“ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் – ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நமது தேசியக் கொடி”

Share

Share

Share

Share

ஏழு கண்டங்களிலும் உள்ள, உயர்ந்த சிகரங்களின் உச்சிக்கு ஏறி வரலாற்றுச் சாதனை படைத்த முதல் இலங்கையர் “யோஹான் பீரிஸ்”

அவரது கனவுகள் மிகப் பெரியவை. அப்பெரிய இலட்சியக் கனவுகளுடன் உயரங்களை ஏற ஆரம்பித்தவர், இப்போது அந்த இலக்குகளை எட்டிப்பிடித்த வெற்றி வீரனாக தாய் நாடு திரும்பியுள்ளார். இலங்கையின் முன்னோடி மலை ஏறும் வீரரான யோஹான் பீரிஸ், உலகின் மிகக் கடினமான சவால்களில் ஒன்றான (SEVEN SUMMITS) “ஏழு சிகரங்கள்” எனும் சவாலை ஏற்று, பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள உயரமான சிகரங்களின் உச்சிக்கு ஏறி, இதுவரை எந்தவொரு இலங்கையரும் தடம் பதிக்க முடியாத உச்சத்தில் நம் இலங்கை தேசியக் கொடியை நாட்டி நமக்கும், நம் நாட்டிற்கும் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கி, பெருமை சேர்த்த முதல் இலங்கையராக வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

யோஹான் கடந்த ஒரு தசாப்த காலமாக உலகின் மிக உயரமான ஏழு சிகரங்களையும் ஏறும், சவாலான பயணத்தில், தான் முகம் கொடுத்த ஒவ்வொரு பின்னடைவையும் தாண்டி முன்னேறி, வரலாற்றில் தனக்கென ஒர் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் கிலிமஞ்சாரோ சிகரத்தின் (5,895 மீ) உச்சத்தில் ஏறி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கிய யோஹான், 2016ல் ஆசியாவின் எவரெஸ்ட் (8,849 மீ) சிகரத்தில் ஏற எடுத்துக்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்தபோதிலும், சற்றும் தளராது 2018ல் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தில் தடம் பதித்தார். அதன்பின், 2019ல் ஆஸ்திரேலியாவின் கோஸியஸ்கோ (2,228 மீ) மற்றும், 2023ல் ஐரோப்பாவின் எல்ப்ரஸ் (5,642 மீ) க்கு பிறகு 2025ல் அண்டார்டிகாவின் வின்சன் (4,892 மீ) சிகரத்தின் உச்சத்தை சென்றடைந்த முதல் இலங்கையராக வரலாறு படைத்தார்.

இவ்வாண்டில் அதைத்தொடர்ந்து தென் அமெரிக்காவின் அகோன்காகுவா (6,961 மீ) சிகரத்தில் மிக ஆபத்தான வானிலைக்கு மத்தியில், உச்சத்தின் கடைசி 200மீ வரை தனது கால் தடங்கலை பதித்தபின்பு, இறுதியாக வட அமெரிக்காவின் டெனாலி (Denali) சிகரமே (6,190 மீ), அவர் முகம் கொடுத்த மிகக் கடினமான சவாலாகும்.

உறைப்பனியின் தாழ் வெப்பநிலையில், பாரமான தமது உடைமப் பொதிகளுடன், கடும் பனி மழையை எதிர்த்துப் போராடி, சிகரத்தின் உச்சத்தை அடைவதற்கு முன் 5,243 மீ உயரத்தில் உள்ள இறுதி முகாமிற்கு சென்றடைந்தும், பனிப் புயல் மற்றும் பனிச்சரிவு அபாயம் காரணமாக ஆபத்தான சூழ்நிலையில் பாதுகாப்பாக பின் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தனது “ஏழு சிகரங்கள்” பயணத்தை நிறைவு செய்யும் யோஹானது இப்பயானமானது ஒரு தசாப்த கால அசாதாரண விடா முயற்சியின் சாதனையாகும். அவரது இவ் அதீதத் தேடலின் முடிவு இலங்கையின் மலையேற்ற வரலாற்றின் ஒரு புதிய மரபின் ஆரம்பம். ஏழு சிகரங்களின் உச்சத்தில் கால் தடம் பதித்த யோஹானின் இச்சாதனைப் பயணமானது நாடு முழுவதும் உத்வேகத்தை தூண்டுயுள்ளது.

இலங்கையரின் பெருமையை உலகறியச் செய்த யோஹான் ஜூலை 8ஆம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு தாய் நாட்டை வந்தடைந்தார். அவரை உணர்ச்சிபூர்வமான அரவணைப்புடன், அமோகமாக வரவேற்க குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமிதத்துடன் கோஷங்கள் முழங்க வரவேற்றனர்.

அச்சந்தர்ப்பத்தில் “ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நான் முகம் கொடுத்த சவால்களும், ஏற்பட்ட சோதித்தனைகளும், எனக்கு கஷ்டங்களை சமாளிக்கவும், உறுதியுடன் செயல்படவும் கற்றுத் தந்தன. நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிகளையும் என் இலங்கை தேசத்துக்காக எடுத்து வைத்தேன். இது நாம் யார் என்பதை இவ்வுலகுக்கு தெரியப்படுத்தி, நான் ஒரு இலங்கையன் என்பதை விட பெருமையான விஷயம் வேறில்லை என்பதை உலகின் உயரமான சிகரங்களில் இருந்து பறைசாற்றிய ஒரு பயணம்” என பெருமையுடன் கூறினார் யோஹான்.

AUK Protection, Anlene, Link Samahan, Cinnamon Life – City of Dreams, Qatar Airways, Mastercard, W15, WOW Media Productions மற்றும் WOWLIFE CHURCH ஆகிய அனைவரது உறுதியான ஆதரவும் நம்பிக்கையும் அவரது வெற்றியின் முக்கிய பங்கு வகித்தன. யோஹானின் இந்த பயணம், இலங்கை மக்களின் மன உறுதியையும், கட்டுக்கடங்காத தைரியத்தையும், மற்றும் எல்லைகளை கடந்து கனவு காணும் துணிச்சலையும் பிரதிபலிக்கிறது. அது மட்டுமல்ல, அவரது பயணம் இலங்கையின் அடுத்த தலைமுறையினருக்கு தடைகளைத் தாண்டி சிறந்து விளங்கவும், நம் தேசத்துக் கொடியை உலகமெங்கும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லவும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும்.

யோஹான் பீரிஸுடனான நேர்காணல்கள், ஊடகப் பேட்டிகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு Seven Summits Expedition Team யில் Sajeda Akbarally ஐ +94777353002 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும்.

Softlogic Life Grows 29% with...
TikTok Launches Time and Well-being...
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன்...
Sri Lanka Targets Inclusive Economic...
2025 SLIM ජාතික විකුණුම් සම්මාන...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
Global Talent Competes to Solve...