Samsung Electronics நிறுவனம் One UI 7 என்ற புதிய மென்பொருள் மேம்பாட்டை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மேம்பாடுகள் மூலம் Galaxy சாதனங்களுடன் பாவனையர்ளர்களின் அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிப்பயனாக்கம், உற்பத்தித்திறன் மற்றும் எளிமையான பயன்பாட்டை ஒருங்கிணைத்து, அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை புதிய வரையறையுடன் இந்த புதுப்பிப்பு வழங்குகிறது.
One UI 7 ஆனது Galaxy AI-ஐ மையமாகக் கொண்டு வடிமைக்கப்பட்டுள்ளது. இது பணிகளை எளிமைப்படுத்தி, பல்வேறு பயன்பாட்டு செயலிகளுக்கு இடையே மாறி இயக்க வேண்டிய தேவையைக் குறைப்பதன் மூலம் பாவனையாளர் நட்பை மேம்படுத்துகிறது. AI Select போன்ற அம்சங்கள் விரைவான GIF படங்களை எடுக்க உதவுகின்றன. அதே நேரத்தில் Writing Assist அம்சம் உரை வடிவமைப்பு மற்றும் சுருக்கத்தை எளிதாக்குகிறது. புதிதாக வடிவமைக்கப்பட்ட முகப்புத் திரை (home screen), விட்ஜெட்கள் (widgets) மற்றும் பூட்டுத் திரை (lock screen) ஆகியவை ஒருங்கிணைந்த மற்றும் நவீன தோற்றத்தை வழங்கி, தனிப்பயனாக்கத்தை எளிதாக்குகின்றன. அத்துடன், lock screen இல் தோன்றும் Now Bar ஆனது உடற்பயிற்சி கண்காணிப்பு (fitness tracking) மற்றும் இசை இயக்கம் (music playback) போன்ற நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கி, தகவல்களை ஒரே பார்வையில் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுகிறது.
Samsung நிறுவனம் Google Gemini ஒருங்கிணைப்பின் மூலம் இயல்பான குரல் கட்டளைகளை இயக்கி, AI சார்ந்த தொடர்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது. Side Button-ஐ நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம், பாவனையாளர்கள செல்லப்பிராணிகளுக்கு உகந்த இத்தாலிய உணவகங்கள் போன்ற தனிப்பட்ட பரிந்துரைகளைக் கோரலாம். இது மேலும் ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குகிறது. இதற்கிடையில், Drawing Assist பாவனையாளர்களுக்கு படங்களையும், உரை குறிப்புகளையும் (text prompts) இணைக்க அனுமதிக்கிறது. மேலும் Audio Eraser, பின்னணி சத்தங்களை நீக்கி வீடியோ பதிவுகளின் தரத்தை மேம்படுத்துகிறது. இதனால் உள்ளடக்க உருவாக்கம் அதிக தொழில்முறை தன்மையுடன் விளங்குகிறது.
One UI 7 இல் உள்ள மேம்பாடுகள் காட்சி மற்றும் தொடர்புடைய முன்னேற்றங்களுக்கு அப்பாற்பட்டவை. இந்த புதுப்பிப்பானது பாவனையாளர்களின் படைப்பாற்றலை வலுப்படுத்த புதிய கருவிகளை வழங்குகிறது. Drawing Assist மூலம், பாவனையாளர்கள் தற்போது உரை குறிப்புகளை ஓவியங்கள் மற்றும் படங்களுடன் இணைக்க முடியும். இதன் மூலம் கையடக்க தொலைபேசிகளில் முன்பு சாத்தியமில்லாத அளவிற்கு படைப்பாற்றலுடன் தங்கள் கருத்துக்களை உருவாக்க முடியும். அதேபோல, Audio Eraser பாவனையாளர்களுக்கு தேவையற்ற பின்னணி சத்தங்களை நீக்குவதன் மூலம் வீடியோக்களை திருத்தும் வசதியை வழங்குகிறது. இதனால் ஒவ்வொரு பதிவும் தெளிவாகவும் தொழில்முறை ரீதியாகவும் இருப்பதை உறுதிசெய்கிறது. இந்த அம்சங்கள் குறிப்பாக உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators), கல்வியாளர்கள் மற்றும் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறன் பணிகளுக்காக தங்கள் கையடக்க தொலைபேசி சாதனங்களை நம்பியிருக்கும் தொழில் வல்லுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த புதுப்பிப்புகளின் முக்கியத்துவம் குறித்து Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளர் SangHwa Song கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையில் உள்ள எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மாற்றமளிக்கும், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் One UI 7-ஐ கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த புத்தாக்க புதுப்பிப்பு, அதன் துணிச்சலான புதிய வடிவமைப்புடன் பாவனையாளர் தொடர்பை மறுவரையறை செய்வதோடு மட்டுமல்லாமல், Galaxy சாதனங்களுக்கான தனிப்பயனாக்கம் மற்றும் உற்பத்தித்திறனில் ஒரு புதிய தரநிலையையும் நிர்ணயிக்கிறது.’என்று கூறினார்.
One UI 7 வெளியீடு Galaxy S24 தொடர், Galaxy Z Fold6 மற்றும் Galaxy Z Flip6 உடன் தொடங்குவதால், Samsung Sri Lanka எதிர்வரும் வாரங்களில் இந்த நவீன இடைமுகத்தை பரந்த அளவிலான பார்வையாளர்களுக்கு கொண்டுவர தயாராக உள்ளது. புதுப்பிப்பின் படிப்படியான விரிவாக்கம் ஏனைய Galaxy ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் tablet-களிலும் கிடைக்கும். இது Samsung இன் அனைத்து தயாரிப்பு வரிசைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தும்.
Samsung Sri Lanka, One UI 7-இன் புதிய அம்சங்கள் மற்றும் திறன்களை ஆராய அனைத்து பாவனையார்களையும் அழைக்கிறது. இந்த புதுப்பிப்பு மக்கள் தங்கள் சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றியமைக்கும் என்பதில் Samsung உறுதியாக உள்ளது.
Samsung இன் புத்தாக்க பயணத்தில் இப்புதிய அத்தியாயம் ஒரு சாதாரண மேம்பாடு மட்டுமல்ல, மாறாக தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையை சக்திவாய்ந்ததாக மாற்றும் ஒரு புரட்சியாகும்.
இந்த புதுப்பிப்பு வெளியீட்டின் கால அட்டவணை மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் Samsung Sri Lanka வின் உத்தியோகப்பூர்வ சமூக ஊடகங்கள் அல்லது Samsung Members application ஐப் பார்வையிடுங்கள்.