உலக மீள்சுழற்சி தினத்தில் பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கான இலங்கையின் முதல் மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்திய Coca-Cola Beverages Sri Lanka

Share

Share

Share

Share

நிலைபேறான கழிவு நிர்வகிப்பை முன்னெடுக்கும் முன்னோடி முயற்சியாக, Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் அனுசரணையுடன், பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கான இலங்கையின் முதல் மின்சார முச்சக்கர வண்டியை (E-Tuk) அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் 18 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக மீள்சுழற்சி தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபை வளாகத்தில் அதன் பணியாளர்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் இந்த அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு, தூய்மையான, பசுமையான எதிர்காலத்திற்கான நிலைபேறான நடைமுறைகளை ஊக்குவிப்பதில் மீள்சுழற்சி மற்றும் கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.

Vega Innovations நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த நவீன மின்சார முச்சக்கர வண்டியை, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவாசம், Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தால் ஸ்தாபிக்கப்பட்ட வாத்துவ பொருள் மீட்பு வசதி (MRF) நிலையத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த முயற்சி Eco Spindles பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், நிலைபேறான பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) பற்றிய Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார முச்சக்கர வண்டி அறிமுகம்,”Give Back Life” எனும் Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் முதன்மை PET கழிவு நிர்வகிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு முயற்சி ஆகும். இது உலகளாவிய “world without waste” திட்டத்துடன் இணைந்த ஒரு முக்கியமான பணியாகக் கருதப்படுகிறது.

கழிவு நிர்வகிப்பு நடைமுறைகளில் புத்தாக்க தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த முயற்சி நிலைபேறான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றுவதோடு, சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் அதேவேளையில், நிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பின் ஒரு அளவுகோலாக அமைகிறது.

இந்நிகழ்வில் உரையாற்றிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் திலக் ஹேவாவசம், ‘இந்த முன்னோடி முயற்சி பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்து நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைகளை ஊக்குவிக்கும் இலங்கையின் தேசிய இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. Coca-Cola Beverages Sri Lanka, Eco Spindles மற்றும் Vega Innovations ஆகிய 3 நிறுவனங்களுக்கு இடையேயான இந்த ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தனியார் துறை தேசிய நிலைபேறாண்மை முயற்சிகளுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது’ என்று தெரிவித்தார்.

Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம் நீண்ட காலமாக நிலைபேறாண்மை முன்முயற்சிகளில் முன்னோடியாக இருந்து வருகிறது. இது நாட்டில் பொருள் மீட்பு வசதிகளை (MRFs) நிறுவிய முதல் தனியார் நிறுவனமாகும், இதன்படி, தற்போது இலங்கை முழுவதும் 10 MRFs செயல்படுகின்றன. மேலும், நாடு முழுவதும் 600க்கும் அதிகமான கழிவு சேகரிப்பு தொட்டிகளை நிறுவியுள்ளதுடன், 50க்கும் மேற்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும் தினசரி சுத்தம் செய்யும் திட்டங்களுக்காக கடற்கரை பகுதிகளை தயார்படுத்தியுள்ளது.

‘இந்த E-Tuk திட்டம் நிலைபேறாண்மை மற்றும் விரிவான உற்பத்தியாளர் பொறுப்புக்கான எங்களின் உறுதியான அர்ப்பணிப்பின் சான்றாகும். புத்தாக்கத்தை பயன்படுத்தி, மற்ற நிறுவனங்களும் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை பின்பற்றவும், பூஜ்ய-நிகர (Net-Zero) இலக்குகளை அடையவும், கழிவு நிர்வகிப்பில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம், மேலும், மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து உலக மீள்சுழற்சி தினத்தில் மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,’ என்று Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் பொது விவகாரங்கள், தகவல்தொடர்பு மற்றும் நிலைபேறாண்மை பணிப்பாளர் தமரி சேனநாயக்க கூறினார்.

E-Tuk இன் அறிமுகம் இலங்கையின் கழிவு நிர்வகிப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, நிறுவன பங்குதாரர்கள் தங்கள் செயல்பாடுகளில் நிலையான தீர்வுகளை ஒருங்கிணைக்க ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பசுமையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தைத் தொடரும் நிலையில், இது போன்ற முயற்சிகள் புத்தாக்கம் மற்றும் பொறுப்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கின்றன.

ලංකා වැවිලිකරුවන්ගේ සංගමයේ 171 වන...
මගී සුවපහසුව වෙනුවෙන් කවදත් මුල්තැන...
Huawei Unveils Three-step “ACT” Pathway...
Reclaim Your Home’s Aesthetics: Samsung...
Ceylon Specialty Estate Tea Awards...
Sumathi IT Introduces Sri Lanka’s...
Cinnamon Life ශ්‍රී ලංකාවේ වෙරළ...
ශ්‍රී ලාංකේය තාරුණ්‍යයේ අධ්‍යාපනය, ගවේෂණය...
Sumathi IT Introduces Sri Lanka’s...
Cinnamon Life ශ්‍රී ලංකාවේ වෙරළ...
ශ්‍රී ලාංකේය තාරුණ්‍යයේ අධ්‍යාපනය, ගවේෂණය...
HNB மற்றும் TVS Lanka இணைந்து...