லங்கா பிறீமியர் லீக் தொடரின் உலகளாவிய விரிவாக்கத்திற்காக 20 மில்லியன் டொலர் முதலீடு: IPG நிறுவனம் அறிவிப்பு

Share

Share

Share

Share

கொழும்பு, மே 1, 2026: எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிறீமியர் லீக் (LPL) தொடரின் 6ஆவது அத்தியாயத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, லங்கா பிறீமியர் லீக் தொடரின் நிகழ்ச்சி உரிமைகள் பங்குதாரரான Innovative Production Group (IPG) நிறுவனம், மற்றுமொரு பாரிய முதலீட்டு வாய்ப்பை அண்மையில் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நாஸ்டாக் (Nasdaq) பங்குச் சந்தையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றுடன் மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் இந்த முதலீடு கிடைத்துள்ளது. இதன்கீழ், இந்த ஆண்டு லங்கா பிறீமியர் லீக் தொடருக்காக பல மில்லியன் டொலர் முதலீட்டைப் பெற்றுக்கொள்ளவும், அதன் நிதி வலிமையை அதிகரிக்கவும் IPG நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.

அதன்படி, IPG நிறுவனம், Flash Sports & Media நிறுவனத்துடனான தனது மூலோபாய பங்குகள் பரிமாற்ற இணைப்பை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் லங்கா பிறீயியர் லீக் உள்ளிட்ட தனது T20 லீக் வணிக உரிமைகளை, NASDAQ பங்குச் சந்தையில் பதிவு செய்யபப்பட்டுள்ள UGRO (NASDAQ: UGRO) எனும் பொதுப் பங்குச் சந்தை தளத்தின் கீழ் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டு ஒத்துழைப்பின் மூலம், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் லங்கா பிறீமியர் லீக் தொடரை தற்போதைய நிலையை விட முன்னிலைக்கு கொண்டு செல்லவும், அதிக இரசிகர்களை ஈர்க்கவும் IPG குழுமம் எதிர்பார்க்கிறது. இதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய IPG நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

லங்கா பிறீமியர் லீக் தொடரில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, மிகவும் முறையான மற்றும் வளர்ச்சியை நோக்கிய ஒரு புதிய பரிமாணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. லங்கா பிறீமியர் லீக் தொடரின் தொடரின் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடமே இருக்கும் அதேவேளை, அதன் பிரத்தியேக வர்த்தக மற்றும் ஊடக உரிமைகளை IPG நிறுவனம் தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளது. நிறுவன ரீதியிலான மூலதனம், மேம்படுத்தப்பட்ட நிர்வாகத் தரநிலைகள் மற்றும் நீண்ட கால விரிவாக்கத் திட்டமிடல் ஆகியவற்றுடன் இந்தத் தொடர் தற்போது புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது.’

இது குறித்து IPG நிறுவனத்தின் தலைவர் அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், “இப்புதிய பரிணாம வளர்ச்சியினால் லங்கா பிறீமியர் லீக் தொடரே மிகப்பெரிய நன்மையைப் பெறவுள்ளது. பொது நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இந்தத் தொடர் ஒருங்கிணைக்கப்படுவது, இதனைப் பொறுப்பான முறையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான எமது ஆற்றலை மேலும் வலுப்படுத்துகிறது. மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை, மூலதன வசதிகள் மற்றும் உயரிய நிர்வாகத் தரநிலைகள் ஊடாக, நீண்ட கால வணிக ரீதியான ஒழுக்கத்தைப் பேணுவதன் மூலம் அணிகளின் (Franchise) சந்தை மதிப்பை உயர்த்துவதற்கு நாம் தற்போது வலுவான நிலையில் உள்ளோம்.” என்றார்.

லங்கா பிறீமியர் லீக் தொடருக்கு மேலதிகமாக, மலேசியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் T20 லீக் தொடர்களை ஏற்பாடு செய்யும் உரிமையையும் IPG நிறுவனம் கொண்டுள்ளது. IPG மற்றும் அதன் முதலீட்டாளர்கள் இந்த புதிய லீக் தொடர்களிலும் தமது விரிவாக்கத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதோடு, இத்தகைய வளரும் கிரிக்கெட் சந்தைகளில் தங்களது செயல்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது தனித்தனியாக நடத்தப்படும் லீக் தொடர்களை ஒருங்கிணைத்து, தெற்காசியா மற்றும் ஏனைய வளர்ந்து வரும் பிராந்தியங்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த சர்வதேச கிரிக்கெட் வர்த்தக வலையமைப்பாக இதனை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதுதொடர்பில் Flash Sports & Media நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிராட்லி நாட்ராஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஒருங்கிணைப்பானது, ஒரே நேரத்தில் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் பொருளாதாரங்களில் எமது திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான திறனை துரிதப்படுத்தும் என நாம் நம்புகிறோம். மையப்படுத்தப்பட்ட வர்த்தகக் கட்டுப்பாடு மற்றும் அணிகளுக்கான ஊக்கத்தொகைகளை சீரமைப்பதன் ஊடாக, அனுசரணையாளர்களின் ஆழமான பங்களிப்பு, வலுவான ஒளிபரப்பு கூட்டாண்மைகள் மற்றும் பல்வேறு சந்தைகளில் ரசிகர்களின் மேலதிக ஈடுபாடு ஆகியவற்றை ஏற்படுத்த நாம் உத்தேசித்துள்ளோம். எமது தற்போதைய கவனம், செயல்பாடுகளைத் துரிதமாகவும் துல்லியமாகவும் முன்னெடுப்பதிலும், நீண்ட கால அடிப்படையில் பங்குதாரர்களின் மதிப்பை உருவாக்குவதிலுமே உள்ளது,” என்றார்.

Flash Sports & Media நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எரிக் ஷெர்ப் இது குறித்து மேலும் கூறுகையில், “பொதுச் சந்தைக் கட்டமைப்பானது, முதலீட்டின் மீதான வருமானம் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளைப் பேணிக்கொண்டே, லீக் உட்கட்டமைப்புகளில் கட்டம் கட்டமாக மூலதனத்தை முதலீடு செய்ய எமக்கு வழிவகுக்கிறது. நீண்ட கால வணிக வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும், எமது அனைத்து வணிகப் பிரிவுகளிலும் நிலையான வருவமானம் ஈட்டும் வழிமுறைகளை உருவாக்குவதிலுமே நாம் அதிக கவனம் செலுத்துவோம்.” என்றார்.

வணிக ரீதியான வருமானம் ஈட்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதே இதன் பிரதான இலக்காகும். நீண்ட கால அடிப்படையில் சொத்துக்களின் மதிப்பை உயர்த்துதல், பல்வேறு லீக் தொடர்களுக்கு இடையிலான அனுசரணை வருவாயை மையப்படுத்துதல், ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தை 4K தரத்திற்கு உயர்த்துதல் மற்றும் நிலையான வருமானம் ஈட்டும் வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தப்படும் என IPG நிறுவனம் அறிவித்துள்ளது.

2026 One Love Reggae සංගීත...
Galle Gallants කණ්ඩායමේ හිමිකාරීත්වය Gallant...
Sampath Bank unveils ‘Mastercard Business...
DIMO හි ලොව පිළිගත් බර...
25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில்,...
Winners of 10th Huawei ICT...
Prime Lands Residencies PLC සමාගමේ...
‘43 by the Sea’ officially...
Winners of 10th Huawei ICT...
Prime Lands Residencies PLC සමාගමේ...
‘43 by the Sea’ officially...
Janashakthi Finance AFBU sets the...