ஜனசக்தி லைஃப், “இந்துக்களின் பெருஞ்சமர்” உடன் இணைந்ததன் மூலம் பாடசாலைக் கிரிக்கெட் பாரம்பரியத்தை வலுப்படுத்தியது

Share

Share

Share

Share

காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை வர்த்தக நாமமாகவும் விளங்கும் ஜனசக்தி லைஃப், “இந்துக்களின் பெருஞ்சமர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 15ஆவது வருட கிரிக்கெட் போட்டியின் Title Partner ஆக இணைந்தது. இப் போட்டி ஊடாக இரு கல்லூரி அணிகளும் தங்களின் நீண்டகால, பெருமைமிக்க பாடசாலைக் கிரிக்கெட் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பித்ததுடன் இந் நிகழ்வு, மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஒன்றிணைத்தது.

கொழும்பு இந்துக் கல்லூரி தனது 75ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியதை முன்னிட்டு இவ்வாண்டின் போட்டி மேலும் சிறப்புமிக்கதாக அமைந்தது. இதனால், பாடசாலை சமூகத்திற்கு இந்நிகழ்வு மேலும் நினைவுகூறத்தக்க தருணமாக மாறியது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக Title Partner ஆக இணைந்த ஜனசக்தி லைஃப், பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்கும் இளைஞர் முன்னேற்றத்திற்கும் தனது ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருவதுடன் இந்த மதிப்புமிக்க வருடாந்த போட்டியை வெற்றிகரமாக நடத்துவதிலும் முக்கிய பங்காற்றியது.

ஜனசக்தி லைஃப் பற்றி

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...