உலகளாவிய வாகனப் புத்தாக்கத் தரவரிசையில் முதலிடம் பிடித்து BYD நிறுவனம் வரலாற்று சாதனை

Share

Share

Share

Share

புதிய சக்தி வாகன (NEV) சந்தையின் உலகளாவிய முன்னோடியான BYD நிறுவனம், ஜேர்மனியின் வாகன முகாமைத்துவ நிலையம் (CAM) வெளியிட்ட ‘Automotive INNOVATIONS Report 2026’ அறிக்கையில், உலகின் மிகச்சிறந்த புத்தாக்க வாகனக் குழுமமாக முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆய்வின் 21 ஆண்டுகால வரலாற்றில் சீன வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இப்பட்டியலில் BYD நிறுவனம் 157 புத்தாக்கக் குறியீட்டு புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், வோக்ஸ்வாகன் குழுமம் (Volkswagen Group) 143 புள்ளிகளுடனும், மெர்சிடிஸ் பென்ஸ் (Volkswagen Group) 134 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

வாகனத் துறையின் மிகவும் நம்பகமான மற்றும் சுதந்திரமான ஒப்பீட்டு அளவுகோலாகக் கருதப்படும் வாகன முகாமைத்துவ நிலையம், 2026 ஆம் ஆண்டு அறிக்கைக்காக CAM நிறுவனம் உலகளாவிய ரீதியில் 36 வாகன உற்பத்தியாளர்களின் 100 க்கும் மேற்பட்ட வர்த்தக நாமங்களிலிருந்து 860 க்கும் மேற்பட்ட தனித்துவமான புத்தாக்கங்களை மதிப்பீடு செய்துள்ளது.

எலக்ட்ரிக் டிரைவ் (Electric Drive), ஆட்டோனமஸ் டிரைவிங் (Autonomous Driving) மற்றும் ஆட்டோனமஸ் டிரைவிங் அண்ட் ஏடாஸ் (Autonomous Driving and ADAS), இன்போடெயின்மென்ட் அண்ட் கனெக்டிவிட்டி (Infotainment and Connectivity) ஆகியவற்றின் அடிப்படையில், அவற்றின் முதிர்ச்சி, அசல் தன்மை, வாடிக்கையாளர் பலன்கள் மற்றும் புத்தாக்கத்தின் அளவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக ஐரோப்பிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தத் தரவரிசையில், தற்போது BYD நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளமையானது உலகளாவிய வாகனத் துறையின் புத்தாக்கப் போக்கு முற்றிலும் மாறியுள்ளதை உணர்த்துகிறது.

பேட்டரிகள், மின்சார மோட்டார்கள், மின்னணு கட்டுப்படுத்திகள் மற்றும் வாகனத் தரம் வாய்ந்த செமிகண்டக்டர்ஸ் (Semiconductors) உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் BYD நிறுவனத்தின் பலத்தை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது. இந்த ஆய்வு காலத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய 55 புத்தாக்கங்களில் 18 உலகளாவிய ரீதியில் முதன்மை அறிமுகங்களாகும். இது ஒட்டுமொத்த 2026 அறிக்கையிலும் ஒரு நிறுவனம் பெற்ற அதிகப்படியான எண்ணிக்கையாகும்.

இது குறித்து ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “CAM தரவரிசையில் BYD பெற்றுள்ள இந்த வரலாற்றுச் சாதனை, புதிய சக்தி வாகனத் துறையில் அவர்களின் தவிர்க்க முடியாத தலைமைத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகளாவிய எதிர்காலப் போக்குவரத்தை BYD தான் தீர்மானிக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் அறிந்திருந்தோம். எனவே, அவர்களின் உத்தியோகபூர்வ உள்ளூர் பங்காளியாக, உலகின் மிக புத்தாக்கமிக்க வாகன வர்த்தக நாமத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதிலும், மேலும் பல இலங்கையர்களுக்கு இணையற்ற புதிய சக்தி வாகன தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதிலும் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ பெருமிதம் கொள்கிறது.” என்றார்.

0 முதல் 80 சதவீத மின்சாரத்தை ஐந்து நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யக்கூடிய இரண்டாம் தலைமுறை Blade Battery, மெகாவாட் அளவிலான அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட 1000V கட்டமைப்பில் இயங்கும் Super e-Platform மற்றும் BYD இன் சொந்த தயாரிப்பான Xuanji A3 4nm சிப் மூலம் இயங்கும் அடுக்குமுறை தன்னாட்சி ஓட்டுநர் திறன் அமைப்பான God’s Eye ADAS தொகுப்பு ஆகியவை இந்த வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்திருந்தன. மேலும், BYD நிறுவனம் ‘ மோஸ்ட் இன்னோவேட்டிவ் வால்யூம் பிராண்ட் ‘ (Most Innovative Volume Brand) விருதை வென்றதுடன், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ‘மிகவும் புத்தாக்கமிக்க பிரீமியம் வர்த்தக நாமம்’ (Most Innovative Premium Brand) விருதை வென்றது.

குறிப்பாக, உலகளாவிய தரவரிசையின் முதல் ஆறு இடங்களில் BYD, எக்ஸ்பெங் (XPeng), மற்றும் கீலி (Geely) ஆகிய மூன்று சீன வாகன நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. வாகனத் துறையின் ஈர்ப்பு மையம் புதிய சக்தி வாகனங்களை நோக்கி நகர்வதால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய கட்டமைப்பு மாற்றத்தை இந்த முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

சீனாவில் புதிய ஆற்றல் பயணிகள் வாகன விற்பனையில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முன்னணியில் உள்ள BYD, 2025 ஆம் ஆண்டில் உலகளவில் 4.6 மில்லியனுக்கும் அதிகமான புதிய சக்தி வாகனங்களை விற்பனை செய்து உலகிலேயே மிக அதிக வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக சாதனை படைத்துள்ளது.

வாகன முகாமைத்துவ நிலையத்தால் (CAM) வெளியிடப்பட்ட ‘AutomotiveINNOVATIONS Report 2026’ பற்றிய முழு விபரங்களையும் www.automotiveinnovations.de என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Hope Is Just a Scroll...
Hope Is Just a Scroll...
Samsung Sri Lanka 2026 අලෙවි...
වාහන සඳහා මූල්‍ය පහසුකම් සැලසීමට...
ඔබ අප කෙරෙහි තැබූ විශ්වාසය...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய...