பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்த கைகொடுக்கும் Sunshine Foundation for Good

Share

Share

Share

Share

Sunshine Holdings PLCஇன் அர்ப்பணிப்புள்ள பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான Sunshine Foundation for Good (SFG), பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பரிசுக் கூப்பன்களை (Vouchers) வெற்றிகரமாக விநியோகிப்பதன் மூலம் கல்விக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த ஆண்டு, இந்த முன்முயற்சியின் ஊடாக Sunshine Holdingsஇன் செயல்பாட்டு பிரிவுகளுக்கு அருகிலுள்ள கடவத்தை, களனி, இரத்மலானை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளிய ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 640 மாணவ மாணவிகள் பிரதிபலன்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பரிசுக் கூப்பன்கள் (Vouchers) விநியோகிக்கப்பட்டன, இதில் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பாடசாலைகள் பயன்பெற்றுள்ளன. தினசரி கூலித் தொழிலாளர்களை நம்பியிருக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இந்த பிள்ளைகளுக்கு, அவர்களின் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவும், புதிய கல்வி ஆண்டுக்கு நம்பிக்கைக்குரிய தொடக்கத்தை உறுதி செய்வதற்காகவும் பாடசாலை உபகரணங்கள், வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

இந்த முயற்சி Sunshine Foundation for Goodஇன் கல்வி துறையின் ஒரு பகுதியாகும், கல்வியை ஊக்குவிப்பதன் ஊடாக கற்றல் வளங்களுக்கான அணுகலில் காணப்படும் முக்கியமான இடைவெளிகள் நிவர்த்தியாவதுடன் அதனூடாக சமூகங்களை மேம்படுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. Sunshine Holdingsஇன் வணிக நடவடிக்கைகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளை இந்த திட்டம் முன்னுரிமையாகக் கொண்டுள்ளது, இது நிறுவனத்தின் உடனடி சமூகங்களுக்கான பொறுப்பை வலுப்படுத்துகிறது. இது அறக்கட்டளையின் சமூக நலன்புரி அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.

Sunshine Holdingsஇன் பெருநிறுவன தொடர்பாடல் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பிரிவால் நிர்வகிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விநியோக திட்டங்கள், பாவனையாளர்களின் பாடசாலைகளில் நடத்தப்பட்டன. அவையாவன: யசோதரா ஆரம்ப நிலை பாடசாலை (களனி), திப்பிட்டிகொடை றோமன் கத்தோலிக்க ஆரம்ப பாடசாலை (களனி), தளுப்பிட்டிய ஆரம்ப பாடசாலை (களனி), பௌத்த ஆரம்ப பாடசாலை (கடவத்தை), கிறிஸ்துதேவா வித்தியாலயம். (இரத்மலானை), புனித ஜோன்ஸ் வித்தியாலயம் (முகத்துவாரம்) மற்றும் தொட்டவத்தை மத்திய மகா வித்தியாலயம் (கொழும்பு வடக்கு). சன்ஷைன் லீடர்ஷிப் குழு உறுப்பினர்கள், சன்ஷைன் ஹோல்டிங்ஸின் முகாமையாளர்கள் மற்றும் சிரேஷ்ட நிர்வாகிகள், மற்றும் அதன் வணிக அமைப்புகளான சன்ஷைன் ஹெல்த்கேர் லங்கா (பார்மா, மெடிக்கல் டிவைசஸ், ஹெல்த்கார்ட் டிஸ்ட்ரிப்யூஷன், ஹெல்த்கார்ட் ஃபார்மசிஸ் மற்றும் லினா மேனுபேக்ச்சரிங்), சன்ஷைன் டீ [பிரைவேட்] லிமிடெட், மற்றும் சன்ஷைன் கன்ஸ்யூமர் லங்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர். இது சமூக மேம்பாட்டுக்கான குழுவின் கூட்டு அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடாந்திர முயற்சியின் மூலம், Sunshine Holdings PLC, கல்வி ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் இலங்கையின் இளைஞர்களின் திறனை வளர்ப்பதற்கும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது அதன் அருகிலுள்ள சமூகங்களில் உள்ள மாணவர்களுக்கு மிகவும் சமத்துவமான மற்றும் நம்பிக்கைமிக்க எதிர்காலத்தை உறுதி செய்கிறது.

Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...