ஜனசக்தி பைனான்ஸ் BestWeb.LK 2026 இல் டிஜிட்டல் விசேடத்துவத்திற்கான வெள்ளி விருதை வென்றது

Share

Share

Share

Share

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, இலங்கையின் முதன்மை இணையம் தொடர்பான போட்டியான BestWeb.LK 2026 இல், சிறந்த நிதி மற்றும் காப்புறுதித் இணையத்தளப் பிரிவில் வெள்ளி விருதை வென்றது. டிஜிட்டல் சிறப்பு, புதுமை மற்றும் தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் அணுகக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய, சௌகரியமான டிஜிட்டல் அனுபவங்களை உருவாக்குவதில் நிறுவனம் காட்டும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இவ் விருது வெளிப்படுத்துகிறது.

இந்த அங்கீகாரமானது, ஜனசக்தி பைனான்ஸ் தனது டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முதலீட்டையும், வாடிக்கையாளர்கள் இணையவழியில் நிறுவனத்துடன் ஈடுபடும் விதத்தை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. டிஜிட்டல் பயணத்தின் முக்கிய அம்சமாக அதன் நிறுவன (corporate) இணையத்தளம் உள்ளது. இது வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருக்கு டிஜிட்டல் தொடர்பை ஏற்படுத்தும் முக்கிய புள்ளியாக செயல்படுகிறது.

ஜனசக்தி பைனான்ஸின் பரந்த டிஜிட்டல் மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட இவ் இணையத்தளமானது, நவீன, பயன்படுத்த எளிதான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அனுபவத்தை உருவாக்கும் அதே வேளையில், நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட வர்த்தகநாம அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இத் தளமானது, பயனாளர்களுக்கு தகவல்கள் எளிதாகச் சென்றடையவும், நிதித்தீர்வுகளை ஆராயவும், தடையற்ற டிஜிட்டல் பயணத்தின் மூலம் நிறுவனத்துடன் இணையவும் உதவுகிறது.

ஜனசக்தி பைனான்ஸின் இணையத்தளம் அதன் நிலையான வைப்புச் சேவை, லீசிங், தங்கக் கடன்கள், சேமிப்பு மற்றும் இஸ்லாமிய நிதி உள்ளிட்ட நிதித்தீர்வுகளின் தொகுப்புடன், நிறுவனத் தகவல், தொழில் வாய்ப்புகள், கிளை விபரங்கள் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு வழிமுறைகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கின்றது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலான உள்ளடக்கத்துடன் கணினி மற்றும் மொபைல் சாதனங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற வடிவமைப்புடன், இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் நிதித்தகவல் மற்றும் சேவைகளை அணுகக்கூடிய வகையில் இத்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம் குறித்து ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “BestWeb.LK 2026 இல் சிறந்த நிதி மற்றும் காப்புறுதி இணையத்தளத்திற்கான வெள்ளி விருதைப் பெறுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்த அங்கீகாரம் டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவதில் எங்களது தொடர்ச்சியான முதலீட்டையும் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய டிஜிட்டல் அனுபவங்களை உருவாக்குவதில் எங்கள் கவனத்தையும் பிரதிபலிக்கிறது. எமது இணையத்தளம் ஆனது தகவல் மற்றும் நிதிச்சேவைகளை எவ்வாறு அணுகக்கூடியதாகவும், வசதியாகவும், ஈடுபாடு உடையதாகவும் உருவாக்குகிறோம் என்பதில் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் இச் சாதனை, இணையத்தளத்திற்கு பின்னால் உள்ள அணிகளின் கூட்டுப் பங்களிப்பையும் அதை மேம்படுத்துவதற்கான அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளையும் அங்கீகரிக்கிறது. டிஜிட்டல் புதுமை மற்றும் வாடிக்கையாளர் அனுபவ மேம்பாட்டிற்கான ஊக்கமாக இவ் விருதை நாம் பார்க்கிறோம்.” என்றார்.

