வடக்கிலும் கால்பதித்தது BYD: விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் வசதியுடன் BYD இன் புதிய ‘3S’ சேவை மையம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

Share

Share

Share

Share

இலங்கையின் புதிய சக்தி வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாகவும், உலகின் முன்னணி புதிய சக்தி வாகன உற்பத்தியாளராகவும் திகழும் BYD நிறுவனம், அதன் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய 3S சேவை மையத்தை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் வட மாகாணத்தில் விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் ஆகிய மூன்றையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒரேயொரு புதிய சக்தி வாகன வர்த்தக நாமமாக BYD உருவெடுத்துள்ளது.

இலக்கம் 7, அரியாலை கிழக்கு வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த உத்தியோகபூர்வ BYD காட்சியறை, முழுமையான வாகனக் கொள்வனவு மற்றும் பராமரிப்பு அனுபவத்தை ஒரே இடத்தில் வழங்குகிறது. இக்காட்சியறையில் ATTO 1, ATTO 2, DOLPHIN, SEALION 6, SEALION 5, SEALION 8, RACCO மற்றும் SHARK 6 ஆகிய BYD இன் நவீன புதிய சக்தி வாகன மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், முழுமையான வசதிகளுடன் கூடிய சேவை மையம் மற்றும் அசல் உதிரிப் பாகங்களுக்கான பிரத்தியேகப் பிரிவும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.

BYD இன் யாழ்ப்பாண காட்சியறையானது, A9 Motors நிறுவனத்துடனான கூட்டாண்மையின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வாகனத்துறையில் நீண்டகால அனுபவமும், வலுவான சந்தை நம்பிக்கையும் கொண்ட A9 Motors நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. குவைத் தெய்வேந்திரன் அவர்களின் தலைமையில், வட மாகாணம் முழுவதும் BYD இன் சேவைகளை விரிவுபடுத்தவும் வாடிக்கையாளர் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து A9 Motors பணிப்பாளர் திரு. குவைத் தெய்வேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண வாடிக்கையாளர்கள் அதிகளவில் புதிய சக்தி வாகனங்களை நோக்கி அதிகளவில் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் தமது சொந்த நகரத்திலேயே விற்பனை, சேவை மற்றும் அசல் உதிரிப்பாகங்களின் நம்பிக்கையான சேவையை எதிர்பார்க்கின்றனர். எனவே, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு விநியோகஸ்தர் என்ற வகையில், இந்த பொறுப்பை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். வடக்கில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், வணிக நிறுவனத்திற்கும் BYD வாகன உரிமையை எளிதானதாகவும், கவலையற்றதாகவும் மாற்றுவதும், BYD வாகனங்களை நம்பகமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதுமே எமது பிரதான நோக்கமாகும்.” எனக் குறிப்பிட்டார்.

இலங்கை முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தும் JKCG Auto நிறுவனத்தின் பயணத்தில் இந்த திறப்பு விழா மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். இதன் மூலம் நாட்டின் ஏனைய பகுதி வாடிக்கையாளர்களுக்கு இணையான உயர் தரத்திலான வாகனக் கொள்வனவு, பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவையை வட பகுதி வாடிக்கையாளர்களுக்கும் தடையின்றி வழங்குவதை இந்நிறுவனம் உறுதி செய்கிறது.

இங்குள்ள சேவை மையத்தில், BYD இன் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலமாக சேவைகள் வழங்கப்படுகின்றன. புதிய சக்தி வாகன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற அதிநவீன பரிசோதனை உபகரணங்கள், அசல் உதிரிப்பாகங்கள், வெளிப்படையான பராமரிப்புச் சேவை மற்றும் விரைவான விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவை மூலம் புதிய சக்தி வாகனங்களை நோக்கிப் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நம்பிக்கை அளிக்கப்படுகிறது.

இப்புதிய காட்சியறை தொடர்பில் JKCG Auto நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரட்ன கருத்து தெரிவிக்கையில், ‘இது BYD மற்றும் JKCG Auto ஆகிய இரு நிறுவனங்களுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுமொத்த வட மாகாண மக்களும் விரைவான வளர்ச்சியையும் உயரிய எதிர்பார்ப்புகளையும் கொண்டவர்கள். அவர்களுக்கு நம்பிக்கையான சேவையை அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே வழங்க வேண்டியது எமது கடமையாகும். எமது 3S சேவை மையமானது உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு BYD வாகனங்களை நேரில் அனுபவித்து, சொந்தமாக்கி, பராமரிப்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட மையமாக அமைவதுடன், யாழ்ப்பாண மக்களுடனான எங்களின் நீண்டகால உறவின் தொடக்கமாகவும் அமைகிறது. வடக்கில் உள்ள குடும்பங்களும், வணிகங்களும் சுற்றுச்சூழல் நட்பு வாகனங்களை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று கூறினார்.

JKCG Auto மற்றும் அதன் விநியோகப் பங்காளர்களுடன் இணைந்து BYD நிறுவனம் இலங்கையில் தனது வாகன வரிசை, சார்ஜிங் உட்கட்டமைப்பு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், யாழ்ப்பாண காட்சியறையின் திறப்பு விழா அதன் வலுவான வளர்ச்சியையும், சந்தை பலத்தையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

TikTok launches redesigned Family Pairing...
2026 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும்...
Doc990 தளத்தில் மூலோபாய முதலீட்டை மேற்கொண்டு,...
2027ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 24.4%...
வடக்கிலும் கால்பதித்தது BYD: விற்பனை, சேவை...
Atlas Axillia වෙතින්, ශ්‍රී ලංකාවේ...
‘Exporters’ Forum 2026’ හරහා ශ්‍රී...
இலங்கையின் படைப்பாற்றல் கல்வியில் 21 ஆண்டுகளை...
Atlas Axillia වෙතින්, ශ්‍රී ලංකාවේ...
‘Exporters’ Forum 2026’ හරහා ශ්‍රී...
இலங்கையின் படைப்பாற்றல் கல்வியில் 21 ஆண்டுகளை...
Geoffrey Bawa Moonamal Award Convenes...