எனக்கு நினைவிருக்கும் காலம் முதல், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்த ஒவ்வொரு போட்டித் தொடரிலும் நீல மற்றும் தங்க நிற உடையில் இலங்கை வீரர்கள் உலகின் வலிமையான நாடுகளுடன் போட்டியிட்டனர். கிரிக்கெட் விளையாடும் முன்னணி நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று கூறப்பட்டது. அதனால் அடிக்கடி ஆர்வத்தை தூண்டும் மற்றும் சில சமயங்களில் இதயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் நடத்தன. ஆனால் இந்த முறை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஏனெனில் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அணி அந்த தொடரில் விளையாடவில்லை.
1996 முதல் இதுவரை, 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையின் கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற வெற்றிகள் ஏராளம். 1996இல் உலக சம்பியன்களான இலங்கை அணி, 2003 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும், 2007 மற்றும் 2011 ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. T20 கிரிக்கெட் வரலாற்றில் 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் இறுதிப் போட்டிவரை தகுதி பெற்ற இலங்கை, 2014இல் உலக சம்பியனாக மகுடம் சூடியது. மேலும், 2002இல் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியாவுடன் இணை சம்பியனாகவும் இலங்கை அணி மாறியது. ஆனால், அண்மையில் நிறைவடைந்த 2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் இலங்கை அணியைக் எங்களால் பார்க்க முடியாமல் போனது. இதற்கு காரணம் இலங்கை அணி அந்த தொடருக்கு தகுதி பெறாததால் ஆகும்.
2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணிகளில் இலங்கை அணி இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி படுமோசமாக ஆடியது தான் இதற்கு முக்கிய காரணம். கிரிக்கெட்டில் வெறி கொண்ட இலங்கையர்களுக்கு, இந்த முறை ஐசிசி இன் முக்கிய தொடரொன்றில் இலங்கை அணி விளையாடுவதை பார்க்க முடியாமல் போவது நினைத்துப் பார்க்க முடியாதது என்றாலும், வீரர்களும் ரசிகர்களும் அந்த ஏமாற்றத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.
ஒரு உள்ளடக்க படைப்பாளராக, எனது உலகம் கிரிக்கெட்டைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, எனது TikTok உள்ளடக்கங்கள் இலங்கை கிரிக்கெட்டின் சிறப்புத் தருணங்கள், பெரிய சிக்ஸர்கள், மாயாஜால நிகழ்வுகள் மற்றும் தனித்துவமான சாதனைகளால் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு தொடர்களிலும் நமது வாய்ப்புகளை ஆழமாக பகுப்பாய்வு செய்யும் நான், எமது வீரர்களுக்காக பார்வையாளர்களை உருவாக்க பணியாற்றுகிறேன், தற்போது இலங்கை அணி இல்லாத ஒரு தொடர் பற்றி முழுமையாக ஆராய களமிறங்கியுள்ளேன்.
இதில் மிகவும் கவலையான விடயம் என்னவென்றால், இலங்கை கிரிக்கெட் அணி இன்னும் இந்த தொடரில் இருப்பதாக பல ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருப்பதுதான். கடந்த ஒவ்வொரு தொடரிலும் இலங்கை அணி ஏதோ ஒரு நிலையில் விளையாடியது. ரசிகர்களின் கனவுகளை குழப்பி, இலங்கை கிரிக்கெட் அணி பெரிய தோல்விகளை சந்தித்துள்ளது. அவை நீண்ட காலமாக ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளன. இது உண்மையிலேயே இலங்கை ரசிகர்களின் உணர்வுகளை எழுப்பும் தருணம் அல்ல, மாறாக, இலங்கை கிரிக்கெட்டின் நிலையை பகுப்பாய்வு செய்ய இது சிறந்த நேரம் என்று நான் நினைக்கிறேன்.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்கள் இத்துடன் முடிவடையவில்லை. எதிர்காலத்தில் மேலும் தொடர்கள் நடைபெறும், இது கடைசி தொடர் அல்ல என்ற உற்சாகம், ஆர்வம் மற்றும் நம்பிக்கை நம்மிடையே உருவாகும். எனவே, இலங்கை மீண்டும் இதுபோன்ற ஒரு தொடரில் பங்கேற்கும். பல பின்னடைவுகளை சந்தித்து மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு நாடாக, நாமும் இலங்கை கிரிக்கெட் அணியும் மீண்டும் எழுந்து நிற்போம். இந்த தொடரில் சேர முடியாதது வருத்தமாக இருந்தாலும், அது மீண்டும் அப்படி இருக்கக்கூடாது.
இலங்கை கிரிக்கெட் அணி இல்லாவிட்டாலும், நான் இந்த முறை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரைப் பார்த்தேன். அதை ரசித்தேன். ஆனால் இலங்கை மீண்டும் வழக்கமான போர்முக்கு திரும்புவரை நான் காத்திருப்பேன். அப்படியானால், அது வெற்றியின் பாதையாக இருக்கும். எனவே, அதுவரை காத்திருப்பது மிகவும் முக்கியம்.