இந்த இணையத்தளம், பயனுள்ள செயல்பாடுகள், எளிதான அணுகல் மற்றும் ஆக்கபூர்வமான வடிவமைப்பு ஆகியவற்றை, நம்பகமானதும் சீரானதுமான டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கிறது. பயனாளர் நட்புணர்வான வழிநடத்தல், பதிலளிக்கும் தன்மை, சிறந்த செயல்திறன், எளிதான அணுகல் மற்றும் பாதுகாப்பான, நிலையான தளம் ஆகியவற்றுக்கு இணையத்தளத்தின் உருவாக்கத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, பல்வேறு சாதனங்களில் ஒரே மாதிரியான பயனாளர் அனுபவத்தையும் உறுதிப்படுத்துகிறது.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரான தாரண கோரலே ஆராச்சி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “எமது இணையத்தள அணுகுமுறை, வாடிக்கையாளர்கள் எமது சேவைகளை எளிதாக அறிந்துகொள்ளவும், தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், எமது வர்த்தகநாமத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவும் வகையில் வலுவான டிஜிட்டல் அனுபவத்தை உருவாக்குவதை மையமாகக் கொண்டிருந்தது. தெளிவான, எளிமையான மற்றும் சீரான வாடிக்கையாளர் பயணத்தை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்தியதுடன், மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளை ஜனசக்தி பைனான்ஸ் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயற்படுகிறது என்பதையும் இணையத்தளம் பிரதிபலிப்பதை உறுதிசெய்தோம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும் டிஜிட்டல் பயன்பாட்டு முறைகளும் தொடர்ந்து மாறிவரும் நிலையில், எமது டிஜிட்டல் இருப்பை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுடன் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதற்கும், எமது வாடிக்கையாளர்களுடன் நாம் கொண்டுள்ள தொடர்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.” என்றார்.

BestWeb.LK போட்டியானது, .lk இணையத்தளங்களுக்கு தமது இணையத்தளத் தெரிவுநிலையை மேம்படுத்தவும், வர்த்தகநாம இருப்பை வலுப்படுத்தவும், இலங்கையின் இணையத்தள மேம்பாட்டுத் துறையில் வெளிப்படுத்தப்படும் படைப்பாற்றல் மற்றும் சிறப்பை வெளிக்கொண்டு வரவும் ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. சிறந்த நிதி மற்றும் காப்புறுதி இணையத்தளப் பிரிவில் பெற்ற வெள்ளி விருது, ஜனசக்தி பைனான்ஸின் டிஜிட்டல் செயற்படுத்தலுக்கும், இணையத்தளத்தை உருவாக்குவதற்குப் பின்னணியில் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் கிடைத்த சுயாதீனமான அங்கீகாரமாகும்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் தடையற்ற டிஜிட்டல் தொடர்பாடலை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வரும் நிலையில், ஜனசக்தி பைனான்ஸ் தனது டிஜிட்டல் தளங்களை மேலும் வலுப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் உருவாகிவரும் டிஜிட்டல் போக்குகளுக்கு ஏற்ப நிறுவனத்தின் இணையத்தளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். இதன் மூலம், நிறுவனத்தின் விரிவான டிஜிட்டல் மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக, எளிதில் அணுகக்கூடிய, பொருத்தமான மற்றும் வசதியான டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பு மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி

ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச்சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 45 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

BYD Mobile App හඳුන්වා දී...
නල්ලූර් කන්දස්වාමි කෝවිල් මංගල්‍යයේ ආගමික...
ITC Ratnadipa Welcomes Chef Prakhar...
28 Years of Fitness Evolution:...
5 ශ්‍රේණියේ දරුදැරියන් 6,500 කට...
ශ්‍රී ලංකාවේ සුළු, කුඩා හා...
KOKO සහ සෙලින්කෝ ඉන්ෂුවරන්ස් එක්ව...
Colombo Dockyard marks World Maritime...
ශ්‍රී ලංකාවේ සුළු, කුඩා හා...
KOKO සහ සෙලින්කෝ ඉන්ෂුවරන්ස් එක්ව...
Colombo Dockyard marks World Maritime...
KOKO மற்றும் Ceylinco கூட்டாண்மையில் இலங்கையின்...