சம்பத்காட்ஸ் வழங்கும் பிரதான ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமான ‘Town on Sale’ நிகழ்வு, பண்டாரவளை நகரை இலக்காகக் கொண்டு ஜுலை 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது. பண்டாரவளை நகரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள கார்கில்ஸ் சதுக்கம் உட்பட பல்வேறுபட்ட முதற்தர வர்த்தக மையங்களில் இடம்பெறவுள்ள இந்த ஊக்குவிப்பானது 25% வரையிலான தள்ளுபடிகளை வழங்கி, மறக்க முடியாத கொள்வனவு அனுபவத்தை சம்பத் கடனட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ளது.
9வது தடவையாக சம்பத் வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சம்பத்காட்ஸ் Town on Sale” ஊக்குவிப்பு இடம்பெறும் காலப்பகுதியில் பண்டாரவளை நகரின் தெரிவு செய்யப்பட்ட வர்த்தக மையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 25% வரையான பிரத்தியேகமான தள்ளுபடிகளை தனது கடனட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ளது. Pizz Hut, KFC, Olives, Barista, Pizza Hub, Cargills Food City, Wickramarachchi Opticians and Hearing Care, Vision Care, Image print & bookshop, Singer, Abans, Damro, Seetha Holdings, Dewmi Rosa Bookshop, Rocell, DSI, Fashion Bug, Baby Joy, Royal Cashew, Unlimit, Upalis international, CIB Shopping Centre, Front Line, Jenitas ஆகிய வர்த்தக மையங்களில் சம்பத் கடனட்டைதாரர்களுக்கு தள்ளுபடிகளை சம்பத் வங்கி வழங்கவுள்ளது.
“சம்பத்காட்ஸ் Town on Sale” ஊக்குவிப்பு நிகழ்வு குறித்து சம்பத் வங்கியின் அட்டை மையத்தின் தலைமை அதிகாரி சிராத் சமரசேகர அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இத்தகைய ஊக்குவிப்பு நிகழ்வுகளை இலங்கையின் பிரதான நகரங்களில் ஏற்பாடு செய்வதனூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமளிக்கும் பொருட் கொள்வனவு அனுபவத்தை நாம் வழங்கும் அதேசமயம், எமது அட்டைதாரர்களுக்கு சௌகரியமாக கொள்வனவுகளை மேற்கொள்வதற்கும் நாம் வாய்ப்பளிக்கின்றோம். சம்பத்காட்ஸ் மூலமாக எமது வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனைப் பங்காளர்களுக்கு புதிய வணிக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் நாம் இடமளிக்கிறோம். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு, அவர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் அதேசமயம், வணிகர்களுக்கும் அவர்களுடைய வணிகத்தை மேம்படுத்துவதற்கு உதவும் இத்தகைய ஊக்குவிப்பு நிகழ்வுகளை நாம் தொடர்ந்தும் ஏற்பாடு செய்வோம்,” என்று குறிப்பிட்டார்.
சம்பத் வங்கி தனது அட்டைகளை நீண்ட காலமாக உபயோகித்து வருகின்ற சம்பத்காட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய ஊக்குவிப்பு நிகழ்வுகள் மூலமாக தனது சேவைகளை தொடர்ந்தும் வழங்கி, அவர்களுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுவதற்கு சம்பத் வங்கி ஆவலாக உள்ளது. நீங்கள் இன்னமும் சம்பத்காட்ஸ் வாடிக்கையாளராக இல்லாவிட்டால், இன்றே சம்பத்காட்ஸ் வாடிக்கையாளராக மாறி, வியப்பும், கவர்ச்சியும் நிறைந்த சலுகைகள் நிரம்பிய அனுபவத்துடன் மறக்க முடியாத கொள்வனவு அனுபவத்திற்கு தயாராகுங்கள்.