பாரம்பரியம், கலாசாரச் செழுமையுடன் City of Dreams Sri Lanka-வில் மிக விமர்சையாக நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

Share

Share

Share

Share

கொழும்பு, புதன்கிழமை 04 மார்ச் 2026: தெற்காசியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விடுமுறை விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’, பல நூற்றாண்டுகள் பழமையான சீன பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இப்பிராந்தியத்திலுள்ள சீன சமூகத்துடனான தனது ஆழமான கலாசார உறவை மீளுறுதிப்படுத்தும் வகையிலும் சீனப் புத்தாண்டை வெகு விமர்சையாகக் கொண்டாடியது.

விடுதி வளாகம் முழுவதும் சிவப்பு மற்றும் தங்க நிற அலங்காரங்களுடன் ஜொலித்ததுடன், நேர்த்தியான விளக்குகள் மற்றும் செர்ரி பூக்களின் (Cherry blossom) அலங்காரங்கள் பொழுதுபோக்குத் தளத்தை சுபீட்சம் மற்றும் புதுப்பொலிவு மிக்க ஒரு பண்டிகைக்கால புகலிடமாக மாற்றியிருந்தன. இந்தச் சூழல் குடும்பம், அதிர்ஷ்டம் மற்றும் புதிய தொடக்கங்களுக்கான காலமான ‘வசந்த விழாவின்’ உண்மையான உணர்வைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

இந்தக் கொண்டாட்டத்தின் பிரதான அம்சமாக, விடுதியின் அலுவலக மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளில் விறுவிறுப்பாக அரங்கேறிய பாரம்பரிய ‘சிங்க நடனம்’ (Lion Dance) அமைந்தது. நேரடி மேளதாளங்களுடன் இடம்பெற்ற இந்த கலைநிகழ்ச்சி, எதிர்வரும் ஆண்டிற்கான வலிமை, பாதுகாப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக அமைந்ததோடு, அங்கிருந்த விருந்தினர்களையும் நிர்வாகத்தினரையும் வெகுவாகக் கவர்ந்தது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த துணைத் தலைவரும், பொது முகாமையாளருமான மைக்கல் ஹபாஷி, “சீனப் புத்தாண்டு என்பது சுபீட்சத்தையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு காலமாகும். எமது பொழுதுபோக்குத் தளத்தில் இந்தத் துடிப்பான பாரம்பரியங்களை உயிர்ப்பிக்க முடிந்ததையிட்டு நாம் பெருமிதம் கொள்கிறோம், எமது சீன வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை பெறுவதை உறுதிசெய்வதே எமது நோக்கம். அவர்களின் பாரம்பரியத்தை கௌரவித்து, உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களை வழங்குவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.

இப்பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ‘Spice8’ மற்றும் ‘Sapphire Dragon’ ஆகிய உணவகங்களில் பிரத்தியேகமான சீன உணவு வகைகள் பரிமாறப்பட்டன. உண்மையான சீன சுவைகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை உள்ளடக்கிய விசேட மெனுக்கள் ஊடாக விருந்தினர்கள் ஒன்றுகூடி மகிழ்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

சர்வதேச கலாசாரங்களை ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழும் ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’, இப்பிராந்தியத்தின் முதன்மையான வாழ்க்கைமுறை மற்றும் பொழுதுபோக்கு மையமாகத் தனது பயணத்தைத் தொடர்கிறது. பாரம்பரியம், விருந்தோம்பல் மற்றும் உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களை ஒன்றிணைந்த ஒரு சிறந்த இடமாக இது மீண்டும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

Caltex Abimani Strengthens the Next...
STEM ක්ෂේත්රයේ අනාගත පරපුරේ කාන්තාවන්...
2026 මාර්තු මාසයේ සිට නවතම...
ආකර්ෂණීය රාත්‍රියක් සමඟින් සැබෑ රසයක්...
To reach US$8 billion, Sri...
UN Global Compact Network Sri...
Jazla Ismath Turns TikTok Into...
Samsung Sri Lanka Launches the...
UN Global Compact Network Sri...
Jazla Ismath Turns TikTok Into...
Samsung Sri Lanka Launches the...
2026 Effie සම්මාන උළෙලේදී හැටන්...