நீர்கொழும்பு நகரில் தனது புதிய கிளையைத் திறந்த HNB

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HNB, தனது வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய கிளை ஒன்றை நீர்கொழும்பில் திறந்துள்ளது. இது நீர்கொழும்பு, புனித ஜோசப் வீதி, இலக்கம் 125 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது.

HNB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பள்ளேவத்த, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவஆராச்சி, HNB இன் நிறைவேற்று அதிகாரமுடைய துணைத் தலைவரும் வலையமைப்பு வணிகப் பிரிவுத் தலைவருமான சுபுன் டயஸ் உள்ளிட்ட வங்கியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் பல வாடிக்கையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த திறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட HNB இன் முகாமைத்துவப் பணிப்பபாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பள்ளேவத்த கருத்து தெரிவிக்கையில்: “நீர்கொழும்பு நகரம், பரந்த வரம்பில் வியாபாரிகள், தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்கள் வாழும் பல்கலாச்சார நகரமாகும். இந்தப் புதிய கிளையுடன், வாடிக்கையாளர்கள் HNBஇன் தரப்படுத்தப்பட்ட மற்றும் நம்பகமான நிதி நிபுணத்துவத்துடன் கூடுதலாகப் புத்துணர்ச்சியான அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். நாடு முழுவதிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், சமூகங்களின் நீண்டகால நிதி நிலைத்தன்மைக்குப் பங்களிக்கும் வங்கிச் சூழலை உருவாக்குவதுமே எங்கள் நோக்கமாகும்.” என தெரிவித்தார்.

திறமையான மற்றும் வசதியான வங்கி அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கிளையில், பரந்த அளவிலான நிதிச் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட வங்கி நிபுணர்களை எளிதில் அணுகுவதை உறுதி செய்வதோடு, தங்கள் பரிவர்த்தனைகளை விரைவாக முடித்துக்கொள்வதற்கான வசதியையும் வழங்குகிறது. வசதி, திறமை மற்றும் அர்த்தமுள்ள தொடர்புகளை மேம்படுத்தும் வகையில், Service counters, consultation areas, மற்றும் customer interaction points அமைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பில் உள்ள வாடிக்கையாளர் சமூகம் மற்றும் வணிகங்களின் பல்வேறு வங்கித் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தக் கிளை, நகரத்தின் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்து பேணுவதற்கு உதவுவதோடு, நம்பகமான வங்கிச் சேவையை வழங்குவதற்கான மையப் புள்ளியாகவும் உள்ளது.

நீர்கொழும்பு நகரில் புதிய கிளையைத் திறப்பதன் மூலம், நவீன வசதிகள் மற்றும் தொழில்முறை சேவை மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தியவாறு, தனது நாடு முழுவதுமான வலையமைப்பை வலுப்படுத்தும் HNBஇன் தொடர்ச்சியான முயற்சியை இது வெளிப்படுத்துகிறது.

Sri Lanka strengthens business confidence...
ජී.එස්.පී ප්ලස් යලි සලකා බැලීම...
99x Rebuilds Flood-Damaged IT Labs...
Sunshine Holdings records 16.6% YoY...
Janashakthi Life සමාගම Great Place...
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில்...
Samsung Sri Lanka Opens Pre-orders...
The Royal College Union, jointly...
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில்...
Samsung Sri Lanka Opens Pre-orders...
The Royal College Union, jointly...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් අනාගතය වෙනුවෙන් සිය...