விருந்தோம்பல் துறையானது டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் விருந்தினர்களின் அனுபவத்தை மறுவரையறை செய்து வரும் நிலையில், ஹோட்டல் அறைகளில் உள்ள தொழில்நுட்பம் என்பது ஒரு அடிப்படை வசதி என்ற நிலையிலிருந்து மாறி, ஒட்டுமொத்த ஹோட்டல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு மூலோபாய அங்கமாக பரிணமித்துள்ளது. இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள Samsung இன் HU8000F ஹாஸ்பிடாலிட்டி தொலைக்காட்சித் (Hospitality TV) தொடர், வெறும் காட்சித் திரையாக மட்டும் செயல்படாமல், ஒரு ஒருங்கிணைந்த தளமாகச் செயல்படுகிறது. இது நவீன விருந்தோம்பல் சூழலில் பொழுதுபோக்கு, செயல்பாட்டு மேலாண்மை மற்றும் கிளவுட்-அடிப்படையிலான நுண்ணறிவு ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஹோட்டல் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
43 அங்குலம் முதல் 85 அங்குலம் வரையிலான ஆறு விதமான அளவுகளில் கிடைக்கும் HU8000F மாதிரி, பல்வேறு வகை ஹோட்டல் அறைகளின் தேவைகளுக்கேற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Samsung இன் ‘கிரிஸ்டல் ப்ரொசஸர் 4K’ (Crystal Processor 4K) மூலம் இயங்கும் இந்தத் திரை, HDR10+ மற்றும் ‘டைனமிக் கிரிஸ்டல் கலர்’ தொழில்நுட்பங்களின் உதவியுடன், ஒரு பில்லியனுக்கும் அதிகமான வண்ணச் சாயல்களைத் தத்ரூபமாக வெளிப்படுத்தி, மிகத் தெளிவான மற்றும் உயிரோட்டமான படத் தரத்தை வழங்குகிறது.
இதன் ‘ஏர்-ஸ்லிம்’ (AirSlim) வடிவமைப்பு, மிக மெல்லிய தோற்றத்தையும் மிகக்குறைந்த பெசல்களையும் கொண்டுள்ளது. இது பிரீமியம் அழகியலைப் பராமரிக்கும் அதே வேளையில் நவீன உட்புற அலங்காரங்களுடன் தடையின்றி ஒன்றிணைக்க அனுமதிக்கிறது. Samsung இன் ‘டைசன் ஓஎஸ்’ (Tizen OS) மூலம் இயங்கும் இந்தத் தளம், நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகளை முகப்புத் திரையிலிருந்தே நேரடியாகவும் எளிமையாகவும் அணுகும் வசதியை வழங்குகிறது. மேலும், இதில் உள்ள ‘அடாப்டிவ் சவுண்ட்’ (Adaptive Sound) தொழில்நுட்பம், ஒலிக் காட்சிகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்து, பல்வேறு உள்ளடக்கங்களுக்கு ஏற்ப ஒலியின் தெளிவை மேம்படுத்துவதன் மூலம் பார்வையாளர்களின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
இதில் உள்ளமைக்கப்பட்ட கூகுள் காஸ்ட் (Google Cast) மற்றும் ஆப்பிள் ஏர்ப்ளே (Apple AirPlay) வசதிகள் மூலம், விருந்தினர்கள் தங்கள் Android அல்லது iOS சாதனங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான செயலிகளிலிருந்து நேரடியாக உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய முடியும். இதற்குத் தனியான Dongles அல்லது கூடுதல் உபகரணங்கள் தேவையில்லை என்பதோடு, தொலைக்காட்சியில் தங்களின் தனிப்பட்ட கணக்குகளில் உள்நுழைய வேண்டிய அவசியமும் இல்லை. இந்த உள்ளமைக்கப்பட்ட வசதியானது விருந்தினரின் அனுபவத்தை எளிதாக்குவதுடன், ஹோட்டல்களுக்கான செயல்பாட்டுச் சிக்கல்களையும் குறைக்கிறது. இத்தகைய வெளிப்புற தொடர்பு சாதனங்களின் தேவையை அகற்றுவதன் மூலம், ஹோட்டல் நிர்வாகங்கள் தங்களின் உபகரணச் செலவுகளைக் குறைக்கவும், திருட்டு அபாயத்தைத் தவிர்க்கவும் மற்றும் பிற உட்கட்டமைப்புத் தேவைகளுக்காக எச்.டி.எம்.ஐ போர்ட்களை (HDMI ports) தடையின்றி பயன்படுத்தவும் முடிகிறது. மேலும், தகுதியுள்ள Samsung மாதிரிகளில் மென்பொருள் புதுப்பிப்புகள் (Software updates) வாயிலாக எவ்வித சேவைத் தடங்கலுமின்றி கூகுள் காஸ்ட் வசதியைப் பெற முடியும் என்பதால், இது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான நீண்டகால முதலீடாகவும் அமைகிறது.
