தமிழ் – சிங்கள சித்திரப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், Samsung Sri Lanka தனது அனைத்து வீட்டு மின்னணு சாதனங்களிலும் கவர்ச்சிகரமான விலைக்குறைப்புகளை வழங்கும் ‘Avurudu Wasi’ என்ற சிறப்பு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த குறிப்பிட்ட கால சலுகை மூலம், வாடிக்கையாளர்களுக்கு தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் மைக்ரோவேவ் அடுப்புகள் உள்ளிட்ட Samsung இன் மிகவும் பிரபலமான வீட்டு உபகரணங்களை சிறந்த விலையில் வாங்கும் அரிய வாய்ப்பைப் பெறலாம். இந்த சிறப்புச் சலுகைகள் Singer, Damro, Singhagiri, மற்றும் Softlogic உள்ளிட்ட முக்கிய விநியோகஸ்தர்களிடம் கிடைக்கும் என்பதால், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் எளிதாக இந்த சலுகைகளைப் பெற்று புதிய Samsung தொழில்நுட்பத்துடன் தங்கள் வீடுகளை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இலங்கையின் மிகப் பெரிய பண்டிகைக் காலத்தில் Samsung நிறுவனம் ‘Avurudu Wasi’ எனும் சிறப்பு சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் உயர்தர வீட்டு மின்னணு சாதனங்களை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது. விலை குறைப்பின் காரணமாக, வாடிக்கையாளர்கள் Samsung இன் புத்தாக்க தொழில்நுட்பம் மற்றும் உயர்தரமான பொருட்களை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும். சிறப்பு சலுகைகளில், ரூ. 229,999 விலையிலிருந்த Samsung இன் 43 அங்குல Crystal UHD தொலைக்காட்சி தற்போது ரூ. 199,999 க்கு கிடைக்கிறது, இது குறைந்த விலையில் அற்புதமான படத் தரத்தை வழங்குகிறது. முழு HD Smart தொலைக்காட்சியை தேடுபவர்கள் 43 அங்குல மாதிரியை ரூ. 159,999 க்குப் பதிலாக ரூ. 144,999 க்கு வாங்கலாம். நம்பகமான குளிர்சாதனப் பெட்டியைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு, முன்னர் ரூ. 159,999 விலையில் இருந்த 253L Double Door மாதிரி குளிர்சாதனப் பெட்டி தற்போது ரூ. 149,999 க்கு கிடைக்கிறது, மேலும், உயர்தர 624L side-by-side குளிர்சாதனப் பெட்டியின் விலை ரூ. 619,999 இலிருந்து ரூ. 574,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உயர்திறன் மற்றும் நீண்ட கால செயல்திறனுக்கு பெயர்பெற்ற Samsung சலவை இயந்திரங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. முன்பு ரூ. 114,999 விலையில் இருந்த 11 கிலோ top-loading சலவை இயந்திரம் தற்போது ரூ. 99,999 க்கு கிடைக்கிறது, அதேசமயம் 13 கிலோ top-loading மாதிரி ரூ. 124,999 இலிருந்து ரூ. 114,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ‘Avurudu Wasi’ சலுகைகள் Samsung மைக்ரோவேவ் அடுப்புகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன, 23L Solo மைக்ரோவேவ் அடுப்பு தற்போது ரூ. 44,999 க்குப் பதிலாக ரூ. 43,499 க்கு விற்கப்படுகிறது. மேலும், 28L Convection மைக்ரோவேவ் அடுப்பு ரூ. 74,999 இலிருந்து குறைக்கப்பட்டு ரூ. 69,999 க்கு கிடைக்கிறது. அத்துடன், அவர்கள் ரூ. 229,999 முதல் ஆரம்பிக்கும் புதிய அறை குளிரூட்டி வரிசையையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Samsung இன் சிறப்புக்கான புகழ் அதன் பல விருதுகள் மற்றும் துறைசார் அங்கீகாரங்களால் வலுப்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனம் தொடர்ந்து 19 ஆண்டுகளாக உலகின் நம்பர் 01 தொலைக்காட்சி உற்பத்தியாளராக இருந்து வருகிறது. இது காட்சி பொழுதுபோக்கு தொழில்நுட்பத்தில் அதன் தலைமைத்துவத்திற்கு சான்றாகும். இலங்கையில், Samsung தொடர்ந்து பல ஆண்டுகளாக People’s Youth Choice Brand of the Year (மக்களின் இளைஞர் விருப்பத் தேர்வு வர்த்தகநாமம்) விருதை வென்று விருப்பத்திற்குரிய வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தையில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், Samsung எண்ணற்ற முறைகள் LMD நிறுவனத்தின் மிகவும் விரும்பப்படும் வீட்டு உபகரணங்கள் வர்த்தகநாமமாகவும் பெயரிடப்பட்டது. இந்த சாதனைகள் இலங்கை வாடிக்கையாளர்கள் Samsung இன் தரம், நம்பகத்தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் வைத்திருக்கும் உறுதியான நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.
வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், Samsung Sri Lanka தொழில்துறையில் மிகவும் விரிவான உத்தரவாத திட்டங்களில் ஒன்றை தொடர்ந்து வழங்கி வருகிறது. Samsung குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒப்பற்ற 20 ஆண்டுகள் உத்தரவாதத்தைப் பெறுவார்கள். இது எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு மன நிம்மதியை உறுதி செய்கிறது. விற்பனைக்குப் பிந்தைய சேவைக்கான இந்த துறை முன்னணி உறுதிப்பாடு, தனது வாடிக்கையாளர்களுக்கு நீடித்த மதிப்பை வழங்குவதற்கான Samsung இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
‘Samsung Avurudu Wasi’ அவுருது வாசி விளம்பர சலுகை Singer, Damro, Singhagiri மற்றும் Softlogic உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை கிடைக்கும். இந்த கவர்ச்சிகரமான சலுகைகளைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள Samsung பங்குதார கடைக்குச் செல்லவோ அல்லது Online தளங்கள் மூலம் கிடைக்கும் தன்மையை சரிபார்க்கவோ ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தப் பண்டிகைக் காலத்தில் குறைந்த கையிருப்பு மற்றும் அதிக தேவை எதிர்பார்க்கப்படுவதால், சிறந்த சலுகைகளைப் பெறுவதற்கு முன்கூட்டியே தங்கள் கொள்வனவுகளை செய்யுமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Samsung Sri Lanka பற்றி
Samsung Sri Lanka என்பது வாடிக்கையாளர் மின்னணு சாதனங்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளில் உலகின் முன்னணி நிறுவனமான Samsung Sri Lanka இன் துணை நிறுவனமாகும். புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியின் மீதான அர்ப்பணிப்புடன், Samsung நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த தயாரிப்புகள் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.