கிழக்கிலங்கையில் கால்பதிக்கும் BYD: அம்பாறையில் புதிய காட்சியறை திறந்து வைப்பு

Share

Share

Share

Share

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, தனது ஐந்தாவது விற்பனை நிலையத்தை அம்பாறையில் திறந்து வைத்ததன் மூலம் BYD தனது செயல்பாட்டை கிழக்கு மாகாணத்துக்கு விரிவுபடுத்தியுள்ளது.

அம்பாறை, வைத்தியாசாலை வீதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள BYD காட்சியறை, கொழும்பு, காலி, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் ஏற்கனவே இயங்கிவரும் விற்பனை மற்றும் சேவை வலையமைப்புடன் இணைகிறது. இப்புதிய விரிவாக்கத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் BYD இன் நவீன மின்சார மற்றும் plug-in hybrid மோட்டார் வாகனங்களை எளிதில் பெற்றுக்கொள்ள கூடியாதாக உள்ளமை நிறுவனத்தின் நாடு முழுவதும் உள்ள சேவையை பலப்படுத்துகிறது.

அம்பாறையில் உள்ள Sunrise Auto Service நிறுவனத்துடன் இணைந்து புதிதாக திறக்கப்படவுள்ள BYD காட்சியறை, வாடிக்கையாளர்களுக்கு உயர்தர வாகனங்களை வழங்குவதற்கு தயாராகி வருகிறது. முதற்கட்டமாக காட்சியறையாக மட்டும் செயல்படும் இந்த மையம், எதிர்காலத்தில் வாகனச் சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் என்பனவற்றையும் பெற்றுக்கொள்ளக்கூடியதான வகையில் விரிவுபடுத்தப்படும். இங்கு BYD நிறுவனத்தின் அனைத்து முன்னணி மாதிரிகளான SEAL, SEALION 6, DOLPHIN மற்றும் ATTO 3 ஆகியவை காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம் BYD இன் தரமான சேவையும், ஆதரவும் அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இப்புதிய காட்சியறை தொடர்பில் John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரட்ன கருத்து தெரிவிக்கையில், “இது எமது வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். நாடு முழுவதும் ஐந்து முக்கிய பிராந்தியங்களில் எமது சேவையை விரிவுபடுத்தியுள்ளது குறித்து பெருமைப்படுகிறோம். மேலும், அம்பாறை காட்சியறையின் திறப்பு இலங்கையில் உள்ள அனைவருக்கும் மாற்று சக்தி வாகனங்களை மேலும் அணுகக்கூடியதாக்குவதற்கு எங்களை ஒரு படி நெருக்கமாக்குகிறது” என தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, இப்புதிய காட்சியறை குறித்து கருத்த தெரிவித்த Sunrise Auto Service நிறுவனத்தின் பணிப்பாளர் கே. ஏ. சுரங்க, “அம்பாறையில் BYD நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும், அவர்களின் நவீன வாகனங்களை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வருவதில் பங்கு வகிப்பதிலும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை முழுவதும் BYD அறியப்படும் அதே தரத்திலான வாடிக்கையாளர் சேவையை வழங்க எமது அணி உறுதிபூண்டுள்ளது” என கூறினார்.

JKCG Auto நிறுவனம் கொழும்பு, நீர்கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கராப்பிட்டிய, மாத்தறை, தங்கல்லை, புத்தளம், குருநாகல் மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாற்று சக்தி வாகன பாவனையாளர்களுக்கு மேலும் வசதி அளிக்கும் வகையில், அம்பாறை பகுதியில் 7kW சார்ஜர்களை நிறுவும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த உட்கட்டமைப்பு BYD நிறுவனத்தின் நீண்டகால நிலைபேறாண்மை இலக்குகளுக்கு உதவுவதுடன், நாடெங்கிலும் மாற்று சக்தி வாகன உரிமையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்குகிறது.

அம்பாறையில் புதிய காட்சியறையை திறந்ததன் மூலம், BYD நிறுவனம் மாற்று சக்தி வாகனங்களை (NEV) மேலும் பலருக்கும் கிடைக்கச் செய்வதுடன், இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வலையமைப்பையும் வழங்குகிறது. தற்போது இலங்கையின் மேல் தென் மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற BYD மற்றும் JKCG Auto நிறுவனங்கள், மாற்று சக்தி வாகன பயன்பாட்டிற்கான சுமூகமான மாற்றத்தை ஊக்குவிப்பதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன.

தேசிய பொருளாதார மீட்புக்காக ஃபாம் ஒயில்...
நற்காரியங்களின் 23வது RO நிலையத்திற்கான சன்ஷைன்...
Huawei Named Sole Leader in...
Sri Lanka’s Business Leaders Convene...
වෙළෙඳ සේවා වොලිබෝල් තරඟාවලියේදී MAS...
IASL, රක්ෂණයේ නව්‍ය හෙට දවසකට...
Cinnamon Life at City of...
සැම්සුන් ඉලෙක්ට්‍රොනික්ස් සැබෑ විනෝදාස්වාදය වෙනුවෙන්...
IASL, රක්ෂණයේ නව්‍ය හෙට දවසකට...
Cinnamon Life at City of...
සැම්සුන් ඉලෙක්ට්‍රොනික්ස් සැබෑ විනෝදාස්වාදය වෙනුවෙන්...
2025 ගෘහ පාලන සතිය සමඟින්...