பொழுதுபோக்குக்கு அப்பால், HU8000F மாதிரி Samsung LYNK Cloud உடன் தடையின்றி ஒருங்கிணைந்து, அறையிலுள்ள தொலைக்காட்சியை ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு மற்றும் மேலாண்மை இடைமுகமாக மாற்றுகிறது. லிங்க் கிளவுட் வாயிலாக ஹோட்டல் உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் உள்ள தங்களது கிளைகளின் உள்ளடக்கங்களை மேலாண்மை செய்யவும், சாதனங்களை தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்கவும் மற்றும் விருந்தினர்களின் அறைகளுக்கு நேரடியாகத் தேவையான செய்திகள் அல்லது விளம்பர உள்ளடக்கங்களை அனுப்பவும் முடியும். இந்த கிளவுட்-அடிப்படையிலான தளம், தரவு சார்ந்த நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் கூடுதல் வருவாயை ஈட்டவும் உதவுகிறது. இது ஹோட்டல் ஊழியர்களின் நேரடி தலையீட்டைக் குறைப்பதோடு, விருந்தினர்களுக்கான தகவல் தொடர்பைத் தனிப்பயனாக்க ஹோட்டல்களுக்கு உதவுகிறது. மேலும், SmartThings Pro மற்றும் multi-code remote வசதியுடனான ஒருங்கிணைப்பு, எவ்விதக் குறுக்கீடுகளுமின்றிச் சாதனங்களைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதுடன், விருந்தினர்களுக்குத் தேவைக்கேற்ற பிரத்தியேக அறை அனுபவத்தை வழங்கத் துணைபுரிகிறது.
சாதாரண வாடிக்கையளார் தொலைக்காட்சிகளை மாற்றி அமைக்காமல், விருந்தோம்பல் துறையின் தேவைகளுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள HU8000F மாதிரி, ஹோட்டல் உட்கட்டமைப்பு தரநிலைகளுக்கு ஏற்ப RJ12 கனெக்டர்கள், லேன் (LAN) அவுட்புட் போர்ட்கள், குளியலறை ஸ்பீக்கர் வசதி மற்றும் பல HDMI மற்றும் USB போர்ட்களைக் கொண்டுள்ளது. மேலும், இதில் உள்ள Samsung Knox மூலம் இதன் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது, இது ஹோட்டல் அமைப்புகள் மற்றும் விருந்தினர்களின் தரவைப் பாதுகாக்கும் வகையில் நிறுவன அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது.
இன்றைய இணைக்கப்பட்ட டிஜிட்டல் விருந்தோம்பல் சூழலில், அறையிலுள்ள திரைகள் வெறும் பொழுதுபோக்கை மட்டும் வழங்குவதைத் தாண்டிச் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. உயர்தர 4K செயல்திறன், தடையற்ற ஸ்ட்ரீமிங் வசதிகள் மற்றும் Samsung LYNK Cloud உடனான ஆழமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம், HU8000F மாதிரி விருந்தினர்களின் திருப்தியையும், செயல்பாட்டு நுண்ணறிவையும் ஒருசேர மேம்படுத்த ஹோட்டல்களுக்கு துணைபுரிகிறது. இதன் மூலம், தொலைக்காட்சியானது அறையில் இருக்கும் ஒரு தனிப்பட்ட சாதனமாக மட்டும் இல்லாமல், நவீன ஹோட்டல் தொழில்நுட்பக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.



