சமையல் கலைத் துறையில் புது வரலாறு படைத்து Chefs Guild போட்டியில் சாதனை படைத்த Cinnamon Life

Share

Share

Share

Share

சமையல் கலைஞர்களின் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Chefs Guild of Lanka Culinary Art Competition 2025 போட்டியில் 56 பதக்கங்களை வென்று இலங்கை சமையல் கலையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் 23 தங்கப் பதக்கங்கள், 17 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 16 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இது இந்தப் போட்டியின் வரலாற்றில் பெறப்பட்ட அதிக பதக்கங்களின் எண்ணிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் Hot Cooking பிரிவில் முதல் முறையாக “Gold with Excellence” விருதையும், “Most Outstanding” கருப்பொருளின் கீழ் நான்கு“Top Gold” சம்பியன்ஷிப்களையும் Cinnamon Life வென்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இது Cinnamon Life இன் சமையல் மற்றும் தயாரிப்பில் சிறப்பையும், புத்தாக்கத்துக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பையும் நன்கு எடுத்துக்காட்டுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த Cinnamon Life City of Dreams இன் மனித வள பணிப்பாளர் திரு. சமில இலுக்கும்புர, Cinnamon Life குழு நிகழ்த்திய இந்த சாதனை வெற்றிக்கு அப்பாற்பட்ட ஒரு சிறப்பு என்று குறிப்பிடலாம். Cinnamon Life இன் சிறப்பான வலிமை மற்றும் திறனை வெளிப்படுத்தும் இந்த வெற்றிகள் மூலம், இலங்கை உலகில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு சர்வதேச அளவிலான திறமை கொண்ட நாடாக எமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது,’ என்று கூறினார்.

Cinnamon Life இல், நாங்கள் வெறுமனே உணவை மட்டும் பரிமாறுவதில்லை. நாங்கள் அனுபவங்களை உருவாக்குகிறோம். இந்த கௌரவங்கள் வெறும் பதக்கங்கள் அல்ல. விருந்தோம்பல் துறையை புதுப்பிப்பதற்கும், சமையல் கலையை மேம்படுத்துவதற்கும், இலங்கை சிறப்பின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்குமான எமது பயணத்தில் இவை முக்கிய மைல்கற்களாகும்.

இந்த வெற்றிகளைப் பெற்ற Cinnamon Life இன் திறமையான சமையல் கலைஞர்கள் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய Cinnamon Life, அவர்களின் திறன்கள், படைப்பாற்றல் மற்றும் சிறப்புக்கான அர்ப்பணிப்பை ஹோட்டல் துறையில் புதிய அளவுகோல்களை நிறுவியதன் மூலம் காட்டியுள்ளனர்.

කොකා-කෝලා බෙවරේජස් ශ්‍රී ලංකා ආපසු...
TikTok හරහා රසවත් ආහාර සංස්කෘතියක...
BPPL Holdings PLC completes the...
Cinnamon Life සූප ශාස්ත්‍ර ක්ෂේත්‍රයේ...
சமையல் கலைத் துறையில் புது வரலாறு...
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு...
සමාගම්වලින් අඩකඩ වැඩි ප්‍රමාණයක් ඩොලර්...
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக Neptune Recyclers உடன்...
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு...
සමාගම්වලින් අඩකඩ වැඩි ප්‍රමාණයක් ඩොලර්...
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக Neptune Recyclers உடன்...
HNB கடன் அட்டைகளின் அதிர்ஷ்ட வெற்றியாளருக்கு...