன்றையும் வழங்குகிறது. இதன் மூலம் BYD உரிமையாளர்கள் எங்கு சென்றாலும் சார்ஜிங் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்காக இலங்கைக்கு வருகை தந்த BYD நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய விற்பனைப் பிரிவின் பொது உதவி முகாமையாளரும், விற்பனைக்குப் பின்னரான சேவை நிலையத்தின் பணிப்பாளருமான பீட்டர் ஃபெங் கருத்துத் தெரிவிக்கையில், “BYD நிறுவனத்தின் தெற்காசியப் பயணத்தில் இலங்கை ஒரு மிக முக்கியமான சந்தையாக உருவெடுத்துள்ளது. இங்கு மின்சார வாகனங்களின் பயன்பாட்டு விகிதமானது எமது எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“ஒரே வருடத்திற்குள் 20,000 வாகன சேவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். எமது இந்தப் பயணத்திற்கு ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம் சரியான ஒரு பங்காளராக இருக்கும் என்ற பெரும் நம்பிக்கையை இது எமக்கு அளிக்கிறது. அவர்களின் செயல்பாடுகளை நேரில் கண்டறிந்த பின்னர், இங்குள்ள விற்பனைக்குப் பின்னரான சேவைத் திறனைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கும், எமது இலங்கை வாடிக்கையாளர்களுக்கான அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் நாம் ஆர்வமாக உள்ளோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன மேலும் கூறுகையில், “இந்த மைல்கல்லை எட்டியதையிட்டு நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். நாம் முதன்முதலில் BYD உடன் இணைந்த போதே, இந்த வர்த்தகநாமம் அனைத்து இலங்கை மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் உறுதியாக இருந்தோம். அவ்வாறு இருந்தபோதிலும், வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாம் கண்டுவரும் வரவேற்பு, எமது ஆரம்பக்கால மதிப்பீடுகளையும் கடந்துள்ளது. இந்த அதிகப்படியான தேவையானது எங்களை இன்னும் வேகமாகவும், சிறப்பாகவும் வளர்ச்சியடையத் தூண்டியுள்ளது. இந்த உத்வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதோடு, விற்பனைக்குப் பின்னரான சேவையில் இலங்கை மாத்திரமன்றி தெற்காசியாவிற்கே ஒரு முன்மாதிரியான தரத்தை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்றார்.

நாடு தழுவிய ரீதியிலான 24 மணிநேர அவசர வீதி உதவிச் சேவை, துரித விநியோகத் திறன் கொண்ட 10,000 சதுர மீட்டர் பரப்பளவிலான பிரம்மாண்டமான உதிரிப்பாகக் களஞ்சியம் மற்றும் நீர்கொழும்பு, அனுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள சேவை நிலையங்கள் என ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம் விற்பனைக்குப் பின்னரான சேவையில் ஒரு புதிய தரத்தை உருவாக்கி வருகிறது. இதன் ஊடாக, இலங்கையின் நிலையான போக்குவரத்து மாற்றத்திற்குத் தேவையான ஒரு முழுமையான சூழமைப்பை உருவாக்குவதுடன், விற்பனைக்குப் பின்னரான சேவையில் ஒரு புதிய தர அடையாளத்தையும் அந்நிறுவனம் நிலைநாட்டி வருகின்றது.

ஜப்பானிய பிரதிநிதிகள் 250 பேர் பங்கேற்கும்...
Syntetica raises $30M Series A...
ජපන් නියෝජිතයින් 250කගේ සහභාගීත්වයෙන් ‘Little...
Geoffrey Bawa Trust Expands Sri...
කොළඹ නගරයේ ආගන්තුක සත්කාර සහ...
Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Sri Lanka to Host Leading...