புகைப்பட தலைப்பு | உலக சுற்றுச்சூழல் தினத்தை உலக வர்த்தக மையத்தில் World Vision Lankaவுடன் இணைந்து கொண்டாடிய Coca-Cola அறக்கட்டளை

Share

Share

Share

Share

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2024 அன்று Coca-Cola அறக்கட்டளை மற்றும் World Vision Lanka நிறுவனம் ஆகியவை, கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் மூன்று புதிய Drop-in பிளாஸ்டிக் சேகரிப்பு வசதிகளை நிறுவின. ASPIRE திட்டத்தின் கீழ், இந்த நிகழ்வில் உலக வர்த்தக மையத்தின் முன்னால் திறப்பு விழாவும், PET பிளாஸ்டிக் போத்தல்களை தனியாக பிரித்தெடுத்து மீள்சுழற்சி செய்வதின் அவசியம் குறித்து சேகரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அறிவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட தகவல் விழிப்புணர்வு அமர்வுகளும் இடம்பெற்றன. மேலும், வீட்டில் இருந்து PET பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு வருமாறு அனைவரையும் ஊக்குவித்தன. இந்த ஒத்துழைப்பு, உலக வர்த்தக மையத்தில் சேகரிக்கப்படும் அனைத்து PET கழிவுகளும் முறையாக தனியே பிரிக்கப்பட்டு மீள்சுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்கிறது. உலக வர்த்தக மையத்தில் மூலோபாய முறையில் அமைக்கப்பட்டுள்ள 30 சேகரிப்பு நிலையங்கள் மூலம் PET சேகரிப்பை அதிகரிப்பதே ASPIRE திட்டத்தின் நோக்கமாகும். இந்த முயற்சி சமூகங்களை ஊக்குவிப்பதோடு, நிலையான கழிவு நிர்வகிப்பதையும் மேம்படுத்தி, திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்குகளை அடைய உதவுகிறது.

 

 

Eco Spindles සහ Green Earth...
අමලිය පූර්ව ඉගෙනුම් මධ්‍යස්ථානය, ශ්‍රවණාබාධිත...
International Healthcare Leader requests for...
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேச்சு மற்றும்...
TikTok Expands Tools to Help...
IHH Healthcare Singapore Advances Sri...
දිට්වා සුළි කුණාටුවෙන් පසු සම්බන්ධතා...
අයහපත් කාලගුණය හමුවේ විපතට පත්...
IHH Healthcare Singapore Advances Sri...
දිට්වා සුළි කුණාටුවෙන් පසු සම්බන්ධතා...
අයහපත් කාලගුණය හමුවේ විපතට පත්...
රටේ සිසු සිසුවියන්ගේ අධ්‍යාපන අවස්ථාවන්...